புகைப்பட ஹைக்கூ 39

புகைப்பட ஹைக்கூ

     


    வயல் வரப்பில்
    வந்து நிற்குது
     வாண்டுகள்ரயில்!

    புகை இல்லா வண்டி
    பகை இல்லா வண்டி
    பறக்குது வயலிலே!

      சிற்றூரில் நிற்கும்
      சிறுவர்
     எக்ஸ்பிரஸ்!

     மறைந்து போனவைகளை
     திரும்ப கொண்டுவந்தது
     மழலைகள் விளையாட்டு!

      பெட்டிகள் இணைய
      தேவை
      சுட்டிகள் மட்டுமே!

      காசில்லா ரயில்
      மாசில்லா ரயில்
      மழலைகளில் ரயில்!

      நிரம்பி வழிந்தது
      ரயில்
      மழலைகளின் மகிழ்ச்சி!

       இணைத்தது நட்பு
       இரயில் வண்டி
       உதயம்!

       தண்டவாளம் இல்லை
       தடம்புரளவில்லை!
       மழலைகளில் ரயில்!

       பெட்டியும் அவனே
        பயணியும் அவனே!
        சுட்டிகள் ரயில்!

       தொடர்வண்டியில்
        தொடங்குகிறது நட்பு!
         சுட்டிகள் ரயில்!

        நகரப் பிள்ளைகளை
        நுகரா இன்பம்
        பிள்ளைகள் ரயில்!

        பொங்கும் இன்பத்தில்
        இயங்கும்
        ரயில்!

        வடம் பிடித்தால்
        இடம்!
        பிள்ளைகள் ரயில்!

       நினைவுகளை
       பின்னோக்கி செலுத்தியது
        பிள்ளைகள் ரயில்!

         ஓடுபாதையின்றி
         ஒழுங்காய் ஓட்டம்!
         பிள்ளைகள் ரயில்!

         தடம்புரளா ரயில்
         இடம் பிடித்தது
         எல்லோர் மனதிலும்!


   தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. // தடம்புரளா ரயில்
  இடம் பிடித்தது
  எல்லோர் மனதிலும்! //

  இப்படி விளையாண்டு எத்தனை நாள் ஆச்சு... அந்தநாள் ஞாபகம்

  ReplyDelete
  Replies
  1. முதல் நபராய் வந்து கருத்திட்டு ஊக்கப்படுத்தியமைக்கு நன்றி நண்பரே!

   Delete
 2. பால்ய காலத்தை தூண்டி நியாபகப் படுத்திட்டீங்க....!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2