கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 4

 ஜோக்ஸ்!


1.         என் மனைவி புடவை எடுக்கணும்னு மூணுநாளா ஊரெல்லாம் சுத்தி…
ஒரு புடவையை செலக்ட் பண்ணிட்டாங்களா?
ஒரு கடையை செலக்ட் பண்ணியிருக்கா!

2.         எங்க தலைவரை யாரும் கிட்ட நெருங்க முடியாது!
      அவ்வளோ பாதுகாப்பா?
   இல்ல அவ்ளோ கப்பு!

3.         தலைவரே! நம்ம கட்சியோட வாக்கு வங்கி சரிஞ்சி போயிருச்சு!
நல்ல சிமெண்ட் போட்டு நிமிர்த்தி கட்டி முடிங்க!

4.         நம்ம தலைவர் வெற்றியையும் தோல்வியையும் சகஜமா எடுத்துப்பார்!
அதுக்காக தோல்விவிழா கொண்டாடச் சொல்றதெல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு!

5.         தலைவர் எதுக்கு தேங்காய் மூடியோட கோர்ட்டுக்கு போறார்?
யாரோ துறுவித் துறுவி கேள்வி கேட்பாங்கன்னு சொன்னாங்களாம்!


6.         உடல் இளைக்கணும்னு  ஜிம்முக்கு போனியே என்ன ஆச்சு?
பேங்க் பேலன்ஸ் இளைச்சிருச்சு!

7.         மாமூல் வாழ்க்கை பாதிச்சிருச்சுன்னு ஏட்டு புலம்பிட்டு இருக்காரே எந்த இடத்துல?
நீ வேற அவரை டிரான்ஸ்பர் பண்ணிட்டதாலே வரவேண்டிய மாமூல் குறைஞ்சிருச்சுன்னு சொல்லிக்கிட்டு இருக்கார்.

8.         தலைவர் எதுக்கு இப்ப திடீர்னு உண்ணாவிரதம் இருக்கறார்?
திடீர்னு நல்ல பிரியாணி சாப்பிடனும்னு ஆசை வந்துருச்சாம்!

9.         மாமியாரை ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்குன்னு தகவல் வந்ததும் பதறி அடிச்சு ஓடினியே அவ்வளவு பாசமா?
     நீ வேற ஹாஸ்பிடல் பில் ஏறிடப் போவுத்துன்னுதான்!

10.     புடவையை அயர்ன் பண்ணும் போது லேசா தீஞ்சு போச்சு!
அப்புறம்!
புதுப்புடவை வாங்கிகொடுத்து சமாளிக்கிறதுல என் பர்ஸ் தீர்ந்து போச்சு!

11.     சுயம்வரத்தில் கலந்து கொண்ட மன்னர் வில்லை ஒடித்தாரா?
பல்லைத்தான் ஒடித்துக் கொண்டார்!


12.     குடிச்சிட்டு ஆட்டோ ஓட்டிறீயே தப்பு இல்லே?
நீங்கதானே கண்டிப்பா மீட்டர் போட்டுட்டு ஆட்டோ ஓட்டணும்னு சொல்லியிருக்கீங்க!

13.     கண்ணே காலம் பூராவும் நாம் இப்படியே காதலித்துக் கொண்டிருக்கலாமே!
எனக்கு கல்யாணம் ஆனபிறகும் உங்களை காதலிச்சிட்டு இருக்கிறது தப்பில்லையாங்க!

14.     கண்ணே நம் காதல் எதிரிகளை ஒருவழி பண்ணிவிடுகிறேன்!
முதல்ல சுண்டல் பாக்கிக்கு ஒரு வழி பண்ணுங்க!

15.     மன்னர் எதற்கு மக்களின் எடைகளை கேட்டுக்கொண்டு இருக்கிறார்?
மக்களோட பலத்தை அறிய விரும்புகிறாராம்!

16.      ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிச்சதை தலைவர் தப்பா புரிஞ்சிக்கிட்டார்!
அப்புறம்!
முரட்டுக்காளைக்கும் தடைவிதிக்கணும்னு அறிக்கை விட்டுருக்கார்!



17.     புலவர்கள் ஏன் இப்படி தலை தெறிக்க ஓடுகிறார்கள்!
குத்து பாட்டு எழுதும்படி மன்னர் நச்சரிக்கிறாராம்!


18.     மூணு நாளா சரியாத் தூங்கலைன்னு சொல்றீங்களே! ஏதாவது பிரச்சனையா?
அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க! மூணுநாளா நான் ஆபிசுக்கு லீவு!

19.     எங்க கட்சி தலைவர் இப்ப தள்ளாடிக்கிட்டு இருக்கார்!
எங்க தலைவர் எப்பவுமே தள்ளாடிக்கிட்டுதான் இருப்பார்!

20.     என்னப்பா சர்வர் இவ்வளவு லேட்டா கொண்டுவரே?
      நீங்கதானே சார் மெது வடை கொண்டுவான்னு சொன்னீங்க!

21.     மன்னர் அசகாய சூரராமே வாள் வீச்சிலே வேல் வீச்சிலா?

   வெறும் பேச்சில்!

22.     தலைவர் தண்ணி அடிக்கிறது மக்களுக்கு தெரிஞ்சு போச்சு போல!
தேர்தல்ல மக்கள் தண்ணி காமிச்சுட்டாங்களே!

23. தலைவருக்கு புத்தி தடுமாறிப் போச்சு!
   எப்படி சொல்றே?
  பெருவாரியான மக்கள் நோட்டாவுக்கு ஆதரவு தந்திருப்பதால் நோட்டாவை ஆட்சி அமைக்க அழைக்கணும்னு அறிக்கை விட்டிருக்காரே!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. அருமையான நகைச்சுவை துணுக்குகள்!

    ReplyDelete
  2. சுவையான நகைச்சுவை! :)

    ரசித்தேன்....

    ReplyDelete
  3. அனைத்தும் நல்ல நகைச்சுவை தான்.
    புடவை கடையை தேர்ந்தெடுப்பதற்கே மூன்று நாளா, அப்ப புடவையை தேர்ந்தெடுப்பதற்கு எத்தனை நாள் ஆகுமோ!!!!

    ReplyDelete
  4. ஒவ்வொன்றும் அருமை
    ரசித்தேன்
    சுவைத்தேன்
    நன்றி நண்பரே

    ReplyDelete
  5. ரசித்தேன் அருமை அருமை ....!

    ReplyDelete
  6. குத்து பாட்டு எழுத தெரியலயேன்னு குத்து விட்டு விரட்டி விட்டாரோ அரசர் ?
    நன்றி

    ReplyDelete
  7. எல்லாமே அருமை. ரசித்தேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2