கொஞ்சம் சிரிங்க பாஸ்! ஜோக்ஸ்!

ஜோக்ஸ்!


1.      செருப்புக் கடிச்சதுன்னு டாக்டர் கிட்ட போனியே என்ன ஆச்சு?
இப்ப என் பர்ஸ் கடிச்சிருச்சு!

2.      அந்த டாக்டர் எதையும் டெஸ்ட் பண்ணாம மருந்து கொடுக்க மாட்டார்!
அதுக்காக என் பர்ஸ்ல பணம் இருக்கான்னு டெஸ்ட் பண்ணி பார்க்கிறதெல்லாம் ஓவர்!

3.      கல்யாணத்துல ஜோடி மாறிப்போச்சுன்னு சொன்னியே அப்புறம் என்ன ஆச்சு?
நல்ல வேளை யாரும் கவனிக்கிறதுக்கு முன்னாடி நல்ல ஜோடிச்செருப்பா போட்டுக்கிட்டு வந்துட்டேன்!

4.      மாப்பிள்ளை அதிக வரதட்சணை கேக்கறாராமே ஏன்?
அவங்க ஊர்ல பவர்கட்டே கிடையாதாம்!

5.      தலைவர் தேர்தல்ல தோத்தும் அசரலை!
எப்படி சொல்றே?
 தோற்கவைத்து என்னை தொகுதியில் தக்கவைத்துக்கொண்ட வாக்காள பெருமக்களுக்கு நன்றின்னு பேனர் வெச்சிருக்கிறாரே!


6.      புது மானேஜர் ரொம்ப ஸ்ட்ரிக்டாமே?
ஆமாம்  ஒரு நாளைக்கு பேஸ்புக்ல அஞ்சு ஸ்டேட்டஸுக்கு மேல போடக்கூடாதுன்னு ஸ்ட்ரிக்டா ஆர்டர் போட்டுட்டாரு!

7.      தலைவர் இப்படி உளறுவார்னு எதிர்பார்க்கலை!
ஏன் என்ன ஆச்சு?
நாங்க ஜெயித்தால் கிருஷ்ணா நதிநீர் திட்டம் போல ராமர் நதி திட்டம் கொண்டுவருவோம்னு அறிக்கை விட்டிருக்கார்.

8.      சிக்கனமா படம் எடுத்தா சென்சார்ல தடை பண்ணிட்டாங்களா? ஏன்?
காஸ்ட்யூமே இல்லாம எடுத்தோம்!

9.      அந்த அரசியல்வாதி தன்னோட பொண்ணுக்கு அந்த வரனை ஏன் வேணாம்னு சொல்லிட்டார்?
மாப்பிள்ளை பையன் ஐ.டி யிலே இருக்கார்னு சொன்னதும் பயந்திட்டாராம்.

10.  மன்னர் ஏன் காலை நீரில் நனைத்து ஆறவிட்டு பின் நடந்து செல்கிறார்?
காலாற நடக்க வேண்டும் என்று வைத்தியர் சொன்னாராம்!

11.  வில்லன் ஹீரோயினை கடத்தி ஒரு ரூம்ல தள்ளி ரேப் பண்றப்ப தீடீர்னு கரண்ட் போயிருது இருட்டா ஆயிருச்சு…
    அப்புறம் ஹீரோயின் தப்பிச்சாளா இல்லையா?
யாருக்குத் தெரியும் அதான் கரண்ட் போயிருச்சே!

12.  தலைவர் ஏன் ஓட்டுச்சாவடியிலே போன் பண்ணி பிரச்சனையிலே சிக்கிக்கிட்டார்?
யாரோ லைன்ல வாங்க தலைவரேன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டிருக்கார்!

13.  கட்சிப்பணத்தை ஏன் எடுத்தீங்கன்னு தலைவரை கேட்டா என்ன சொன்னார்?
வீட்டையும் கட்சியையும் அவர் பிரிச்சுப்பார்க்க விரும்பலையாம்!


14.  அவரு போலி டாக்டருன்னு எப்படி சொல்றே?
காலிலே ஆணின்னு போனதுக்கு கொறடா எடுத்து பிடுங்க வராரே!

15.  என் மனைவிக்கு என்னை சமைக்கவிடவே பிடிக்காது!
பலே!
 அட போங்க சார்! தினமும் ஹோட்டல்ல விதம் விதமா வாங்கி வரச்சொல்லுவா!

16.  ராணியாருக்கு மன்னர் மேல் என்ன கோபம்?
அரண்மனை சேடிப்பெண்களோடு அடிக்கடி கண்ணா மூச்சி ஆடுவதை யாரோ போட்டுக்கொடுத்துவிட்டார்களாம்!

17.  தலைவர் எதுக்கு திடீர்னு டீக்கடை ஆரம்பிக்கணும்னு சொல்றாரு!
டீ வித்தா பிரதமர் ஆயிரலாம்னு யாரோ சொன்னாங்களாம்!

18.  தலைவர் பழசை இன்னும் மறக்கலை!
எப்படி சொல்றே?
ஓட்டுப்போட போன இடத்திலே மைப்புட்டியை ஆட்டைய போட்டுட்டு வந்திட்டாரே!


19.  மன்னா! எதிரி நாட்டு மன்னன் நீங்கள்தூதனுப்பிய புறாக்களை  சமைத்து சாப்பிட்டு விட்டானாம்!
அட அல்ப பயல்! எனக்கு ஒரு பார்சல் கூடவா அனுப்பாமல் விட்டுவிட்டான்!

20.  ஓட்டுசதவீதம் அதிகரிச்சுதுன்றதை தலைவர் தப்பா புரிஞ்சிக்கிட்டார்!
அப்புறம்?
 நாங்க ஆட்சிக்கு வந்தால் ஓட்டு சதவீதத்தை கட்டுப்படுத்துவோம் அறிக்கை விட்டிருக்காரு!

21. உங்க பையனுக்கு கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்கா?
  எப்படி சொல்றீங்க?
 கிச்சன்ல மும்முரமா வேலைசெஞ்சிக்கிட்டுருக்கானே!

22. எதுக்கு பத்து நாள் மெடிக்கல் லீவ் கேட்கறீங்க?
   பகல்ல தூங்க கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரே!

23.  சில்லறை தட்டுப்பாட்டை போக்கறதுக்கு முயற்சி செஞ்சதுக்கு ஜெயில்ல போட்டுட்டாங்க!
   என்ன பண்ணே?
 கோயில் உண்டியலை உடைச்சேன்!  தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!  

Comments

 1. அத்தனையும் நன்றாக இருந்தன ரசித்து சிரித்தேன்.

  ReplyDelete
 2. ஹா ஹா.. எல்லாமே சூப்பர்..

  ReplyDelete
 3. நிறைய தலைவர்கள் வீட்டையும் கட்சியையும் பிரித்துப் பார்ப்பதில்லைதான்
  அனைத்தும் அருமை நண்பரே

  ReplyDelete
 4. #டீ வித்தா பிரதமர் ஆயிரலாம்னு யாரோ சொன்னாங்களாம்!#
  உண்மைதான் ,நாம டீ விற்ற cm யை பார்த்துட்டோம் ,pmயைப் பார்க்கபோறோமே!

  ReplyDelete
 5. அத்தனையும் ரசித்தேன்....

  ReplyDelete
 6. 8 - A கிளாஸ் ஜோக் போல!

  12 ஹா..ஹா.. சிரஞ்சீவி இல்லையே...!

  ReplyDelete
 7. அத்தனையும் ரசித்தேன்....

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!