பா(ர்)வைச் சுழல்!

  பா(ர்)வைச் சுழல்!



உன் விழிகள் பேசுகையில்
மொழி இழந்து நிற்கிறேன்!
உள்ளத்துக் கிடக்கையெல்லாம்
உன் முன்னே கொட்ட நினைக்கையில்
உடும்பாய் பிடித்துக்கொண்டு
உழள மறுக்கின்றது நாக்கு!
உன் பார்வைச்சுழலில்
புயலில் சிக்கிய கட்டுமரமாக அலைபாய்கிறது மனசு!
வேலாய் குத்தும் உன் விழிகளில் சிக்கி
மானாக மருங்கி நிற்கின்றேன்!
கனவில் உன்னோடு குடித்தனம் நடத்துகையில்
விடியல் வேதனையாக வந்து எழுப்புகிறது!
சாலையில் நீ நடந்து செல்கையில்
வேலையில் ஓட மறுக்கிறது நினைவு!
ஓடையில் குளிக்கையிலே உள்ளங்காலை
பறிக்கும் மீன்போல
உன் ஒவ்வொரு அசைவும் என்
உள்ளத்தை பறிக்கிறது!

உன் கொலுசொலிகள் தேய்ந்து போகையில்
என் மன ஆசைகள் உடைந்து போகின்றது!
உனக்கென்ன ஓராயிரம் பார்வைகளை
வீசிச்சென்றுவிடுகிறாய்!
சுமக்க முடியாமல் தவிக்கின்றேன் நான்!
உன்னையே சுற்றி சுற்றி வந்தாலும்
களைப்படைய மறுக்கிறது மனசு!
கோடை மழையாய் வந்தவளே!
என் மன ஓடையில் நிரம்பிவிட்டாய்!
என்றும் என்னை குளிர்விக்க
என் வாழ்வில் இடம்பிடிப்பாயா?

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



Comments

  1. அருமை தோழர் தொடர்க
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. என்றும் என்னை குளிர்விக்க
    என் வாழ்வில் இடம்பிடிப்பாயா?
    >>
    வூட்டம்மாவுக்குத் தெரியுமா!?

    ReplyDelete
  3. சாமீஈஈஈ கடைசி சில வாரமா உங்க போக்கு சரி இல்லையே சாமீஈஈஈ :-))

    ReplyDelete
  4. //உனக்கென்ன ஓராயிரம் பார்வைகளை
    வீசிச்சென்றுவிடுகிறாய்!
    சுமக்க முடியாமல் தவிக்கின்றேன் நான்!
    உன்னையே சுற்றி சுற்றி வந்தாலும்
    களைப்படைய மறுக்கிறது மனசு!
    கோடை மழையாய் வந்தவளே!
    என் மன ஓடையில் நிரம்பிவிட்டாய்!
    என்றும் என்னை குளிர்விக்க
    என் வாழ்வில் இடம்பிடிப்பாயா?//

    காதல் கனிரசம் இனிமையாகச் சொட்டுகின்றது! அருமை நண்பரே!

    ReplyDelete
  5. ஓஹோ...

    அருமை... ரசித்தேன்....

    ReplyDelete
  6. சகோ...
    லயித்தேன்
    வரிகளில் ...

    ReplyDelete
  7. யாரை நினைத்து எழுதின கவிதை இது????

    கவிதையை ரசித்தேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2