புகைப்பட ஹைக்கூ 74

புகைப்பட ஹைக்கூ 74


பாடச்சுமையை விட
பெரிதானது!
பாசச்சுமை!

படிப்பவர்களை
பார்க்கையில்
பாரமாகிறது மனசு!

கலைந்த கனவை
தேடுகிறாள்
சாலையில்!

வாழ்க்கையை ஓட்ட
இழுக்கிறாள்
வண்டி!

தள்ளிப்போனது கல்வி!
எட்டிப்பார்த்தது
வறுமை!

பாதை ஒன்றுதான்
பயணம்
எதிரெதிர்பாதைகளில்!

ஏங்கும் பிள்ளைகள்!
இறங்கிவராத
கல்வி!

பார்வைகள் ஒன்று!
ஏக்கம் மட்டும்
இரண்டு!

வறுமையை துரத்த
விரட்டப்பட்டது
கல்வி!

மிதிபட்டதால்
தள்ளப்படுகிறது
கல்வி!

வண்டி ஓட்டுகையில்
வாழ்க்கையும் சேர்த்து
ஓட்டுகிறாள்!

தடம் மாறிய பயணம்
தடுமாறுகிறது
ஒரு கணம்!

ஏழ்மை சுகமானதால்
சுமையாகிப்போனது
ஏடு!

அனைவருக்கும் கல்வி!
இயக்கங்களின் தோல்வி!
இளிக்குதுங்கே  சொல்லி!

எட்டாக்கனியினை
ஏக்கமுடன் பார்க்கும்

பிஞ்சுகள்!

சிலருக்கு நினைவாகிறது
பலருக்கு வெறும் கனவாகிறது
கல்வி!

கரை சேரப்பயணிக்கின்றன
கலங்கள்!
களங்கள் மாறி!

மிதிபட்டது வண்டி
வலிபட்டது
மனசு!

எல்லோருக்கும் கல்வி!
எள்ளி நகையாடுது துள்ளி!
என்று திறக்குமோ இவர்களுக்கு பள்ளி?

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. ஏழைக் குழந்தைகளின் கல்விக் கனவை அழகாக சித்தரித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. வணக்கம்

  அழகிய கவிதை ரசிக்கவைக்கும் வரிகள் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. படமும் பாடலும் அருமை தளிர்.

  ReplyDelete
 4. படம் ஒன்றே ஆயிரம் கவிதைகளைக் கூறுகிறது நண்பரே
  நன்றி

  ReplyDelete
 5. ஒவ்வொன்றும் சிறப்பான வரிகள் வாழ்த்துக்கள் சகோதரா .

  ReplyDelete
 6. வேதனை தெறித்த வரிகள் ...

  ReplyDelete

 7. வணக்கம்!

  கல்வியை எண்ணிக் கணித்த எழுத்தெல்லொம்
  சொல்லச் சுரக்கும் சுவை!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கமபன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 8. அனைவருக்கும் கல்வி....

  இன்னமும் ஒரு கனவாகவே....:(((

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா?