மேகத்தில் ஒளிகின்ற நிலவு!

மேகத்தில் ஒளிகின்ற நிலவு!


 காற்றிலே கலைந்து முகத்திலே மோதி
 முன்னே வந்துவிழும் ஒற்றைக் கூந்தலை
  நீ கோதிக் கொள்கையில்
  கலைந்து போகிறது மனசு!

 நீண்ட நாளுக்குப் பின் பெய்யும் மழையாய்
 உன் வருகைக்கு காத்திருக்கையில்
 சிறு தூறலாய் தூவிவிட்டு மண்வாசனை
 கிளப்பிச்செல்வது போல உன் யோசனைக்
 கிளப்பிச்செல்கிறாய்!

 நீ வருகிறாய் என்றதும் பூச்செடிகள் கூட
 கொஞ்சம் முன்னதாக பூப்பதற்கு ஆசைப்பட்டு
 இதழ் விரித்தன. ஆனால் நீயோ
 உன் செவ்விதழை திறக்காமல் மவுனமானாய்!

 வண்ணத்துப்பூச்சி போல சிறகடித்துக்கொண்டிருந்த
 என் எண்ணங்களை கூட்டுப்புழுவாய் கட்டுப்படுத்தி
 உன்னையே நினைக்க வைத்தாய்!
 அன்றொருநாள் அங்காடியொன்றில்
 உருகாத பனிக்கூழோடு நீ போராடுகையில்
 உருகி  கரைகின்றேன் உனக்காக


 நீ வந்து விட்டு சென்ற வாசம் கலையாமலிருக்க
 கதவை அடைத்து காவல் காக்கின்றேன்!
 காற்றோடு வாசம் கலந்து மறைந்து போனதுபோல
 கண்ணா மூச்சி காட்டுகிறாய்!

 நிலவை அணைக்கும் மேகமாய் நான்
 மோகத்தில்  துரத்துகையில் வேகமாய் விலகுகிறாய்!
 எண்ணங்களில் உன்னை சிறைபிடித்தேன்!
 இதயத்தில் சிறைபிடிக்கும் நாள் எந்நாளோ?


டிஸ்கி: முகநூலிலும், அரசன், வெற்றிவேல் போன்றோரின் சில கவிதைகளை படித்ததில் நாமும் எழுதிப் பார்ப்போமே என்று எழுதியது.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. ஆரம்பமே அசத்தல் தானே அப்புறம் என்ன நன்றி! வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  2. முதல் முயற்சி போல் தெரியவில்லையே, நன்றாகவே உள்ளது, இருப்பினும் கொஞ்சம் வார்த்தை சிக்கனம் சேர்ந்துக் கொள்ளுங்களேன், சிலர் கூறுவர் பிறரின் கவிதை படித்தால் அவர்களின் எண்ண ஓட்டம் நம்மை ஆக்கிரமிக்கும் என்று, அப்படியெல்லாம் இல்லை, தொடர்ந்து நிறைய கவிதைகள் படியுங்கள்.

    கவிதைக்கு பொய் அழகு கூடவே வார்த்தைக் கோர்வையும்.

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கு நன்றி நண்பரே! இது முதல் முயற்சி அல்ல! ஏற்கனவே கவிதைகள், ஹைக்கூக்கள் எழுதுவேன்! இந்த மாதிரி வர்ணித்து எழுதுவதும் எழுதுவேன். நீண்ட நாளைக்கு பிறகு இன்று இவ்வாறு எழுதினேன்! நன்றி!

      Delete
  3. நன்றாகவே முயற்சித்திருக்கிறீர்கள்!

    ReplyDelete
  4. நல்ல முயற்சி. பாராட்டுகள் சுரேஷ்.

    ReplyDelete
  5. தொடரட்டும்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. அட சூப்பரான கவிதை அருமை !

    ReplyDelete
  7. கவிதை அழகு தொடரட்டும் கவி இன்னும் சிறைப்பிடித்து!

    ReplyDelete

  8. வணக்கம்

    உதயத்தின் பேரழகாய் உன்றன் கவிதை
    இதயத்துள் மின்னும் இருந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  9. முதல் முயற்ச்சியே நன்றாக இருக்கிறதே... தொடரட்டும்

    ReplyDelete
  10. மண்வாசனை
    கிளப்பிச்செல்வது போல
    உன் யோசனைக்
    கிளப்பிச்செல்கிறாய்! - முதல் முயற்சி போல் தெரியவில்லையே!
    நன்று வாழ்த்துகள் தொடருங்கள், தொடர்வேன். நன்றி

    ReplyDelete
  11. அருமையான ஒரு காதல் கவிதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2