சன் டி. வி ஆலய வழிபாடு நிகழ்ச்சியில் எங்கள் ஊர் கோயில்!

வணக்கம் நண்பர்களே!
      எங்கள் ஊரான நத்தம் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் உள்ளது. இராஜ ராஜன் காலத்து கல்வெட்டு ஊரில் கண்டெடுக்கப்பட்டது. இந்த சிவாலயத்திற்கு ஏழு கல்வெட்டுக்கள் இருப்பதாக  சென்னை பல்கலை ஆராய்ச்சி மாணவி ஒருவர் தெரிவித்தார். கல்வெட்டுக்களின் பிரதி எழும்பூர் அருங்காட்சியகத்தில் இருப்பதாக தெரிவித்தார். இத்தனை சிறப்பு வாய்ந்த ஆலயத்தில் தற்போது கல்வெட்டுக்கள் எதுவும் காணப்படவில்லை! கால வெள்ளத்தில் ஆலயம் மாற்றம் பெற்று இரண்டு வருடங்களுக்கு முன் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அது குறித்தும் ஆலய பெருமைகள், தலவரலாறு குறித்து ஏற்கனவே பதிவுகள் இட்டுள்ளேன்.
    இதனிடையே ஆலயத்தை பற்றி கேள்விப்பட்டு ராஜ் டீ.வி மற்றும் சன் டீவி ஆன்மீக நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் ஆலயத்தை படம் பிடித்து சென்றனர். ராஜ் டீவியில் ஆலயதரிசனம் பகுதியில் ஜனவரி மாதத்தில் ஒளிபரப்பானது. தற்சமயம் கடந்த திங்கள் கிழமை சன் டீவி சூரிய வணக்கம் நிகழ்ச்சியில் ஆலய வழிபாடு பகுதியில் இந்த ஆலய  சிறப்புக்களுடன் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. நமது வாசகர்கள் கண்டு களிக்க  யூ டியுப்  லிங்க் கீழே தந்துள்ளேன்.
     இத்தகு சிறப்பு வாய்ந்த ஆலயத்தில் ஐந்தாவது தலைமுறையாக நான் பூஜித்து வருகிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நேரடியாக வீடியோ பகிர முடியாததால் லிங்க் பகிர்ந்துள்ளேன்.

சன் டீ.வி  சூரிய வணக்கம் நிகழ்ச்சியில் கடந்த திங்கள் கிழமை ஒளிபரப்பான எங்கள் ஊர் ஆலயம் உங்கள் பார்வைக்கு!

வீடியோ பார்க்க யூ டியுப் லிங்க்   நத்தம் கோயில்

தங்கள் வருகைக்கும் பார்வைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

Comments

 1. அந்த கோவில் பற்றிய ஒளிப்பரப்பை பற்றி நானும் பார்த்தேன்,. ஆனா, அது உங்க ஊர்ன்னு தெரியாது. இப்போ தெரிஞ்சுக்கிட்டேன். பகிர்வுக்கு நன்றி சகோ!!

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள்... இணைப்பிற்கு நன்றி...

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் சுரேஷ்.
  நம்ம ஊர் பற்றி தொலைக்காட்சியிலோ,திரைப்படத்திலோ வரும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கும். ஆண்களிடமும் அந்த சந்தோஷத்தை பார்க்க முடிகிறது.

  ReplyDelete
 4. வாழ்த்துகள் சுரேஷ்.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2