கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 3

ஜோக்ஸ்!


1.      தலைவரை எதுக்கு அரெஸ்ட் பண்ணிக்கிட்டு போறாங்க?
ஓட்டு எண்ணிக்கையின் போது ஒண்ணு ரெண்டு கூட சேர்த்து எண்ணுங்கன்னு கூச்சல் போட்டாராம்!

2.      தலைவரே வெற்றியைக் கொண்டாட பட்டாசு வாங்கினீங்களே என்ன ஆச்சு?
எல்லாம்  புஸ்வானாமா போயிருச்சு!

3.      கோவில் திருவிழாவிலே என்ன கலாட்டா?

கொடியேத்தினீங்களே மிட்டாய் கொடுத்தீங்களான்னு யாரோ கலாட்டா பண்றாங்களாம்!

4.      என் மனைவி சமையல் செஞ்சா ஊருக்கே தெரியும்!  
  அவ்வளவு பிரமாதமா வாசனை தூக்குமா?
டீ.வி சமையல் ஷோவிலதான் சமைப்பா!


5.      உன் மனைவி உனக்காக எல்லாத்தையும்  விட்டுக்கொடுத்திட்டாளா? பரவாயில்லையே!
அட போப்பா! நீ வேற எரிச்சல் படுத்திக்கிட்டு வீட்டு வேலை எல்லாத்தையும் எனக்கே விட்டுக்கொடுத்திட்டா!

6.      தலைவர் எலெக்‌ஷன் ரிசல்ட் வர வரைக்கும் பம்பரமா சுத்தி சுத்தி வந்துகிட்டிருந்தார்?
அப்புறம்?
ரிசல்ட் வந்ததும் சுருண்டு விழுந்திட்டார்!

7.      தலைவருக்கு இந்த தேர்தல் ஒரு திருப்பு முனையா அமைஞ்சிருச்சு!
    எப்படி?
  எல்லா தொகுதியிலும் மக்கள் திருப்பி அடிச்சிட்டாங்களே!

8.      தலைவர் எலெக்‌ஷன்ல ஜெயிச்சும் சீட் கிடைக்கலன்னு எதுக்கு புலம்பிக்கிட்டிருக்காரு!
எல்.கே.ஜி அட்மிசனுக்கு அவர் பேரனுக்கு ஸ்கூல்ல சீட் கிடைக்கலயாம்!


9.      போர் என்றாலே மன்னருக்கு அலர்ஜி!
அதற்காக நாட்டில் வைக்கோல் போர் கூட இருக்க கூடாது என்று சொல்வது கொஞ்சம் ஓவர்!

10.  அந்த அம்பயர் காரணமே இல்லாம எதுக்கு அவுட் கொடுத்தாராம்!
சியர் கேர்ள்ஸ் ஆடறதை பாக்கிறதுக்காம்!

11.  கடைசிவரைக்கும் போராடிப் பார்த்தாங்க! ஆனா மயிரிழையிலே தோத்துப் போயிட்டாங்க!
எதுல மேட்சிலயா?
மேட்ச் பெட்டிங்க்ல!

12.  தலைவர் தேர்தல்ல ஜெயிச்சா மொட்டை போட்டுகிறதா வேண்டிக்கிட்டாரே என்ன ஆச்சு?
மக்கள் அந்த கஷ்டத்தை அவருக்கு கொடுக்காம தேர்தல்ல மொட்டை போட்டுட்டாங்க!

13.  ஹில் ஸ்டேஷனுக்கு டூர் போயிட்டு வந்தியே எப்படி இருந்திச்சு டூர்?
பில்லை பார்த்ததும்  சூடாயிருச்சு!

14.  மைனர் ஆபரேஷன் தான் நீங்க ஒண்ணும் பயப்பட வேண்டாம்! நான் பாத்துக்கிறேன்!
அதுக்குதான் பயப்படறேன் டாக்டர்! நீங்க அத மேஜராக்கிடுவீங்களோங்கிற பயம்தான்!

15.  புலவர் ஏன் மன்னரை வசைபாடிவிட்டு செல்கிறார்?
பொன்மாலை அணிவிக்கிறேன் என்று கவரிங் மாலையை அணிவித்து விட்டாராம்!

16.  மன்னருக்கு பொது அறிவே இல்லை!
எப்படி சொல்கிறாய்?
நாட்டில் ஊழல் மலிந்துவிட்டது என்று சொன்னால் நம் நாட்டில்தான் எல்லாம் மலிவாக கிடைக்கும் என்று சொல்கிறாரே!

17.  கிச்சனை சுத்தமா வச்சிக்கிலேன்னா என் மனைவிக்கு பிடிக்காது!
வெரிகுட்! நல்ல பழக்கம்!
நான் இல்லே டெய்லி கிளின் பண்ண வேண்டியிருக்கு!

18.  அந்த டாக்டர் ஹோமியோ பதியா அலோபதியா?
அதெல்லாம் தெரியாது! ஆனா லட்சாதிபதின்னு மட்டும் தெரியும்!


19.  எல்லா தொகுதியிலும் நின்னு அடிச்சிட்டோம் தலைவா?
என்னது வெற்றியையா?
 டெபாசிட்டை!

20.  மன்னர் ராணியை வைத்து சூதாடியது அரசியாருக்கு தெரிந்துவிட்டது!
அப்புறம்!
மன்னரை பந்தாடிவிட்டார்கள்!

21. பையன் பெரிய ஐ.பி.எல் ப்ளேயராக இருக்கலாம் அதுக்காக நாங்க ஏலத்துல கலந்து கிட்டுதான் பையனை செலக்ட் பண்ணனுங்கிறதுல்லாம் ஓவரா இல்லே!

22. அந்த ஸ்டேஷன்ல மட்டும்தான் மாமூல் வசூல் அதிகம்?
  எப்படி சொல்றே?
 நோட்டு எண்ணற மிசின் வாங்கி வச்சிருக்காங்கன்னா பாத்துக்கயேன்!

23. தலைவர்கிட்ட சரக்கு தீர்ந்து போச்சுன்னு யாரோ சொல்லிட்டாங்களாம்!
  அதுக்காக டாஸ்மாக்கிலே தீர்ந்தாலும் எங்கிட்ட தீராது சரக்குன்னு விஸ்கி பாட்டிலை காட்டறதெல்லாம் ஓவரா தெரியலை!தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. அனைத்தும்அருமை
  ரசிஙத்தேன்
  சுவைத்தேன்
  நன்றி நண்பரே

  ReplyDelete
 2. அனைத்தும் அருமை....

  ரசித்தேன் சுரேஷ்.

  ReplyDelete
 3. அருமை அருமை அருமை நண்பா.. நல்லா சிரிச்சேன்..

  ReplyDelete
 4. கொடியேத்திட்டு மிட்டாய் குடுக்கல.... ஹா...ஹா

  ReplyDelete
 5. இன்றைக்கு தேவையான துணுக்குகள் தான்.

  ReplyDelete
 6. எதுவுமே சோடை இல்லை. எல்லாமே அருமை.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2