பலே கிழவியும் முட்டாள் திருடர்களும்! பாப்பாமலர்!
பலே கிழவியும் முட்டாள் திருடர்களும்! பாப்பாமலர்! வெகு காலத்திற்கு முன்னே கீரனூர் என்ற ஊரிலே ஒரு ஏமாற்றுக்காரன் வசித்து வந்தான். பிறரை ஏமாற்றிப்பிழைப்பதே அவனுக்கு வேலை. அந்த ஊரின் பக்கத்திலே மோகனூர் என்ற ஊர் இருந்தது. அங்கேயும் ஒரு ஏமாற்றுக்காரன் இருந்தான் அவனுக்கும் பிறரை ஏமாற்றுவதே குறிக்கோள் லட்சியம். இந்த இருவரும் ஏமாற்றுவதில் ஒருவரை ஒருவர் மிஞ்சி விட்டார்கள். ஒரு நாள் கீரனூர் காரன் குப்பன் யாரை ஏமாற்றலாம் என்று சிந்தனை செய்து கொண்டு ஒரு தூக்குச்சட்டியில் அடியில் சாணத்தை நிரப்பி மேலாக சாதம் சிறிதளவு பரப்பி அதை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். அதே சமயம் மோகனூர்காரன் சுப்பனும் ஒரு தூக்குப்பாத்திரத்தில் அடியில் மணல் நிரப்பி மேலாக சிறிது அரிசி பரப்பி எடுத்துக்கொண்டு புறப்பட்டான். இந்த இருவரும் வழியில் ஒரு சத்திரத்தில் சந்தித்தனர். குப்பனுக்கு சுப்பனை பற்றி நன்கு தெரியும். அதே போல சுப்பனுக்கும் குப்பனைப் பற்றித்தெரியும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அசட்டுச்சிரிப்பு சிரித்துக் கொண்டு அமர்ந்தனர். அப்போது குப்பன், சுப்பன...