ஆனந்தவல்லிக்கு அன்னப்பாவாடை!
ஆனந்தவல்லிக்கு அன்னப்பாவாடை! சென்னை செங்குன்றத்தில் இருந்து கல்கத்தா செல்லும் ஜி.என்.டி சாலையில் பதினைந்து கி.மீ சென்றால் பஞ்ஜேஷ்டி என்ற ஊரை அடையலாம். அகத்திய மாமுனிவர் ஐந்து யாகங்கள் செய்த தலம் பஞ்ஜேஷ்டி. இஷ்டி என்றால் யாகம் பஞ்சம் என்றால் ஐந்து. பஞ்ச இஷ்டி பஞ்ஜேஷ்டி எனப்பெயர் பெற்றது. இந்த ஊரில் இருந்து மேற்கே பிரியும் மண் சாலையில் மூன்று கி.மீ தொலைவில் அமைந்துள்ளது அழகிய வயல்கள் நிறைந்த நத்தம் கிராமம். இந்த கிராமத்தில் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது ஸ்ரீ காரிய சித்தி கணபதி ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை சமேத ஸ்ரீ திருவாலீஸ்வரர் ஆலயம். நத்தம் என்று இப்போது வழங்கப்படும் இந்த கிராமத்தின் பழைய பெயர் எகணப்பாக்கம். இது இந்த ஊர் போரியம்மன் கோயிலில் கிடைத்த கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.இராஜராஜ சோழ பெருவளத்தான் காலத்திய கல்வெட்டு அது. இதன் மூலம் இந்த ஊர் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை கொண்டது என்று அறிய முடிகிறது. எகணன் என்றால் பிரம்மா. பாக்கம் என்பது கடற்கரை அருகே உள்ள கிராமங்களை குறிக்கும். கடற்கரை அருகே ...