அனுமார் ஆன ஹர்ஷத் அலி! கதம்ப சோறு
கதம்ப சோறு! தெலுங்கானா உதயம்! கிட்டத்தட்ட 50 வருடங்களாக தனி மாநில கோரிக்கை வைத்து பல்வேறு போராட்டங்களையும் உயிர் தியாகங்களையும் செய்த தெலுங்கானா மக்களின் தனி மாநில கோரிக்கை நேற்று 30-5-2013 நிறைவேறியது. ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க நேற்று ஆளும் ஐக்கிய முன்னனி கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவும் காங்கிரஸ் செயற்குழுவும் ஒப்புதல் அளித்துவிட்டது. ஆந்திராவின் அடிலாபாத், மேடக், மெகபூப்நகர் ஐதராபாத் உள்ளிட்ட பத்து மாவட்டங்களை பிரித்து தனித் தெலுங்கான அமையப்போகிறது. இதற்கு ஒப்புதல் இப்போது கிடைத்தாலும் அதிகாரப்பூர்வமாக பிரித்து மாநிலம் அமைய இன்னும் ஆறு மாதங்கள் ஆகும். இதில் இன்னொரு பிரச்சனை ஐதராபாத் யாருக்கு? என்று ஒருபோட்டி காத்திருக்கிறது. காங்கிரஸ் அரசுக்கு பிரச்சனையாக இருந்த தெலுங்கான உதயமானாலும் இன்னும் சில மாநிலங்களில் விதர்பா, கூர்க்காலாந்து, போடோ லேண்ட், பந்தல்கண்ட், பூர்வாஞ்சல் பகுதி மக்கள் தங்களை தனி மாநிலமாக அறிவிக்க கோரி வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திராவில் தெலுங்கான அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை க