பிள்ளை வரமருளும் புட்லூர் புற்று மாரியம்மன்!
பிள்ளை வரமருளும் புட்லூர் புற்று மாரியம்மன்! ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற அவ்வையாரின் வாக்குப்படி ஆங்காங்கே நம்மை காத்து ரட்சிக்கும் இறைவனுக்கும் இறைவிக்கும் அதி அற்புதமான ஆலயங்களை மன்னரும், மக்களும் கட்டுவித்து வழிபட்டு வருகின்றனர். அதில் பலவித உருவங்களில் சுவாமியும் அம்பாளும் தரிசித்து இருப்பீர்கள். திருவள்ளூர் அருகே புட்லூரில் காணக்கிடைக்காத ஓர் அதிசயமாக புற்று வடிவில் அம்மன் அருள்பாலிக்கின்றாள். அந்த புற்று ஓர் கர்ப்பிணி பெண் தலைசாய்ந்து படுத்திருப்பது போல காட்சி தருவதும். இங்கு தொடர்ந்து ஒன்பது வாரங்கள் வருகை புரிந்து வழிபடுவோருக்கு பிள்ளை வரம் கிடைப்பதும் அதிசயத்தக்க ஆச்சர்யங்கள் மட்டுமல்ல அம்பாளின் கருணையை உணர்த்தும் நேரடி காட்சிகள் ஆகும். சென்னையில் இருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் திருவள்ளூர் அருகே அமைந்துள்ளது இந்த புற்று மாரியம்மன் ஆலயமான அங்காள பரமேஸ்வரி ஆலயம். மேல்மலையனூரில் அங்காளபரமேஸ்வரி முதல் சக்தி பீடத்தில் அமர்ந்து புற்று ரூபத்தில் பல இடங்களில் கோயில் கொண்டருளி அருள் பாலித்து வருகின்றாள். இங்கே ராமாபுரம் புட்லூரி...