உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 27

உங்களின் தமிழ் அறிவு எப்படி?


வணக்கம் தமிழ் ஆர்வலர்களே! இந்த பகுதியை ஒரு மாத காலமாக தொடர இயலவில்லை! கணிணி பழுது, மற்றும் சொந்த வேலைகள் காரணமாக தொடர இயலவில்லை! அது மட்டும் இல்லாமல் இந்த பகுதிக்கு முதலில் இருந்த ஆதரவு பின்னர் இல்லை! நிறைய பேர் விரும்பாத ஒன்றை ஏன் தொடர்வது என்ற எண்ணமும் எனக்கு இருந்தது.
   மேலும் நான் தமிழ் அறிஞனும் அல்ல! தமிழ் ஆர்வலனே! நான் படித்த எனக்குத் தெரிந்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவே! இந்த பகுதி தொடர்வது உங்கள் கைகளில் தான் இருக்கிறது.

  இன்று நாம் பார்க்க போவது ஒரு பொருட் பன்மொழி!

ஒரே பொருளைத் தரும் இரு சொற்கள் தொடர்ந்து வருவது ஒரு பொருட்பன்மொழி எனப்படும்.
  ஓங்கி உயர்ந்து நின்றான் என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம் இதில் ஓங்கி, உயர்ந்து என்ற இரண்டு சொல்லும் உயரமான என்ற ஒரே பொருளைத் தருகிறது. வார்த்தை அழகினைச் சேர்க்க சேர்ந்து வருகிறது இதையே ஒருபொருள்பன்மொழி என்கிறோம்.
    திருமால் குன்றம் உயர்ந்தோங்கி நிற்கிறது.
அந்த ஏழைக் குழந்தையின் கண்கள் குழித் தாழ்ந்து காணப்படுகிறது.
   இந்த இரண்டு தொடர்களிலும் ஒருபொருளைத்தரும் இரு சொற்கள் உள்ளன. முதல் தொடரில் உயர்ந்தோங்கி என்னும் வாக்கியம் உயர்ந்த என்ற பொருளினையும், இரண்டாவது தொடரில் குழிதாழ்ந்த என்ற சொல் தாழ்ந்த என்ற பொருளினையும் தருகிறது. உயர்ந்து என்றாலும் ஓங்கி என்றாலும் ஒரே பொருள்தான். அதேபோல் குழி என்றாலும் தாழ்ந்த என்றாலும் ஒரே பொருள்தான்.
   இவ்வாறு ஒரே பொருளை தரும் இருசொற்கள் சேர்ந்து வருவது ஒருபொருட்பன்மொழி ஆகும்.
   மீமிசைஞாயிறு
   நடுமையம்
   போன்றவை இன்னும் சில உதாரணங்கள் ஆகும்.


தமிழில் புலமை இருப்பின் எத்தகைய சூழலையும் எளிமையாக சமாளிக்கலாம். தமிழக அரசுப் பேருந்துகளில் திருவள்ளுவர் படமும் திருக்குறளும் இடம்பெறச் செய்தார் அந்த எளிமையான முதல்வர். சட்டசபையில் எதிர்கட்சியினர் இதுகுறித்து கேள்வி எழுப்பினர்.
     யாகவா ராயினும் நாகாக்க காவாக்கால்
     சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு.
இந்த குறள்தான் பேருந்துகளில் எழுதப்பட்டு இருந்தது. இந்த குறள் யாருக்கு? ஒட்டுனருக்கா? நடத்துனருக்கா? இல்லை பயணிகளுக்கா? என்று கேள்வி எழுப்பினர் எதிர்கட்சியினர்.
    ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும் என்றால் தொழிலாளர்களின் வெறுப்புக்கு ஆளாக நேரும். பயணிகளுக்கு என்றால் பொதுமக்களை கோபப்படுத்தியாக ஆகும். எப்படி பதில் கூறுவது?
   அறிஞர் ஆன அந்த நாள் முதல்வர் இதை திறமையாக சமாளித்தார். அவர் கூறிய பதில் அனைவர் வாயையும் கட்டிப் போட்டது. அவர் கூறிய பதில் இதுதான்.
   நாக்கு உள்ள அனைவருக்காகவும் எழுதி வைக்கப்பட்டுள்ளது!

பொருத்தமாகவும் தெளிவாகவும் விரைவாகவும் விடை கூறும் ஆற்றல் படைத்த அந்த முதல்வர் அறிஞர் அண்ணா. நாமும் தமிழில் வளமை பெற்றால் இதே மாதிரி பொருத்தமாக பதில் கூறி எத்தகைய சூழலையும் மாற்றிவிடலாம்!

மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் இன்னும் நிறைய தகவல்களுடன் சந்திக்கிறேன்! நன்றி!



Comments

  1. இது போன்றவற்றை தேவை ஏற்படும்போது பின்னர் கூட தேடிப் படிப்பதற்கு வாய்ப்பு உண்டு. அதனால் தொடரவும்.

    ReplyDelete
  2. சமயோசிதம் ரசித்தேன்.

    ReplyDelete
  3. sako..!
    iththodatai niruththa vendaam...

    silaraal thodaramudiyavillai...
    naan utpada...

    atharkaaka niruththavendaam...
    payanulla pakirvu...
    ariyaatha thakavalkal...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!