புகைப்பட ஹைக்கூ 51

 புகைப்பட ஹைக்கூ 51


  வரவில்லை தண்ணீர்
  வந்தது
  கண்ணீர்!

  மது ஓடும் நாட்டில்
  மனிதனுக்கு இல்லை
  தண்ணீர்!

  புனிதநீர் ஆனது
  கழிவு நீர்!
  இல்லை தண்ணீர்!

   தாகம் அறியவில்லை
   தண்ணீரின்
   குணம்!

   குணம் கெட்டதும்
    குடிநீரானது
  கழிவு நீர்!

  விலை போன தண்ணீர்
  வீதியில் திரிவோருக்கு
  கழிவு நீர்!

  திக்கெட்டும் அம்மாவாட்டர்!
  திக்கற்றவர்களுக்கு
  டிரைனேஜ் வாட்டர்!

  தணியாத தாகம்!
  தரம் அறியா
  சோகம்!

  கழிக்கப்பட்டவர்கள்
  நாடுகிறார்கள்
  கழிவை!

  வீதிக்கு வீதி டாஸ்மாக்!
  தொலைந்துபோனது தெருக்குழாய்!
  ஆட்சிக்கு இல்லை பாஸ்மார்க்!

   மிளிரும் தமிழகத்தின்
   ஒளிந்த
   பக்கங்கள்!
   
     தெருவோர மக்களின்
     தீர்த்தமானது
     சாக்கடை!

   விலை போன குடிநீர்
   வீழ்ந்து போன மனிதம்!
   உயர்ந்தது கழிவுநீர்!


    சித்தம் கலங்கியதால்
    நித்தம் அருந்துகிறார்கள்
    கழிவுநீர்!

    காட்சி எடுத்தவர்க்கு
    உள்ளதோ
    மனசாட்சி!

   கலங்க வைத்த காட்சி!
   யாருக்கும் இல்லை
   மனசாட்சி!

   சுகாதாரம் மறந்தது
   சுற்றித் திரிந்த
   தாகம்!

   நிலை மறந்ததால்
   அறியவில்லை
   நீரின் நிலை!

   வறுமையின் கொடுமை!
   மாறுமா நிலைமை!
   குடிநீரான கழிவு நீர்!

   நிறம் மாறிய
   நீர்நிலைகள்!
   நிலைமாறிய மக்கள்!

  வற்றிய ஈரம்!
 தேற்றியது தாகம்!
  குடிநீரான கழிவுநீர்!

  குளங்கள் தூர்ந்ததால்
  களம் புகுந்ததோ
  கழிவு நீர்!
 

ஈரோடு மருத்துவமனை அருகில் இப்படி கழிவு நீரை அருந்துகிறார்கள் என்று புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது தினமலர். மினரல் வாட்டர் விற்கும் அரசுக்கு இதைப்பற்றி எல்லாம் கவலை கிடையாது. ஆனால் புகைப்படம் எடுத்தவர் தொழில் பக்தியை விடுத்து கழிவு நீர் அருந்துவதை தடுத்து நல்ல குடிநீர் வாங்கி தந்து இருக்கலாம் அல்லவா? எல்லாவற்றையும் செய்தியாக்குவதை விட கொஞ்சம் மனிதாபிமானத்துடனும் நடந்து கொள்ளலாம் அல்லவா?

Comments

 1. வற்றாத நதியாய் உங்கள் குடிநீர்க் கவிதை
  நீள்கிறதே. வேதனை.

  ReplyDelete
 2. திக்கெட்டும் அம்மாவாட்டர்!
  திக்கற்றவர்களுக்கு
  டிரைனேஜ் வாட்டர்!.........உங்கள் துணிவு எனக்கு ரொம்ப பிடிச்சியிருக்கு
  தொடருங்கள்.........கலை மக்களுக்காகவே என்று

  ReplyDelete
 3. கழிவு நீரை மக்கள் குடிப்பது குறித்த உங்கள் சமூக அக்கறை சென்றடைய வேண்டிய இடத்திற்கு சென்றால் சரி...

  ReplyDelete
 4. தண்ணீர் எட்டாக்கனியாய் மாறி வருகிறது

  ReplyDelete
 5. தினமலர் மானங்கெட்டு காலம் கொஞ்சம் ஆகிருச்சு....!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2