புகைப்பட ஹைக்கூ 50

புகைப்பட ஹைக்கூ 50


  1. உடைபட்டது
  உழைப்பு!
  கடலில் பிள்ளையார்!

  1. விருந்து கொடுத்து
  விரட்டி அடித்தனர்
  கடலில் பிள்ளையார்!

  1. பிடித்து வைத்து
  உடைத்து எறிந்தனர்!
  கடலில் பிள்ளையார்!

  1. குளிப்பதற்கு
  ஊர்வலம் போனார்
  பிள்ளையார்!

  1. பக்தியில்
  கரைந்து போனார்
  பிள்ளையார்!

  1. உடைத்து போட்டாலும்
  உயிர்த்து வந்தார்
  கடலில் பிள்ளையார்!

  1. தீர்த்த யாத்திரை
  கிளம்பினார்
     தெருப்பிள்ளையார்!

  1. மண்ணிலே தோன்றி
  மனதினிலே ஊன்றி
  நீரிலே கரைந்தார் பிள்ளையார்!

  1. வீதிவீதியாய்
  சுற்றிவந்தவர்
     வீசப்பட்டார் கடலில்!

  1. உற்சாக ஊர்வலத்தில்
  உடைக்கப்பட்டார் கடலில்
  பிள்ளையார்!

  1. மகிழ்வோடு
  இறுதி ஊர்வலம்!
  கடலில் பிள்ளையார்!

  1. கரைந்து போனாலும்
  நிறைந்து நின்றார்
  மனதில் பிள்ளையார்!

  1. அன்பில் திளைத்து
  ஆழியில் மிதந்தார்
  பிள்ளையார்!

  1. ஒரு வாரம் பூசனை
  ஒரு நாள் ஊர்வலம்!
   ஒரு மணியில் கரைந்தார் பிள்ளையார்!

  1. விருந்தும் மருந்தும் மூன்றுநாள்
  விளக்கமாய் நிருபித்தார்
  கடலில் பிள்ளையார்!

  1. கடல் கொண்டு போனாலும்
  திடம் கொண்டு எழுகின்றார்
  அடம் கொண்ட பிள்ளையார்!

  1. கடவுள்
  கடலில் வீசப்பட்டார்!
  கலியுகத்தில் பிள்ளையார்!

  1. விதவிதமாய் ஜனித்தனர்
  ஒரே விதமாய் மறைந்தனர்
  கடலில் பிள்ளையார்!
      
  1. கடலில் வீசப்பட்டது
  கடவுள் ரூபத்தில்
   காசு!

  20 விலை போன கடவுள்
     வீசப்பட்டார்
      கடலில்!


  தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


    
   

Comments

 1. அனைத்தும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் வரிகள்...
  பகுத்தறிவு சிந்தனையும் சமுக அக்கறையும் மறைந்து கிடக்கின்றன
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. அனைத்தும் அருமை... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. வழக்கம் போலவே உங்களின் ஹைகூக்கள்...

  ReplyDelete
 4. கடலில் வீசப்பட்டது கடவுள் ரூபத்தில் காசு!//உண்மைதான்

  ReplyDelete
 5. விழிப்புணர்வு ஹைகூ அருமை...

  ReplyDelete
 6. அருமை சிந்தனையைத்தூண்டும் ஹைக்கூ!

  ReplyDelete
 7. இதைபோல விசர்ஜனம் என்று தூக்கிப் போடும் பிள்ளையார் சிலைகளைப் பார்க்கும்போது எல்லோர் மனதிலும் ஏற்படும் உணர்வுகளை ஹைக்கூவில் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2