இடுப்புக்கு சல்யூட்! ஓல்ட் ஜோக்ஸ் பகுதி 12



  1. என்னப்பா! நேத்து சாப்பிட்ட காபி மாதிரியே இருக்குது?
ஆமாங்க! அதோட ஜெராக்ஸ் காபிதாங்க இது!
                   வி.சாரதி டேச்சு
  2, அவரு சரியான குடிகாரரா இருக்காரு!
    எப்படி சொல்றே?
   டாக்டர் கொடுத்த டானிக்கை கூட சோடா கலந்துதான் சாப்பிடறாரு!
                 சி.பி. செந்தில்குமார்.
3.      தலைவரை அவங்க மனைவி ஏன் டைவர்ஸ் பண்ணிட்டாங்க?
வருமானத்துக்கு கம்மியா சொத்து வைச்சிருந்தாராம்!
                          சி.பி செந்தில்குமார்
4.      ரெண்டு பசங்கள்ல ஒருத்தன் பைலட்டா இருக்கான்! இன்னொருத்தன் தறுதலையா இருக்கான் சார்!
அப்ப ஒருத்தன் உலகத்தை சுத்தறான்! இன்னொருத்தன் ஊரை சுத்தறான்னு சொல்லுங்க!
                      பாஸ்கி
5.      சார்! என் மாமியாரை ஒரு வாரமா காணலை!
 ஒரு வாரமா என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க?
 வேற வழியில்லாம என் நாத்தனாரோட ஒரு வாரமா சண்டை போட்டுகிட்டிருந்தேன் சார்!
                    வி. பார்த்த சாரதி
6.      வேறு வேறு அணியை சேர்ந்த நாம் காதல் கூட்டணி அமைச்ச சில மாசம் தானே ஆகுது! அதுக்குள்ள கல்யாணத்துக்கு என்ன அவசரம்?
என்  வயித்துக்குள்ள மூன்றாவது அணி உருவாகிடுச்சே!
           
            கடலூர் சார்லி
7.      பக்கத்து வீட்டு மைதிலியோட இடுப்பை பார்த்து சல்யூட் அடிச்சியாமே, ஏன்?
அவள் இடை கொடி இடையாச்சே! அதான்!
                 பாஸ்கி
8.      என்னப்பா தோசையிலே இவ்வளவு பெரிய கல் இருக்குது!
பேப்பர் ரோஸ்ட் ஃபேன் காத்துல பறந்துடக் கூடாதுன்னு சொல்லி நாங்கதான் ஸ்பெசலா போட்டிருக்கிறோம்!
                      வி.பார்த்த சாரதி.
9.      எங்கம்மாவோட மாமியார் காலத்துல இருந்து இந்த குக்கரைத்தான் யூஸ் பண்றோம்!
அப்ப இது ஆவி வந்த குக்கருன்னு சொல்லுங்க!
                       வி. பார்த்த சாரதி
10.  உன் வீட்டுக்காரர் ஏன் எப்ப பார்த்தாலும் மண்டையில கட்டுப்போட்டுக்கிட்டு இருக்காரு?
 நான் தான் சொன்னேனே அவரு சின்ன விசயத்துக்கெல்லாம் கூட மண்டையை  போட்டு உடைச்சிக்குவாருன்னு!
                           வி. சாரதிடேச்சு
11 தலைவர் வீட்டுல ஆயிரக்கணக்கான செருப்புக்கள் இருந்ததுக்கு அதிகாரிகள் கணக்கு கேட்டாங்களாமே தலைவர் என்ன சொன்னார்?
   வாங்கினா கணக்கு காட்டலாம்! மேடையில் வந்து விழுந்ததுக்கெல்லாம் எப்படி கணக்கு காட்டறதுன்னுட்டாராம்!
                         வெ. சீதாராமன்.
11.  என் வீட்டுக்காரருக்கு தண்ணி தெளிச்சி விட்டுட்டேன்!
 ஐயையோ! அப்புறம் என்ன ஆச்சு?
  அவரு பாட்டுக்கு பெருக்கி கோலம் போட்டுட்டாரு!
               புதுவண்டி வி.ரவீந்திரன்.
12.  வக்கீல்கிட்ட நம்ம தலைவர் என்ன கேட்டுகிட்டு இருக்காரு?
குற்றப்பத்திரிக்கைக்கு ஆயுள் சந்தா உண்டான்னு கேட்டுகிட்டு இருக்காரு!
                        வி.சாரதிடேச்சு
13.  டாக்டர் எனக்கு தூக்கமே வரமாட்டேங்குது!
இடத்தை மாத்துங்க! நல்ல காற்றோட்டமா பெரிய ஜன்னல்
இருக்கற இடத்துல படுத்து தூங்குங்க!
  அங்க எங்க மானேஜர் இருக்காருங்களே!
    
               இரா.வசந்தராசன்
14.  எதுக்கு என்னை வீட்டு மாடிக்கு கூட்டிட்டு போறீங்க?
வீட்டு மேல கடன் வாங்கத்தான்!
                  வி.சாரதிடேச்சு
15.  பல் டாக்டரா இருக்கற உங்க பையனுக்கும் உங்களுக்கும் என்ன தகறாரு?
என் சொத்தையெல்லாம் பிடுங்கிட்டான்!
                   வி.சாரதி டேச்சு
16.  நம்ம கேடி கண்ணாயிரம் ரொம்ப விவரம் தெரிஞ்ச ஆளா இருக்கான்னே!
எப்படி சொல்றே?
புதுசா வந்திருக்கிற நம்ம ஏரியா பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை பார்த்து ராக்கி கட்டிட்டு வந்திருக்கான்னே!
                    குமார்.
17.  போலீஸ்காரரை கல்யாணம் பண்ணிகிட்டது தப்பா போயிருச்சு?
ஏன்?
வீட்ல யாராவது சின்ன தப்பு பண்ணா கூட கையை நீட்டிடறாரு!
                      வி.சாரதிடேச்சு.
18.சேவை மனப்பான்மையோடுதான் நான் அரசியலில் குதித்தேன்னு சொல்லிட்டு கோடி கோடியா சேர்த்திருக்காரே நம்ம தலைவர்?
 போக போக தேவை மனப்பான்மை வந்திருக்கும்!
                  வெ.சீதாராமன்.
19.வீட்டுல டெய்லி பிரச்சனை! பெண்டாட்டியையும் எங்க அம்மாவையும் சமாதானம் செய்யறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருது பேசாம சாமியாரா போயிடலாம்னு தோணுது!
     ரெண்டு பொண்ணுங்களையே சமாளிக்க முடியாத நீ எப்படி ஆயிரம் பொண்ணுங்களை சமாளிக்க போறே?
                                தமிழ்.
 20.எப்ப பார்த்தாலும் புதுமுகம் தேடிக்கிட்டு இருக்கேன்! புதுமுகம் தேடிக்கிட்டு இருக்கேன்னு சொல்லிக்கிட்டு இருக்காரே! அவரு என்ன சினிமா டைரக்டரா?
ஊகும்!   கைமாத்து வாங்கத்தான்!
                           கடலூர் சார்லி.

நன்றி பழைய ஆனந்தவிகடன் இதழ்கள்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



 

Comments

  1. அனைத்து நகைசுவைகளும் மிக அருமை ... நல்ல தொகுப்பு நன்றி நண்பா

    ReplyDelete
  2. நகைச்சுவை துணுக்குகள் அனைத்தும் சிரிக்க வைத்தன.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2