தயக்கத்தை தள்ளி வை!
தயக்கத்தை தள்ளி வை!
தயக்கத்தை தள்ளிவை நண்பா!
மயக்கத்தை தூரவிரட்டு!
உயர்வினை எட்டுகையில்
அயரவைக்கும் பாசிதான்
தயக்கம்!
தடைகள் பாறையானால்
உடைபடட்டும் உன் முயற்சி
உளியால்!
உன்பாதை எது என்று நீ உணரும்
வரை
உனக்கு உபாதைதான்!
தடம் அமைத்தபின் தடுமாறாதே!
புடம்போட்ட தங்கமென ஒளிவீசு!
தவறுகள் செய்யா மனிதரில்லை!
அதை
திருத்திக்கொள்ளாவிட்டால் நீ
மனிதனில்லை!
உறவுகளை நேசி!
உன் உயர்வுக்கு அவர்களும் ஒரு
விதையாகலாம்!
சோம்பல் பூக்கும் போதெல்லாம்
சாம்பலாகிப் போகும்
நல்லுழைப்பு!
அதிகாலைப் பறவைகளாய் இரைதேடு!
உதிக்கும் சிந்தனைகளை
உரம்போட்டு வளர்!
உடனடியாக விற்பனை செய்!
கடனே என்று கடமையாற்றாமல்
கடமையை நேசி!
வெட்டுப்பட்ட செடிகள் கூட
விருட்சமாகையில் குட்டுப்பட்ட
நீ குன்றி போவது ஏன்?
நிமிர்ந்துநில்!
புல்லிலே பனிபடர்ந்தால்போல்
உன்னிலே படர்ந்த
தயக்கத்தை தள்ளி எறி!
முடக்கத்தை அடக்கம் செய்!
முயற்சியை கைவிடாதே!
முடிவில் ஒருநாள் நீயும்
முதல்வன் ஆவாய்!
டிஸ்கி} மோகன் குமாரின்
வெற்றிக்கோடுகள் படித்ததும் இப்படி ஒரு தன்னம்பிக்கை கவிதை உதித்தது! மின்சாரம்
தடை பட்டதால் உடனடியாக பதிவிட முடியவில்லை! இப்போது பதிவிட்டுள்ளேன்! உங்கள்
கருத்துக்களை தயங்காமல் சொல்லுங்கள்! நன்றி!
புத்தகப் பாதிப்பில் விளைந்த கவிதை அருமை
ReplyDeleteநிச்சயம் இது படிப்பவர் மனதில் ஒரு
பாதிப்பை ஏற்படுத்தித்தான் போகிறது
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
வெட்டுப்பட்ட செடிகள் கூட
ReplyDeleteவிருட்சமாகலாம்
அருமை
ஊக்கம் தருவதாய் உள்ளது நண்பரே!
ReplyDeleteஉற்சாகம் தருகிறது...
ReplyDeleteவாழ்த்துக்கள்...