புகைப்பட ஹைக்கூ 49

புகைப்பட ஹைக்கூ 49


1. குப்பையில் விளைகிறது
 கோட்டின் கீழ் மக்களின்
 உணவு!

2. விலைபோகா பண்டம்
 உலையாகிறது
 ஏழைகள்!

3. ஒதுக்கப்பட்டவை
 ஒதுக்கப்பட்டவர்களின்
 உணவானது!

 4.பசி அறியாது
 பதார்த்தத்தின்
 ருசி!

5. அழுகினாலும்
 அடைக்கிறது
 ஏழையின் பசி!

6. குப்பையானாலும்
 நிறைக்கிறது
 ஏழையின் தொப்பை!

 7.கடைக்கோடி
 மக்களின்
 கடைத்தெரு!

 8.சத்துணவை
 தேடுகிறாள்
 சத்தில்லாத தாய்!

9. எறிகின்ற பொருள்
 இரையாகிறது
 ஏழைகள்!

 10.வளமை மீது
 வறுமையின் நிழல்
 இரைதேடும்தாய்!

11.  சேய்க்கு சோறுட்ட
    காய் தேடுகிறாள்
    தாய்!

12.  ஆகாரம்
  தேடுகையில் மறந்தது
  ஏழையின் சுகாதாரம்!

13. விலையில்லா காய்கறி
    விளைகின்றது
    குப்பைத்தொட்டியில்!

14. குப்பையில் தங்கம்
    குழப்பத்தில்
    தாய்!

15.  தன்மானம் யோசிக்க
      யாசித்தது
      பசி!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
    
 



  





Comments

  1. தன்மானம் யோசிக்க
    யாசித்தது
    பசி!............நச்சுனு இருக்கு

    ReplyDelete
  2. 12. ஆகாரம்
    தேடுகையில் மறந்தது
    ஏழையின் சுகாதாரம்!

    ஆணித்தரமாக நின்ற உண்மை வரிகள் அருமை ! வாழ்த்துக்கள் சகோ .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2