தல தோனியின் வித விதமான தலை அலங்காரம்!
தல தோனியின் வித
விதமான தலை அலங்காரம்!
மகேந்திரசிங் தோனியின்
கிரிக்கெட்டில் அடிஎடுத்து வைத்தபின் அவரது வித்தியாசமான கிரிக்கெட் ஷாட்டுக்கள்
போல அவரது வித்தியாசமான தலை அலங்காரங்களும் பேசப்படுகின்றன.
கூல் கேப்டன் தோனியின் தலை அலங்காரங்கள்
அவருக்கு அழகுதான் சேர்க்கின்றன. இந்திய கிரிக்கெட் அணியில் சேர்ந்த புதிதில்
நீண்ட கூந்தலுடன் விக்கெட் பின்புறம் நின்று அவர் கீப்பிங் செய்த விதமும் அடிக்கடி
கிளவுஸை கழட்டி மாட்டி ஹெலிக்காப்டர் ஷாட் விளாசி இந்தியாவை வெற்றி பெற வைத்ததும்
கொள்ளை அழகு. இவரது ஸ்டைலை அவரது தீவிர ரசிகர்கள் பின்பற்ற ஆரம்பித்து விட்டனர்.
கொஞ்சம் வளர்ந்து இந்திய அணியின் கேப்டனாக
ஆனபோது தனது நீண்ட கூந்தலுக்கு விடை கொடுத்தார் தோனி. கொஞ்சம் ஒட்ட வெட்டிய கிராப்
வைத்தார். அப்புறம் செண்ட்ரல் ஸ்பைக்கோ
என்னமோ வைத்தார். அவர் ஒவ்வொரு முறை முடி
அலங்காரம் செய்ய ராஞ்சியில் உள்ள முடி திருத்தகம் செல்லும் போதும் கூட்டம் அலை
மோதுமாம். அவரது ஸ்டைலை நிறைய பேர் ரசித்தார்கள் விரும்பினார்கள்.
உலக கோப்பை ஆரம்பிக்கும் போது ஒரு ஸ்டைலில்
இருந்தவர். வென்றதும் மொட்டை அடித்து அதிர்ச்சி கொடுத்தார். சென்ற ஐபிஎல் தொடரில்
கொஞ்சம் வித்தியாசமாக தெரிந்தார் தோனி. இவரைப் பார்த்துதானோ என்னவோ சச்சின் கூட
கொஞ்சம் நீளமாக முடி வளர்க்க ஆரம்பித்தார்.
வித விதமாய் அலங்காரம் செய்து கொள்ளும் தோனி
தற்போது ஒரு வித்தியாசமாக கீரிப்புள்ள ஸ்டைலில் சிகை அலங்காரம் செய்து கொண்டு
சாம்பியன்ஸ் லீக் கில் கலந்து கொண்டு உள்ளார்.
தலையின் இருபுறமும் மழித்து நடுவில் மட்டும்
கீரிப்புள்ள மாதிரி முடிவளர்ப்பதுதான் இந்த ஸ்டைல்!
ம்...! பல்லு உள்ளவன் பகோடா சாப்பிடறான்! நாம
எல்லாம்! பெருமூச்சுதான் விடனும்!
டிஸ்கி: என்ன இருந்தாலும் இந்த கீரிப்புள்ள ஸ்டைல் எனக்கு கொஞ்சமும் பிடிக்கலை! உங்களுக்கு!
தங்கள் வருகைக்கு
நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
இதை ஏற்கெனவே ஜெய்ஹிந்த் படத்துல செந்தில் பண்ணிட்டாறே...
ReplyDeleteஎனக்கும் பிடிக்கவில்லை.
ReplyDeleteபுகழின் உச்சியில் இருப்பவர்கள், மற்றவர்களுக்கு நல்ல விசயங்களைத் கற்றுத் தருதல் வேண்டும்
ReplyDeleteஜெயகுமார் அண்ணனின் கருத்துதான் என் கருத்தும்....!
ReplyDelete