பதிவர் சந்திப்பில் ஒளிந்து கொண்ட பதிவர்!

பதிவர் சந்திப்பில் ஒளிந்து கொண்ட பதிவர்!




சென்னையில் வெற்றிகரமாக இரண்டாவது ஆண்டாக தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு நடந்து முடிந்தது. சென்ற ஆண்டு கலந்து கொள்ள முயற்சித்தும் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை! இந்த வருடமும் சில தடைக் கற்கள்!
   அதை தாண்டி மதியம் 12.30 மணி அளவில் அரங்கிற்குள் நுழைந்தேன். வாசலில் கேபிள் சங்கர் தன் நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். பேசலாமா வேண்டாமா? என்ற தயக்கத்தில் அவரை கடந்து சென்றால் பிரம்மாண்டாமாய் ஆரூர் மூனா செந்தில் நின்றிருந்தார்.
    சென்று தளிர் சுரேஷ்! என்று கை குடுத்தேன்! வாங்க! வாங்க! என்று உள்ளே செல்லுங்கள் என்று வழி அனுப்பினார். நுழைவாயில் பாலகணேஷ் வந்து கொண்டிருந்தார். தளிர் சுரேஷ் என்றதும். நான் கணேஷ் மின்னல் வரிகள்! என்று சொல்லிக் கொண்டு உள்ளே போங்க! பதிவு செய்து கொள்ளுங்கள் என்றார். பதிவு செய்யும் இடத்தில் இரண்டு குழந்தைகளுடன் ஒருபதிவர் பதிவு செய்து கொண்டிருந்தார். நான் பதிவு செய்து உள்ளே நுழைய பழனி கந்தசாமி ஐயா தனியாக அமர்ந்திருந்தார். அவரிடம் சென்று அறிமுகப்படுத்திக் கொண்டு உள்ளே நுழைந்தேன். குடந்தையூர் சரவணன் எதிர்பட்டார். தளிர் சுரேஷ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டதும் அவரும் அறிமுகப்படுத்திக் கொண்டு உங்க ப்ளாக்க தொடர்ந்து படிக்கிறேன்! சில சமயம் கமெண்ட் போட முடிவதில்லை! இருந்தாலும் படிச்சிருவேன்! என்றார்.
  பாமரன் உரையாற்றிக் கொண்டு இருந்தார். பேச்சு கலகலப்பாக சென்று கொண்டிருக்க கோவை நேரம் ஜீவாவை சந்தித்து கை கொடுத்தேன். பக்கத்தில் ராஜபாட்டை ராஜா அவரும் கை கொடுக்க கோவை ஆவியும் திண்டுக்கல் தனபாலனும் என்னை தேடிக் கொண்டிருந்ததாக ஜீவா கூறினார். இதற்குள் குழந்தைகளுடன் வந்திருந்த பதிவர் அலோ! நான் பட்டிக்காட்டான் பட்டனத்தில் ஜெய்! என்று கூறி அறிமுகம் செய்து கொண்டிருந்தார். பாமரனின் பேச்சுக்கு பலத்த கைத்தட்டல். இதனிடையே சதிஷ் சங்கவி தானாகவே வந்து ஹலோ சுரேஷ் எப்ப வந்தீங்க? நல்லா இருக்கீங்களா? என்றார்
    அவரது பேச்சு முடியவும், உணவு இடைவேளை! அரங்கின் வெளியே வந்த போது மூங்கில் காற்று முரளிதரனையும் தீதும் நன்றும் பிறர்தரவாரா ரமணி ஐயாவையும் சந்தித்தேன். அவர்களுடன் சிறிது நேரம் அளவளாவி கொண்டிருந்த போது ஜோக்காளி வந்து தனது விசிட்டிங் கார்ட் கொடுத்தார். வெளியே வந்தால் மீண்டும் கேபிள் சங்கர்! அவரைச்சுற்றி ஒரு கூட்டம்! போய் பேசு என்றது மனசு! அதற்குள் ஒரு தயக்கம்! இதுவரை நான் சந்தித்த பதிவர்களின் வலைப்பூக்களில் சென்று கருத்திட்டு வலையில் பேசி ஒருவாரு பழக்கம்! இவரது வலைப்பூவை படித்து கருத்திட்டாலும் இவர் நமது பக்கம் வந்தது இல்லை! டைரக்டர் வேறு! என்று அவரது சகாக்களே அதிகம்! நம்மை எப்படி எடுத்துக்கொள்வாரோ என்று ஒரு தயக்கம்! அவரை கடந்த போது பரிதி முத்துராசன் தென்பட்டார். அவரிடம் ஒரு ஹலோ வைத்து விட்டு வந்தால் அரசன், ரஹிம்கசாலி,கோவை சதீஷ் என்று ஒரு கும்பலே நின்றிருந்தது. இதற்குள் கவியாழி கண்ணதாசன் வந்தார். பாமரனிடம் ரஹிம் கஸாலி பேசிக் கொண்டு இருந்தார். அப்போது திண்டுக்கல் தனபாலன் முரளிதரன் ஆகியோர் பேசிக்கொண்டு இருந்தபோது நுழைந்து திண்டுக்கல்லாரிடம் கை கொடுத்தேன்.அப்படியே உரையாடிக் கொண்டு லஞ்ச் முடித்தோம். காணாமல் போன கனவுகள் ராஜி அவர்கள் அனைவருக்கும் நீர் கொடுத்து உபசரித்துக் கொண்டிருந்தார். இன்னும் சில பெண்பதிவர்கள் பலர் அடையாளம் தெரியவில்லை. உண்டு முடித்து ஹாலுக்குள் நுழைந்தேன். இதனிடையே சீனுவையும் கோவை ஆவியையும் சந்தித்து பேசினேன். மனம் நிறைவாக இருந்தது.

   திண்டுக்கல் தனபாலன், ரமணிஐயா இருவரும் மதுரையில் பதிவர் சந்திப்பு நடத்துவது குறித்து ஆலோசித்து கொண்டிருந்ததை செவி மடுத்தேன். தமிழ் வாசி பிரகாஷ் அவர்களையும் சந்தித்து மகிழ்ந்தேன். அனுபவ ஜோதிடம் வலைப்பூ நடத்துபவர் அனைவருக்கும் இலவச புத்தகம் வழங்கி கொண்டு வந்தார். மதிய நிகழ்ச்சிகளில் மதுமதியின் குறும்படம் மனதை பிழிந்தது. ஆனால் இதில் ஒரு குறை! படம் எடுக்கும்போது இந்த குறை இருந்திருக்காது. இதை பார்த்துதான் அனைவருக்கும் வழங்குகிறார்களோ தெரியாது. இப்போது அரசுபள்ளிகளில் ஜியாமெட்ரிபாக்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. மற்றபடி படம் கிளாசிக். மயிலனின் பக்கோடா கவிதைக்கு விசில் பறந்தது. அடுத்து வாமு கோமு தன் தந்தையை பற்றி பேசினார். கண்மணி குணசேகரன் எழுத்துக்கள் வலிமை வாய்ந்ததாக இருக்க வேண்டும். நல்லதாக எழுதவேண்டும் என்று பேசினார். என்ன கொஞ்சம் ஓவராக போய் விட்டது. உதாரணம் மேல் உதாரணம் என்று சிற்றுரை பேரூரை ஆனதால் அரங்கத்தில் பாதி சீட் காலியாகிவிட்டது. டிடியும் நானும் எழுந்து வெளியில் வந்தோம். கொஞ்சம் குடிநீர் அருந்தலாம் என்று பார்த்தால் கேன் காலி. இருந்த நீரை ஒரு கிளாசில் பிடித்து நான் அவர், சங்கவி என்று மூன்று பேரும் அருந்தினோம். மீண்டும் ஜீவாவுடன் கொஞ்ச நேரம் பேசினேன் கோவை அகிலா அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தார்.
     ரஞ்சனிநாராயணன் அம்மாவிடம் கொஞ்சம் பேசினேன். நிகழ்காலம் எழில் நலம் விசாரித்தார். வீடு திரும்பல் மோகன் குமார், மதுமதி ஆகியோரை உணவு இடைவேளையிலேயே விசாரித்தேன்.
    திரும்ப உள்ளே வந்தபோது புத்தக வெளியிடு சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. சுரேகா சிறப்பாக தொகுத்து வழங்க சதிஷ்சங்கவி, மோகன்குமார்.சேட்டைக்காரன்,யாமிதாஷா,சுரேகாவின் நூல்கள் வெளியிடப்பட்டது. அதைவெளியிட்டவர்கள் சிறு உரை நிகழ்த்தி புத்தகத்தின் சிறப்பை கூறினார்கள். இறுதியில் சீனு நன்றியுரை சொல்ல தேசிய கீதத்துடன் விழா இனிதே முடிவுற்றது.
   நண்பர்கள் அனைவரிடமும் விடைபெற்று வீடு திரும்பினேன். மனம் முழுதும் பதிவர்கள் விழா நிறைந்து இருந்தது. சிலரோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசை இருந்தும் விழா முடிந்ததும் புறப்படும் அவசரத்தில் புகைப்படம் எடுக்க மறந்து கிளம்பி விட்டேன். அது மட்டுமே ஒரு குறை!


  அப்துல் பாசித், பிரபு கிருஷ்ணா, இரவின் புன்னகை வெற்றிவேல் திருப்பூர் ஜோதிஜி,உண்மைத்தமிழன், உணவுலகம் ஆபீசர்இன்னும் சிலரையும் சந்தித்தேன். இதுநாள் வரை வலையில் பழகிக் கொண்டிருந்தவர்களுடன் நேரில் உரையாடி மகிழ்ந்தது மனதுக்கு நிறைவாகவும் ஓர் புதிய அனுபவமாகவும் இருந்தது.
     இது போன்ற சந்திப்புக்கள் அடிக்கடி நடக்க வேண்டும் அதில் கலந்து கொண்டு நண்பர்களோடு பழகி மகிழ வேண்டும் ஆவல் ஏற்பட்டது. நண்பர்கள் வெளியிட்ட நாலுபுத்தகங்கள் வாங்கி விட்டேன். சுரேகா புத்தகம் கிடைக்கவில்லை! கோவை ஜீவாவின் நூல் ஒன்று வாங்கினேன்.
   வீடு வந்து வீடு திரும்பல் மோகன் குமாரின் வெற்றிக் கோடுகள் வாசித்தேன். ஒரு ஐந்து அத்தியாயங்கள் வாசித்தேன்! அருமையாக இருந்தது. என் வாழ்க்கையை படிப்பது போல இருந்தது. அதில் சொல்லியுள்ள பலதை நானும் வாழ்க்கையில் இழந்து விட்டது போல இருந்தது. சங்கவியின் கவிதைகள் ரசிக்க வைத்தது. கோவை நேரத்தின் புத்தகத்தில் திருமுக்கூடலூர் கோயில் பற்றிமட்டும் படித்தேன். யாமிதாசாவின் கவிதைகள் சில வியக்கவைத்தது.
  மொத்தத்தில் பதிவர் சந்திப்பு எனக்கொரு திருப்பு முனையாக அமையும் என்று எண்ணுகிறேன்.

நினைவில் நின்றவரை கோர்த்து எழுதி விட்டேன்! இனி உங்கபாடு! நிறையோ குறையோ எதுவோ சொல்லிட்டு போங்க அன்பர்களே!
 கேமரா மொபைல் எடுத்து சென்றும் படம் எடுக்க கூச்சப்பட்டு விட்டதால் மற்ற பதிவர்களின் பதிவுகளில் இருந்து சுட்ட படங்கள்! கோச்சூக்காதீங்க ப்ளீஸ்!

டிஸ்கி} பதிவர் சந்திப்பில் ஒளிந்து கொண்ட பதிவர் யாருன்னு சொல்லவே இல்லையே என்கிறீர்களா? சும்மா இப்படி தலைப்பு வச்சாத்தானே ஓடி வந்து படிப்பீங்க! கேபிள் சங்கரை பாத்துட்டு பேசாமா ஒளிஞ்ச நாந்தாங்க! அந்த அப்பாவி பதிவர்!

Comments

  1. உங்களை நேரில் சந்தித்தது மிகவும் சந்தோஷம், ஆனால் சூழ்நிலை காரனமாக உங்களிடம் விரிவாக உரையாட முடியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. உங்களை சந்தித்தது எனக்கும் பெரு மகிழ்ச்சியே! எழுதும் போது உங்கள்பெயரும் ஜாக்கியின் பெயரும் விடுப்பட்டு போனது! மன்னித்துக் கொள்ளுங்கள்! மீண்டும் சந்திப்போம்! நட்புடன் சுரேஷ்!

      Delete
  2. தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சுரேஷ் சார் உங்கள் பார்வையில் திருவிழாவை பற்றி வித்தியாசமாக எழுதியுள்ளீர்கள்

    ReplyDelete
  3. நேரில் சென்று பார்த்தது போல இருக்கிறது.
    திரு.முத்துகுமார் அவர்கள் உரையாற்றவில்லையா ?

    ReplyDelete
    Replies
    1. நான் சென்றது மதியத்திற்கு மேல்தான்! பல பதிவர்கள் அறிமுகம் எனக்கு இல்லை!அதனால் நினைவில்லை! வருந்துகிறேன்!

      Delete
  4. சுரேஷ் அண்ணேன்...எங்க என்னைத்தான் சொல்லுரீங்கலோனு அவசரமா வந்து படிச்சேன்...அப்பாடி நான் இல்ல...நானும் உங்களைமாதிரித்தான் ஆனால் கேபிளுக்கு ஒரு ஹலோ சொல்லி கைகொடுத்துவிட்டேன் ..நாளைக்கு பெரிய டைரக்டர் ஆனாருனா ஓசில PREVIEW படம் பார்த்துக்கலாம்ல

    ReplyDelete
    Replies
    1. சார் உங்களைப் பாக்கவே இல்லையே! எங்க இருந்தீங்க. ப்ரபைல் படங்களை மனதில் வைத்துக் கொண்டு பதிவர்களை தேடும்போது தோல்வியே கிட்டுகிறது. மிஸ் பண்ணிட்டேனே!

      Delete
  5. உங்களுடன் பேசியதில் மிக்க மிக்க சந்தோசம்....

    ReplyDelete
  6. மிகவும் அமைதியான ஆளாக இருக்கிறிர்கள் .. சந்திப்பில் மிக்க மகிழ்ச்சி நண்பா

    ReplyDelete
  7. உங்க கூடவே போய் வந்த எஃபெக்ட் ...நன்றி பிரதர் ...!

    ReplyDelete
  8. சுரேஷ்! பெரும்பாலும் நீங்கள் குறிப்பிட்ட பதிவர்களை சந்தித்தபோது நானும் உடன் இருந்ததால் நான் சொல்வது போலவே இருந்தது.
    மிக்க மகிழ்ச்சி உங்களை சந்தித்ததில்

    ReplyDelete
  9. தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...

    ReplyDelete
  10. தல, இடையில எங்க "குழுவோட" பாட்டு இருந்ததே.. அப்போ டீ குடிக்க போயிட்டீங்களா??

    உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..

    ReplyDelete
  11. உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சுரேஷ் சார்...

    ReplyDelete
  12. உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சுரேஷ் :-)

    ReplyDelete
  13. வந்தும் எங்களுடன் பேசாமல் திரும்பி விட்டீர்கள் போல...

    ReplyDelete
  14. தங்களைச் சந்தித்தது மிக்க
    மகிழ்ச்சி தந்தது
    சந்திப்பை மிக அருமையாகப்
    பதிவு செய்துள்ளீர்கள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2