மாலை மலரில் நான் எழுதிய எங்கள் ஊர் கோயில் வரலாறு!

அன்பிற்கினிய தளிர் வாசக நண்பர்களே! எனக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி! உங்களுக்கும் மகிழ்ச்சி தரும் என்று எண்ணுகிறேன்! நான் பூஜிக்கும் எங்கள் ஊர் ஆலயம் ஶ்ரீ ஆனந்த வல்லி அம்பிகை சமேத ஶ்ரீ வாலீஸ்வரர் கோயில் பற்றி இன்றைய மாலை மலர் ஆன்மீக மலரில் வெளிவந்துள்ளது.
    ஒரு வாரம் முன்பு மாலை மலரில் இருந்து என்னை தொடர்பு கொண்டு ஆலயம் பற்றியும் வரலாறும்  கேட்டார்கள். உடனே வரலாற்றையும் சில புகைப்படங்களையும் இ- மெயிலில் அனுப்பி வைத்தேன்.
   அதன் பின்பு எந்த தகவலும் இல்லை! நானே தொடர்பு கொண்ட போதும் பதில் கிடைக்க வில்லை!  இன்று சற்று முன் மாலைமலரில் வெளிவந்துள்ளதாக பக்தர் ஒருவர் போன் செய்து சொன்னார் மகிழ்ச்சி அடைந்தேன். இணையத்தில் தேடி படித்து விட்டேன்! 
    நான் எழுதி அனுப்பியது முழுமையாக வந்துள்ளது. இதே போன்று ஒரு மகிழ்ச்சியை 2005ம் வருடம் குமுதம் பக்தியில்  வெளிவந்தபோது அடைந்தேன்! மீண்டும் அதே மகிழ்ச்சி!
   நீங்களும் படித்து மகிழ கீழே  லின்க் தந்துள்ளேன்!  உங்கள் கருத்துக்களை பகிருங்கள்! நன்றி!

Comments

  1. மிகவும் சந்தோசம்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மேன்மேலும் புகழ் பெற..வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  3. அருமை சகோ!
    அழகான பிள்ளையார்.
    வெள்ளிக்கிழமை நல்ல தரிசனம் உங்கள் கோயிலில் எனக்கும்...

    மேலும் புகழ் ஓங்க நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. பெருமை மிகு செய்தி .
    வாழ்த்துக்கள் !
    சிறப்பாக கட்டுரை தொகுத்து உள்ளீர்கள்.
    படித்து இன்புற்றேன்.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் அன்பரே வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. நம்முடைய படைப்புகள் இதழ்களில் வெளிவரும்போது மனம் அடையும் சந்தோசத்திற்கு அளவே இல்லை.... இதில் எனக்கும் நன்கு அனுபவம் உண்டு.!!!
    https://www.scientificjudgment.com/

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2