புகைப்பட ஹைக்கூ 48
புகைப்பட ஹைக்கூ 48
1.அழகு பார்க்கிறது
அழகு!
கிளி!
2.முகம் பார்த்து
அகம் மகிழ்ந்தது
அழகிய கிளி!
3.கிளி அழகை
பார்த்தது
கிளி!
4.பிம்பம் பார்த்து
ஸ்தம்பித்தது
பசுங்கிளி!
5.வாகனத்தில்
வழிந்தது
அஞ்சுகத்தின் அழகு!
6.நிஜம் ஒன்று
நிழலை
ரசிக்கிறது
7.களவாடியது
கண்ணாடி!
கிளியழகு!
8.கொத்திப்பார்த்தது
தித்திக்கவில்லை!
கண்ணாடியில் கிளி!
9.ஒப்பனையின்றி
ஒளிர்ந்தது
கண்ணாடியில் கிளி!
10.பைங்கிளி அழகு
பார்த்து கொண்டது
பைக் ஆடியில்!
11.ஆடியில் அழகு
ஆனந்தத்தில்
கிளி!
12. மெய் பார்த்து
மெய் மறந்தது
கிளி!
13. முகம்பார்க்க
இச்சைப்பட்டது
பச்சைக்கிளி
14. ஆடியில் சிறைபட்டது
அஞ்சுகத்தின்
அழகு!
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
மெய் பார்த்து
ReplyDeleteமெய் மறந்தது
கிளி!...........அருமை
உங்கள் கிளிப்பாட்டு புதுமை
தன்னைத் தானே ரசிக்கும் கிளியும் அதனை ரசித்த உங்கள் வரிகளும்...
ReplyDeleteஅழகு!.. வாழ்த்துக்கள்!
Superb....!
ReplyDeletearunamai..!
ReplyDelete