"கவுச்சி நடிகை" சிரிக்க வைத்த சிரிப்புக்கள் -பகுதி 10

சிரிக்க வைத்த சிரிப்புக்கள்!


  1. அந்த ஆளு ரொம்ப அப்பாவி!
எப்படி சொல்றே?
கள்ளக்காதல்னா திருடனும் திருடியும் காதலிக்கிறதான்னு கேட்கிறாரே!
             எம்.விஷ்வா.
  1. தலைவருக்கு விபரம் பத்தாதுன்னு எதை வைச்சு சொல்றே?
பின்னே என்ன.. பெட்ரோல் விலை ஏறிப்போச்சு, அதனாலே டீசல் வெடிகுண்டு வீசலாமான்னு கேட்கிறாரே!
                எஸ்.டேனியல் ஜூலியட்.
  1. தலைவர் ஒரு மக்குன்னு எப்படி சொல்றே?
செவ்வாய் கிரகத்துக்கு செயற்கை கோள் அனுப்ப போறாங்கன்னு சொன்னதுக்கு ஏன் இவங்க கிட்ட இயற்கை கோள் கிடையாதான்னு கேட்கறாரு!
                       லெ.நா.சிவக்குமார்.
  1. தலைவர் இப்பல்லாம் தண்டச்சோறுன்னு செல்லமாதிட்டறதை விட்டுட்டாரு!
அப்புறம்?
விலையில்லா சோறுன்னு திட்டுறாரு!
                 கே.சசிரேகா.
  1. அரசியல்வாதியோட மகனை காதலிச்சது தப்பா போச்சுடி!
ஏண்டி?
நீ யாரை வேணும்னாலும் கல்யாணம் செய்துக்க.. நான் வெளியில இருந்து ஆதரவு தரேன்னு சொல்றான்!
                    ராஜரதினா.
  1. தலைவர் குழந்தை மாதிரி!
ஏன்?
சைடு டிஷ் செரிமானம் ஆகிறதுக்கு கிரைப் வாட்டர் குடிக்கிறாரே!
                       பி.ராஜ்.
  1. அவர் அப்பாவின்னு எதை வைச்சு சொல்றே?
ஆடிக்காத்துல அம்மியும் பறக்கும்னு சொன்னதை நம்பி அம்மி மேல பேப்பர் வெயிட்டை தூக்கி வச்சிருக்கார்னா பாரேன்!
                    எம்.எஸ்.கண்ணன்.
  1. வெள்ளை வேட்டிசட்டையில் இருந்த தலைவர் திடீர்னு ஜீன்ஸ் பேண்ட் டீ சர்ட்டுக்கு மாறீட்டாரே ஏன்?
அவரது ரியஸ் எஸ்டேட் நண்பர் தினமும் ஒரு சைட் காட்டுறேன்னு சொன்னாராம்!
                       சையத்.
  1. சீனாக்காரன் நம்ம பார்டருல வந்து கூடாரம் குடிசை எல்லாம் போடுறானேன்னு தலைவர் கிட்ட சொன்னதுக்கு இப்படி வெகுளியா சந்தேகம் கேட்பாருன்னு எதிர்பார்க்கலை!
 அப்படி என்ன கேட்டாரு?
  ஏன் சீனாவுல புறம்போக்கு நிலமே கிடையாதான்னு கேட்கிறாரு!
                      ஜி.சாய்லட்சுமி.
  1. சில்லறை வணிகம்கிறதை அவர் தப்பா புரிஞ்சிகிட்டு இருக்காரு!
எப்படி சொல்றே?
  ஒரு கிலோ சில்லறை என்ன விலைன்னு கேட்கிறாரே!
                   கே. ஆர் பத்மா.
  1. படிக்கிற பையனான  உனக்கு டாஸ்மாக் கடை பக்கம் என்ன வேலை?
நெப்போலியனுக்கு என்ன ஸ்பெல்லிங்குன்னு தெரிஞ்சுக்கத்தான் வந்தேன் சார்!
                    ஜே.தனலட்சுமி
12. டாக்டர் பட்டம் கொடுத்ததிலிருந்து தலைவர் கிட்ட மாறுதலான வார்த்தைகள் வருது!
எப்படி சொல்றே?
கட்சியில் உள்ள மகளிர் அணியை கலைச்சிருலாம்னு சொல்லாம அபார்ஷன் பண்ணிடலாமுன்னு சொல்றார்!
                   வி.நெல்சன்.
  1. என்ன டாக்டர் இது! ஆபரேசன் செஞ்ச இடத்திலே எதையோ வச்சு தைச்சி இருக்கீங்க?
  2. பயந்துட்டியா அது எங்க ஆஸ்பத்திரியோட லேபிள்!
                           பீட்டர்.
  1. தலைவர் சமையல் கத்துக்கிட்டாருன்னு எப்படி சொல்றே?
கூட்டு வைக்கத்தயார்னு சொல்றாரே!
                    எஸ். சுப்ரமணியன்.
  1. மன்னர் ஏன் போர் தேதியை மாற்றி அமைக்க சொல்லி எதிரிக்கு தூது அனுப்புகிறார்!
இன்னும் பதுங்கு குழி ரெடியாகவில்லையாம்!

                       லக்‌ஷனா.
  1. தரகரே! என்னது மாப்பிள்ளை இவ்வளவு குண்டா இருக்காரு!
  நான் தான் சொன்னேனே மாப்பிள்ளை ரொம்ப வெயிட்டான ஆளுன்னு!
                    சீ. இருளப்பசாமி
  1. என்ன டாக்டர் மாவு கட்டுக்கு பதிலா சிமெண்ட் கட்டு போடறீங்க?
    நீங்கதானே நல்லா ஸ்ட்ராங்க கட்டுப்போடுன்னு சொன்னீங்க?
                    ஒய்.ராஜையன்.
  1. அந்த கவர்ச்சி நடிகை இந்த படத்துல மீன் விக்கறவங்களா நடிக்கிறாங்க!
அப்ப ‘ கவுச்சி’ நடிகைன்னு சொல்லுங்க!
                      பர்வீன் யூனூஸ்.
  1. மாமூலை மரியாதையா கொடுன்னு கபாலிக் கிட்டே சொன்னது ரொம்ப தப்பாயிடுச்சு!
ஏன்?
மேளதாளத்தோட ஊர்வலமாக வந்து மாலையைப் போட்டு மாமூலை தந்து மானத்தை வாங்கிட்டான்!
                டி.லட்சுமி பிரபா.
  1. நான் நாயா இருப்பேன்னு சொன்னது தப்பா போச்சி!
ஏன் தலைவரே!
 மக்கள் கல்லெடுத்து அடிக்கிறாங்களே!
                    ஏ. மூர்த்தி.
நன்றி: தினமலர்-வாரமலர்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. அருமையான நகைச்சுவைத் துணுக்குகள்
    படித்து மிகவும் ரசித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2