விலையில்லா சோறு போட்டால் பெரிய ஆளா?
பாண்டவர்களில் மூத்தவரான
தருமருக்கு தான் செய்யும் தர்மங்கள் மீது ஏக கர்வம். தான் நிறைய பேருக்கு தானம்
செய்வதாகவும் ஏழை பங்காளனாகவும் நினைத்துக் கொண்டார். அதனால்தான் நாட்டில்
சுபிட்சம் நிலவுவதாகவும் சிறந்த ஆட்சி தாம் நடத்துவதாகவும் எண்ணிக் கொண்டார்.
தர்மரின் மனப்போக்கு கிருஷ்ணருக்கு
தெரியவந்தது. தாமே தர்மவான் என்று எண்ணும் அவரின் ஆணவத்தை அழிக்க முடிவு செய்தார்.
ஒருநாள் தர்மரை அழைத்துக் கொண்டு மகாபலி சக்ரவர்த்தியின் பாதாள லோகத்திற்கு
சென்றார்.
தர்மா! இந்த லோகத்தை ஆளும் மகாபலி
சக்ரவர்த்தி விஷ்ணுவால் ஆட்கொள்ளப்பட்டவர். அவரை சந்திப்போம் என்று வீதி வழியாக
அழைத்துச் சென்றார். அந்த நகரின் வளமை தர்மருக்கு மிகவும் வியப்பாக இருந்தது.
வீதியில் ஒரு ஏழைகள் கூடத் தென்படவில்லை!
தாகம் ஏற்படவே ஒரு வீட்டில் தண்ணீர்
கேட்டனர். அந்த வீட்டுப் பெண்மணி ஒரு தங்க சொம்பில் நீர் கொண்டுவந்து கொடுத்தார்.
அருந்தி முடித்ததும் சொம்பை திருப்பிக்
கொடுக்க முனைந்தார் தருமர்.
அந்த பெண்மணி பணிவுடன், மன்னிக்க வேண்டும்
ஐயா! எங்கள் நாட்டில் தானம் கொடுத்ததை திரும்பி வாங்கும் பழக்கும் கிடையாது!
என்றார். தர்மர் வியப்படைந்தார்.
சக்ரவர்த்தியின் அரண்மனையில் அறுசுவை உணவு படைக்கப்பட்டது. தங்கத்தட்டில் உணவுகள்
வழங்கப்பட்டன. தருமர் உண்டு முடித்ததும் ஏவலர்கள் தட்டைக் கழுவி தருமரிடமே தந்தனர்.
தர்மர் வியப்படைந்து ஏவலர்களை வினவியபோது. எங்கள் நாட்டில் ஒருவருக்கு கொடுத்ததை
திரும்பப் பெறும் பழக்கம் கிடையாது என்றனர்.
பின்னர் மகாபலியை சந்தித்தனர். தர்மர் தன்
நாட்டில் தான் செய்யும் தர்மங்களை பட்டியல் இட்டார். தினமும் 500 பேருக்கு
அன்னதானம் கொடுப்பது என் வழக்கம் என்று பெருமையாக சொன்னார்.
அதைக் கேட்ட மகாபலி! அப்படியா! உங்கள்
நாட்டில் அவ்வளவு ஏழைகள் இருக்கிறார்களா? இங்கே இருப்பதை சாப்பிட ஆள் தேடினாலும்
கிடைக்க மாட்டேன் என்கிறார்கள்! என்றார் மகாபலி!
தர்மருக்கு முகத்தில் ஈயாட வில்லை! கிருஷ்ணர்
அர்த்தமாய் புன்னகைத்தார்.
பிரபோ! என் கர்வம் அழிந்தது! நானே தர்மவான்!
என்று ஒருபோதும் எண்ண மாட்டேன் என்று மனம் திருந்தி கூறினார் தர்மர்!
படிச்சதில் பிடிச்ச ஒரு
கதை!என் பாணியில் சிறிது மாற்றி உங்களுக்கு பகிர்ந்தேன்! நன்றி!
மாற்றி பகிர்ந்து கொண்டதும் நல்லாத்தான் இருக்கு... பாராட்டுக்கள்...
ReplyDeleteada...!
ReplyDeleteகதையை இப்பதான் நான் அறிகிறேன்..
ReplyDeleteஅதுசரி அசல் எப்படி இருக்கும்? அறிந்ததில்லை...
நல்ல கதை. பகிர்வினுக்கு மிகவும் நன்றி சுரேஷ்!
வாழ்த்துக்கள்!