தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!


குளத்தில் இறங்கியதும்
குதூகலித்தன மீன்கள்!
நிலா.

மேகம் தழுவுகையில்
முகத்தை மூடிக்கொண்டது
முழுநிலா!

புதைந்த உயிர்கள்
மீட்டது
மழைத்துளி!

செதுக்கசெதுக்க
குறைந்தது ஆயுள்
பென்சில்!

புதையல் சேர்ந்ததும்
திருடன் வந்தான்!
புற்றில் பாம்பு.

நிறம் மாறியதும்
நிலை உயர்ந்தது
வயல்கள்!

வெடித்து பிளந்த நிலம்!
விக்கித்து அழுதது
மழை!

ஒட்டி உறவாடியது
மணல்!
ஈரம்!

கரையேறுகையில்
கலைத்துபோட்டதுவாழ்க்கை
புயல்!

தலைவிரித்து
வரவேற்றது
வாசலில் தென்னை!


பொங்கிவந்த கோபம்!
தண்ணீராய் அணைத்தது
குழந்தையின் சிரிப்பு!

வெள்ளை அடித்ததும்
பளிச்சிட்டது
அழுக்கு!

மிதிபட்டாலும்
சுத்தமாக்கியது
மிதியடி!

ஒளிந்து கொண்ட பசுமை!
மீட்டு வந்தது
மழை!

வெட்டுபட்டும்
விழாவை அலங்கரித்தது
வாழைமரம்!

இலக்கணம் மீறினாலும்
இனித்தது
மழலை மொழி!

துயரங்களை தூரத்தே
விரட்டுக்கிறது
குழந்தை!

புன்னகைத்தது 
வானம்!
மூன்றாம் பிறை!




தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. அற்புதமாக சிந்திக்கிறீர்கள் நண்பா,,,, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வணக்கம்
    நன்றாக உள்ளது படித்து மகிழ்ந்தேன்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014   போட்டி...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. எளிமையாகவும் அதே நேரத்தில் மிக அருமையாகவும் இருக்கிறது உங்கள் சிந்தனைகள் பாராட்டுக்கள்

    ReplyDelete
  4. wow என்ன அருமையாக எழுதுகிறீர்கள் சிந்திகிறீர்கள் சூப்பர் குழந்தையின் படமும் அழகோ அழகு பாராட்டுக்கள்

    ReplyDelete
  5. அருமையான ஹைக்கூ கவிதைகள்......

    பாத்திரம் தலையில் வைத்திருக்கும் குழந்தை அழகோ அழகு - கண்களில் என்னவொரு குறும்பு!

    ReplyDelete
  6. ஆஹா என்று சொல்ல வைத்தன அனைத்து ஹைக்கூக்களும்!

    குழந்தைகள் புகைப்படங்கள் அனைத்தும் ரொம்ப அழகு!

    ReplyDelete
  7. அனைத்தையும் ரசித்தேன். நீங்கள் எழுதும் இந்த கவிதைகள் மிகவும் அருமையாக இருக்கிறது. எளிதாக புரிந்து கொள்ளும் விதமாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. சிறந்த பாவரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete
  9. பொங்கிவந்த கோபம்!
    தண்ணீராய் அணைத்தது
    குழந்தையின் சிரிப்பு!
    அருமை,

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!