தளிர் லிமரிக் கவிதைகள்! பகுதி 3

தளிர் லிமரிக் கவிதைகள்!


1.முன்னாளில் அவர் ஜட்ஜு
இன்னாளில் அவர்தான் பத்திரிக்கை நியுசு
மு.கவை கலக்கிடும் மார்கண்டேய கட்ஜு

2. எங்க ஊருலேஎல்லாமே அம்மா!
 மத்தவங்க எல்லாம் சும்மா!
 எதுர்த்து நிக்க விட்டிடுவோமா?


3. சச்சினுக்கு கொடுத்தாங்க எம்பி!
 சபைக்கு ஒருநாளும் வரலையே தம்பி!
 சலுகைகள் இனிக்குதோ நம்பி!

 4.ஆட்கொல்லி நோய் எபோலா!
 ஆப்பிரிக்காவில் அடித்தது தபேலா!
 அகிலமே நடுங்குகிறது கோபாலா!

  5.வேட்டியை தடுத்தால் சிறை!
  விரைந்து போட்டார்கள் சட்டம்!
குடித்து கூத்தாடினால் யாருக்கு இருக்கு அக்கறை!

6 லார்ட்ஸில் ஜெயித்ததும் மப்பு!
 லாஸ் ஆனது பேட்டிங்கு!
 குக் வச்சாரு நல்லா ஆப்பு!

7.கோலிக்கு போட வேணும் வேலி!
குப்பத்துல ஆடுவாங்க கில்லி!
இந்தியன் டீமுக்கு பிடிச்சது கிலி!

8.நாடு மீது இல்லை அக்கறை
நாடிவரும் சில்லரையே துரை!
நாறிப்போச்சு தலைவர்களின் சமூக அக்கறை!


 9.செல்லில்  இருக்கும் கவனம்
 செயலில் இல்லை இக்கணம்!
 செத்துப்போனது சுதந்திரம்!

10.நாடே ஆகுதாம் டிஜிட்டல்!
நன்றே செய்கிறார் மோடி!
இன்றும் இருக்கிறான் ஏழை கோடி!

11.ஆறுகளில் இல்லை நீரு!
அடிமட்டத்தில் புகுந்தது கடல்!
அள்ளிக் குவித்தார்கள் மணல்!

12.பாலம் மேலே ரெயிலு!
பள்ளத்துல தள்ளாடுது தமிழனோட உயிரு!
வெள்ளோட்டம் போகுது மெயிலு!


13.ஆளாளுக்கு கொடுக்கிறாங்க விருது!
அதைக் கொண்டாட ஒரு பொழுது!
படம் பிடிச்சு காண்பிச்சா பணம் கொட்டுது!

14.சரம் சரமா போட்டாங்க சாலை!
சாலையோர மரமெல்லாம்  காணலை!
சல்லிசா பயணிக்க கொடுக்க வேணும் விலை!


15. கடலிலே கலக்குது இரசாயணம்!
   கவுச்சியும் ஆகுது பாஷாணம்!
   ஆலைகள் மீறுது விதிமுறை!
அரசுக்கு அதிலில்லை அக்கறை!

16. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்!
    அதுக்கு நடுவே சீரியலு!
    வருஷம் தவறாம விருது!
    வளர்ந்துடும் பாரு டி.ஆர்பி!


17. உள்ளத்தில் இருக்குது உறுதி!
   உழைப்புக்கு கிடைக்குது வெகுமதி!
   ஆணுக்கிங்கு பெண் சம நீதி!
   

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. கவிதையில் சமூகத்திற்க்கு சவுக்கடி கொடுத்து இருக்கிறீர்கள் நண்பரே... அனைத்தும் அருமை.

    ReplyDelete
  2. /// உள்ளத்தில் இருக்குது உறுதி!
    உழைப்புக்கு கிடைக்குது வெகுமதி!
    ஆணுக்கிங்கு பெண் சம நீதி!////

    கடைசிக் கவிதையும் அதுக்கு கொடுத்திருக்கும் படமும் அது கற்றுக் கொடுக்கும் பாடமும் அசத்தலோ அசத்தல்.

    லிமரிக் என்றால் என்ன.....?

    ReplyDelete
  3. காலத்திக்கேற்ற லிமரிக் கவிதைகள் அருமை !

    ReplyDelete
  4. miga arumai.nattu natapai nallamai kanpither nandri kavingere

    ReplyDelete
  5. லிமரிக் கவிதைகள் அருமை
    வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  6. சூப்பரோ சூப்பர் சுரேஷ்! கலக்கறீங்க !!!

    ஆட்கொல்லி நோய் எபோலா!
    ஆப்பிரிக்காவில் அடித்தது தபேலா!
    அகிலமே நடுங்குகிறது கோபாலா!// ஹைலைட்...

    ReplyDelete
  7. சிறந்த பாவடிகள்
    தொடருங்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2