தளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ கவிதைகள்!
சிறகடித்த பூ
சிந்தை மயங்கியது
வண்ணத்துப்பூச்சி!
வண்ணத் தூவல்
ஒட்டிக்கொண்டது மனசு!
வண்ணத்துப்பூச்சி!
அடைகாத்தும்
தப்பிவிட்டது நிலா
மேகங்கள்!
திருடிச்சென்றதை
திருப்பிக் கொடுத்தன
மேகங்கள்!
மழை!
சுவரில் கிறுக்கல்கள்
மகிழ்ந்தார்கள்!
குழந்தை!
தலை தூக்கி ஆடியது!
கலவரம்!
நாகப்பாம்பு!
நசுக்கினார்கள்!
துளிர்விட்டது!
நடைபாதையில் புல்!
ஆயிரம் பேர் ரசித்தனர்!
ஆரவாரித்தது
கடல்!
கிழித்துப் போட்டார்கள்!
மவுனமாய் இருந்தது!
நாட்காட்டி!
பூத்து மணத்தது
குழந்தையிடம்
குறும்பு
ஆயுதம் இல்லாமலே
சரணாகதி!
குழந்தையின் சிரிப்பு!
எதுவும் கலக்காமலே
இனித்தது
குழந்தைகொடுத்த காபி!
ஒளி மங்கியதும்
அழகானது பூமி!
மாலை!
வாய் திறவாமலே
வானிலை அறிவிப்பு!
தும்பிகள்!
நீர்த் தெளித்ததும்
கோலம் போட்டன
பசுமை!
கருத் தரிக்காமலேயே
கன்று ஈன்றது
வாழை!
ஓசை எழுப்பினாலும்
உல்லாசமாய் வந்தது தூக்கம்!
காற்று!
பூமியில் விழுந்ததும்
அழுக்கானது
மழை நீர்!
தங்கள் வருகைக்கு நன்றி
!பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
அழகான கவிதைப் பூங்கொத்து...
ReplyDeleteஅனைத்தும் அருமை ரசித்தேன்.
ReplyDeleteஅதிலும் ,
"//கருத் தரிக்காமலேயே
கன்று ஈன்றது
வாழை!//"
இந்த வரிகள் மிகவும் ரசிக்க வைத்தன.
வாழ்த்துக்கள்.
திருடிச்சென்றதை
ReplyDeleteதிருப்பிக் கொடுத்தன மேகங்கள்!
மழை!
கருத் தரிக்காமலேயே
கன்று ஈன்றது
வாழை!
பூமியில் விழுந்ததும்
அழுக்கானது
மழை நீர்!
அருமை! அனைத்துமே ரசித்தோம்!
கவிதை மழையாய் பொழிகிறது நண்பரே,,,,, வாழ்த்துக்கள்.
ReplyDeleteஹைக்கூக்கள் அருமை....
ReplyDeleteஅனைத்தும் அருமை மிகவும் ரசித்தேன்.
ReplyDeleteஅனைத்தும் அழகான கற்பனைகள் சுரேஷ்.
ReplyDeleteஅடைகாத்தும்
தப்பிவிட்டது நிலா
மேகங்கள்!
இது சூப்பரோ சூப்பர்.
அருமை தளிர் ...
ReplyDeleteவாழ்த்துக்கள்