கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 14
ஜோக்ஸ்!
21
1. அவர் போலி டாக்டரா இருப்பார்னு எப்படி சந்தேகப்
படறீங்க?
அவர்
கிளினிக்ல மருந்துக்கு கூட கூட்டம் இல்லையே!
2. டெஸ்ட் போட்டிக்கும் டி 20க்கும் என்ன வித்தியாசம்?
அடிச்சு அவுட் ஆறது டி 20 ஆடாமலேயே அவுட் ஆகறது டெஸ்ட் போட்டி!
3. தலைவர் எதையுமே வித்தியாசமா பண்ணுவார்?
அப்படி
என்ன பண்ணினார்?
தன்னோட
எதிரிகளை அழவைக்கணும்னு அஞ்ஞான் சி.டியை பார்சல் பண்ணி அனுப்பி இருக்கார்!
4. தலைவருக்கு கட்சிக்குள்ளேயே எதிரிகள் பெருகிட்டாங்க?
எப்படிச்
சொல்றே?
அஞ்ஞான்
படம் பார்க்க கூட்டிட்டு போயிருக்காங்களே!
5. மூணு டெஸ்ட் ஆடுறதுக்கு ஒரே வாரத்துக்கு டூர் அரேஞ்ச்
பண்ணியிருக்கீங்களே எப்படி சாத்தியம்!
டூருக்கு
வரப்போறது இந்தியன் டெஸ்ட் டீம் ஆச்சே! இதுவே அதிகம்!
6. என் மனைவிகிட்ட தினமும் என் கைதான் நீளும் ஒரு நாள்தான்
அவ கை நீளும்!
எப்படி
சொல்றே?
முப்பதாம்
தேதி சம்பளத்தை வாங்க மட்டும் அவ கை நீளும் ஒண்ணாம் தேதியிலிருந்து தினமும்
பாக்கெட் மணிக்கு என் கை நீளும்!
7. கேடி கபாலிக்கிட்ட இருந்து போன் வந்திருக்கு சார்!
என்னவாம்?
வழக்கமா வாங்குற மாமுல்ல ஆடித்தள்ளுபடி
தருவீங்களான்னு கேக்கறான்!
8. ஆனாலும் என்
மாமனாருக்கு இவ்ளோ அழுத்தம் கூடாது?
ஏன்
என்ன ஆச்சு?
உங்க
உடம்புல இவ்ளோ காயம் பட்டும் வீட்டுல ஒரு சாமானும் நசுங்கலியேங்கிறார்!
9. நம்ம தலைவருக்கு கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லை!
என்ன
பண்றார்?
எதிர்கட்சி
தலைவர் பதவி கொடுக்கலைன்னா பராவாயில்லை பக்கவாட்டு கட்சி தலைவர் பதவியாவது
கொடுங்கன்னு கேட்கிறார்!
10. மன்னா எதிரியிடம் இருந்து மெசேஜ் வந்துள்ளது!
என்னவாம்?
ஒரு
10 ஜி.பி டேட்டா அவர் போனுக்கு ரீசார்ஜ் பண்ண வேண்டுமாம் இல்லாவிட்டால் நீங்கள்
புறமுதுகிட்ட காட்சிகளை வாட்ஸ் அப்பில் போட்டுவிடுவாராம்!
11. மன்னருக்கு வர வர நாக்கு நீளமாகிவிட்டது!
எப்படிச் சொல்றே?
எதிரி நாட்டு சிறையில் உணவு நன்றாக
இருக்குமான்னு கேக்கறாரே!
12. திட்ட கமிஷனை கலைக்கப் போறேன்னதும் தலைவருக்கு கோபம்
வந்துருச்சு!
அப்புறம்?
இதுவரைக்கும்
நீங்க கமிஷன் வாங்கிட்டு எங்க ஆட்சியிலே மட்டும் கலைச்சா என்ன நியாயம்னு பொங்கி
எழுந்துட்டார்!
13. வாழ்க்கை ஒரு வட்டங்கிறதை இப்போதான் புரிஞ்சுகிட்டேன்
மந்திரியாரே!
எப்படி மன்னா?
எதிரி
மன்னன் எங்கே போனாலும் ரவுண்டு கட்டி அடிக்கிறானே!
14. அந்த டாக்டருக்கு குழந்தை மனசு!
அதுக்காக
பேஷண்டுக்கு மாத்திரைக்குப் பதிலா சாக்லேட் கொடுக்கிறது கொஞ்சம் கூட நல்லா இல்லை!
15. கோயில்ல பிரசாதம் கொடுக்கிற எடத்தில என்ன கலாட்டா?
தயிர்சாதத்தோட
ஊறுகாயும் தரமாட்டீங்களான்னு யாரோ கேட்கறாங்களாம்!
16. காது குத்துவிழாவுக்கு தலைவரை கூப்பிட்டது தப்பா
போச்சு!
ஏன்?
பையனுக்கு காது குத்திட்டு கம்மலை அவர்
பாக்கெட்ல போட்டுண்டு போயிட்டார்!
17. தலைவர் சின்னவீடு வெச்சிருக்கிற விவகாரம் மேலிடத்திற்கு
தெரிஞ்சிடுச்சு!
அப்புறம்?
பெருசா ஒரு வீடு வாங்கிக் கொடுத்து
சமாளிச்சிட்டார்!
18. தலைவருக்கு பதவி ஆசை அதிகம்னு எப்படி சொல்றே?
மணிவிழா கொண்டாடியும் இன்னும் இளைஞர் அணித்
தலைவராவே இருக்காரே!
19. பிறந்தநாள் விழா கொண்டாடியதில தலைவர் மனசு
நிறைஞ்சிருச்சாமே!
பின்னே
அவர் வைச்சிருந்த உண்டியலும்தான் நிறைஞ்சிருச்சே!
20. கல்யாண மாப்பிள்ளையை எதுக்கு வன்கொடுமை பாதுகாப்பு
சட்டத்துல கைது செய்து கொண்டு போறாங்க!
புது
மனைவியோட ‘அஞ்ஞான்’ படம் பார்க்க கூட்டிட்டு போனாராம்!
21. எதுக்கு அந்த கவர்ச்சி நடிகை வருத்தமா இருக்காங்க!
படத்துல
அதிகமாக கவர்ச்சி காட்டறாங்கன்னு எல்லோரும் ‘கண்டமேனி’க்கு திட்டறாங்களாம்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த
கமெண்ட்களை அனுப்பி ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
உங்கள் தளத்தில் நகைச்சுவை துணுக்குகள் அருமையாக உள்ளது
ReplyDeleteதலைவர் எதையுமே வித்தியாசமா பண்ணுவார்?
ReplyDeleteஅப்படி என்ன பண்ணினார்?
தன்னோட எதிரிகளை அழவைக்கணும்னு அஞ்ஞான் சி.டியை பார்சல் பண்ணி அனுப்பி இருக்கார்!
அஞ்சான் காச்சல் உங்களையும் விடலையா?
6>>>மாசம் முழுவதும் அவர் கை நீளும் என்றதும் அவ்வளவு தைரியமா என நினைத்தேன் ,நீண்டது இதுக்குத்தானா ?
ReplyDeleteஅனைத்தையும் ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி நண்பரே.
ReplyDeleteசிரித்தேன்
ReplyDeleteரசித்தேன்
நன்றி நண்பரே
அனைத்துமே ''குபீரென'' சிரிப்பை வரவழைத்தன நண்பரே....
ReplyDeleteவாழ்க்கை வட்டம் உட்பட அனைத்தயும் ரசித்தேன் சார் !!!
ReplyDelete