கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 12

ஜோக்ஸ் –  



1.      தலைவர்கிட்ட சும்மா ஒரு பேச்சுக்கு நான் உங்களுக்கு கடன் பட்டிருக்கேன் தலைவரேன்னு சொன்னது தப்பா போச்சு!
    ஏன்? என்ன ஆச்சு?
   எவ்வளவு கடன்? வட்டியோட திருப்பிக்கொடுத்துட்டு போன்னு பிடிச்சு வைச்சிக்கிட்டாரு!

2.      மைனர் ஆபரேஷன் தான்னு சொல்லிட்டு ஏன் வருத்தப்படறீங்க டாக்டர்?
என்னோட பீஸ் மேஜரா குறையுமேன்னுதான்!

3.      நம் மன்னரின் உடம்பு பஞ்சு போல லேசானதுன்னு எப்படி சொல்றே?
    எதிரி மன்னன் துவைச்சு எடுத்திட்டானே!

4.      தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பா போச்சு!
ஏன்?
வர்றவங்க கிட்ட துண்டுக்குப் பதிலா கோட்டும் ஸ்டெத்தாஸ் கோப்பும் கேக்கறார்!

5.      ஏ.சி வந்தும் உங்களுக்கெல்லாம் வியர்த்து வழிஞ்சதா ஆச்சர்யமா இருக்கே?
அது அஸிஸ்டெண்ட் கமிஷணர்!

6.      பியுட்டிக்கும் ட்யுட்டிக்கும் என்ன ஒத்துமை?
பியுட்டியை கட்டனா பிரச்சனை! ட்யுட்டியை கட்டலைன்னா பிரச்சனை!


7.      நர்சரி பள்ளி திறப்பு விழாவுக்கு வந்த தலைவர் மானத்தை வாங்கிட்டார்!
என்ன பண்ணார்?
நர்சரி பள்ளின்னு சொல்றீங்க ஒரு நர்ஸைக் கூட காணலியேன்னு கேக்கறார்!

8.      ஒரு வாரம் ஆபிஸுக்கு லீவ் போடறீங்களே என்ன விஷயம்?
டாக்டர் பகல்ல தூங்க கூடாதுன்னு சொல்லிட்டார் அதான்!

9.      மன்னா! புலவரை எதிரியிடம் சமாதானம் பேச அனுப்பியது தவறாகிவிட்டது!
என்ன ஆயிற்று?
 புலவரின் பாட்டு எதிரியை கோபப்படுத்தி நமக்கு வேட்டு வைத்துவிட்டது!

10.  பொன் நகைன்னாலே என் வொய்ஃபுக்கு பிடிக்காது!
பராவாயில்லையே!
அட நீ வேற பிளாட்டினம், டைமண்ட்னு ஏகப்பட்ட செலவை வைக்கிறா!

11.  என் மனைவிக்கும் எனக்கும் சண்டை நடந்தா வெளியே தெரியவே தெரியாது!
    எப்படி?
   எல்லாம் உள்காயமாத்தான் இருக்கும்!


12.  உங்க ஆபிஸ் மேனேஜர் ஜொள்ளுப் பேர்வழியாமே!
ஆமாம்! ஆபிஸ்லே சேருக்குப் பதிலா ‘சோபா’வை த்தான் யூஸ் பண்ணுவார்னா பார்த்துக்கோயேன்!

13.  தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சுன்னு மன்னர் சொல்கிறாரே எதை?
எதிரி மன்னன் இவர் தலைக்கு குறிவைத்தான். இவர் தலைப்பாகையை கழற்றி அவர் காலடியில் வைத்து பிழைத்ததைத்தான் சொல்கிறார்!


14.  என்னோட அம்மாவுக்கும் மனைவிக்கும் ‘நான்’னா ரொம்ப பிடிக்கும்!
ரொம்ப கொடுத்து வைச்சவண்டா நீ!
நீ வேற அந்த  ‘நானு’க்காக நான் இல்ல தினமும் ஓட்டலுக்கு அலைய வேண்டி இருக்குது!

15.  பை நிறைய காய்கறியோட போறவன் கிட்ட பர்ஸை அடிச்சது தப்பா போச்சு!
ஏன்?
காலியாயிருக்கு பர்ஸ்!

16.  மாப்பிள்ளை காய்கறி வியாபாரம் செய்யறார்!
அவ்ளோ பெரிய இடம் வேணாம்ங்க நமக்கு ஏத்த இடமா பாருங்க தரகரே!

17.  இது நானா சேத்த கூட்டம் இல்லை தானா சேர்ந்த கூட்டம்னு தலைவர் எதை வச்சு சொல்றார்!
மெரினாவுல கூட்டம் நடத்தற தைரியத்துலதான்!

18.   புலவரின் பாடப் பாட மன்னர் ஆழ்ந்துவிட்டார்!
     பாட்டிலா…?
   இல்லை இல்லை! உறக்கத்தில்!

19. சில்லறை தகராறுக்கு பஞ்சாயத்து பண்ண தலைவரை கூப்பிட்டீங்களே என்ன ஆச்சு?
   கட்ட பஞ்சாயத்து பண்ண பெரிய நோட்டா வாங்கிட்டாரு!

20.  வாஷிங் மெசின் வாங்கறதை தண்ட செலவுன்னு சொல்லி என் பொண்டாட்டி தடுத்துட்டா!
     அடடா!
நீ வேற நீங்களே நல்லா துவைக்கிறப்ப அது எதுக்கு தண்டம்னு கேக்கறா!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!



Comments

  1. எல்லாமே அருமையாக இருக்கிறது நண்பா..
    மெயில் அனுப்பியிருந்தேனே... ஒரேயொரு கேள்வி மட்டும்.

    ReplyDelete
    Replies
    1. முன்பே பதில் அனுப்பி இருந்தேனே நண்பா! இப்போது மெயில் எதுவும் வரவில்லையே!

      Delete
  2. அருமை... நன்றாக சிரித்தேன்.. தொடர்ந்து எழுதவும்.

    ReplyDelete
  3. அருமை
    சிரித்தேன்
    ரசித்தேன்
    நன்றி நண்பரே

    ReplyDelete
  4. அனைத்தும் அருமை. ரசித்து சிரித்தேன்

    ReplyDelete

  5. சிறந்த நகைச்சுவைப் பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  6. ஹாஹாஹா.....எல்லாமே சிரிப்புதான்.....

    ReplyDelete
  7. அனைத்தும் ரசித்தேன் அருமை அருமை தொடருங்கள் வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  8. உங்களின் இந்த சிரிப்பு எங்களின் கவலைக்கு நல்ல மருந்து

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2