தளிர் சென்ரியு கவிதைகள்! பகுதி 8

தளிர் சென்ரியு கவிதைகள்!


வெட்டும் முன்னே
உயிரை விட்டது!
தமிழக மின்சாரம்!

வளர்ந்தன சாலைகள்!
அழிந்தன
கிராமங்கள்!

பிடிப்பதாக சொல்லி
விடுகிறார்கள்
புகை!

பகையாளி ஆனாலும்
பலரோடு உறவாடுகிறது
பாக்கும் சிகரெட்டும்!

மழைவிட்டும்
சலசலப்பு அடங்கவில்லை!
தெலுங்கானா!

பிறந்தநாளுக்கு
பிறப்பெடுக்கின்றன
விதவிதமான விநாயகர்கள்!

முதலிடம் பிடித்தனர்
குடிமகன்கள்!
டாஸ்மாக்!

வீங்கிப்போன பொருளாதாரம்
உடைபட்டான்
இந்தியன்!


நவீன பயிரிடல்!
நச்சுக்கள் ஆகின்றது
நல்லுணவு!

பீட்ஸாவும் பர்கரும்
டாடா காண்பித்தன
கடலைமிட்டாய்க்கு!

களம் புகுந்த அரசியல்!
கண்ணாமூச்சி ஆடியது!
விளையாட்டு!

விலை போகும் விருதுகள்!
வீழ்ச்சியில் திறமை!
எழுச்சியில் ஊழல்!

 வலுவுள்ளவன் கையில்
 வதைபடுகின்றன
 வளங்கள்!


வளர்ச்சிக்கு விதை ஊன்றினார்கள்!
அழிவு ஆரம்பமானது!
பன்னாட்டு நிறுவனங்கள்!


கொதித்து
அடங்கிப்போனது!
கூடன் குளம்!

கோடிகளை இரைத்து
கொள்ளிவைத்துக் கொண்டார்கள்
கூடன்குளம் அணு உலை!

எல்லையில்லா மீன்கள்!
எல்லை தாண்டியதும்
இறந்தான் மீனவன்!

இன்றைய வருமானம் அறியாதவன்
நாளைய எதிர்காலம் சொல்கிறான்!
கிளி ஜோஸ்யன்!


நெல்லுக்கு விலை போன கிளி
சொல்லுகிறது

எதிர்காலம்!

வருங்காலத்தை இழந்த கிளி
சொல்கிறது உங்களது
எதிர்காலம்!

கடிதப் போக்குவரத்தை
காணாமல் செய்தன
கைபேசிகள்!

உள்ளங்கையில் உலகம்!
சுருங்கிப்போனது
சுற்றம்!

தங்கள்  வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

 1. ""இன்றைய வருமானம் அறியாதவன்
  நாளைய எதிர்காலம் சொல்கிறான்!
  கிளி ஜோஸ்யன்!""

  வலிக்கும் உண்மைகள் சார், உண்மையிலேயே மிகவும் அருமை ...

  ReplyDelete
 2. கிளி ஸோசியத்தை கிளி, கிலி கிழிச்சுட்டீங்க நண்பரே,,,, வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. நீங்க சொன்ன கிளி ஜோசியக் கவிதைகள் ஜோர் ஜோர் !
  நாட்டு நடப்பை சில வரிகளில் படம்பிடித்து காட்டி விட்டீர்கள் ,அருமை !

  ReplyDelete
 4. சூப்பரோ சூப்பர். அனைத்தையும் சேகரித்து ஒரு புத்தகமாய் வெளியிடலாம் ஐயா.

  ReplyDelete
 5. பிடிப்பதாக சொல்லி
  விடுகிறார்கள புகை!!

  அருமை அருமை.
  அனைத்தும் அருமை சுரேஷ்.

  ReplyDelete
 6. கிளி ஜோஸ்ய கவிதைகள் அனைத்தும் மிக அருமை நண்பரே

  ReplyDelete
 7. பிடிப்பதாக சொல்லி
  விடுகிறார்கள
  புகை!!

  நெல்லுக்கு விலை போன கிளி
  சொல்லுகிறது

  எதிர்காலம்!

  வருங்காலத்தை இழந்த கிளி
  சொல்கிறது உங்களது
  எதிர்காலம்!//

  எல்லாமே சூப்பர் சுரேஷ்!!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2