புகைப்பட ஹைக்கூ 51
புகைப்பட ஹைக்கூ 51 வரவில்லை தண்ணீர் வந்தது கண்ணீர்! மது ஓடும் நாட்டில் மனிதனுக்கு இல்லை தண்ணீர்! புனிதநீர் ஆனது கழிவு நீர்! இல்லை தண்ணீர்! தாகம் அறியவில்லை தண்ணீரின் குணம்! குணம் கெட்டதும் குடிநீரானது கழிவு நீர்! விலை போன தண்ணீர் வீதியில் திரிவோருக்கு கழிவு நீர்! திக்கெட்டும் அம்மாவாட்டர்! திக்கற்றவர்களுக்கு டிரைனேஜ் வாட்டர்! தணியாத தாகம்! தரம் அறியா சோகம்! கழிக்கப்பட்டவர்கள் நாடுகிறார்கள் கழிவை! வீதிக்கு வீதி டாஸ்மாக்! தொலைந்துபோனது தெருக்குழாய்! ஆட்சிக்கு இல்லை பாஸ்மார்க்! மிளிரும் தமிழகத்தின் ஒளிந்த பக்கங்கள்! தெருவோர மக்களின் தீர்த்...