ஏன் என்ற கேள்வியும்! அதிசய தகவல்களும்!



மிருகங்களின் கண்கள் இரவில் மின்னுவது ஏன்?

சில விலங்குகளின் கண்களில் ரேடியம் உள்ளது. அதன்மீது ஒளி படும்போது அவை மின்னும். இதுவே விலங்குகளின் கண்கள் மின்ன காரணம்.

சாக்கடலில் மிதக்கலாம்!
நீந்தத் தெரியாதவர்கள் கடலில்  மிதக்க முடியாது. ஏனேனில் கடல் நீரின் அடர்த்தி (எடை) நம் எடையைவிட குறைவு. ஆனால் சாக்கடலில் நீந்த தெரியாதவனும் மிதக்கலாம். ஏனேனில் அந்த கடலில் சாதரண கடல் நீரைவிட ஏழுமடங்கு அதிகமான உப்பு உள்ளது.

கடற்கரை பிரதேசங்களில் அதிகமாக வியர்ப்பது ஏன்?

கடற்கரை பிரதேசங்களில் காற்றில் ஈரப்பசை அதிகம் எனவே உடல் வியர்க்கிறது.

தொடும்போது மரத்தை விட உலோகம் குளிர்ச்சியாக இருப்பது ஏன்?

உலோகம் எளிதில் கடத்தி மரம் அரிதில் கடத்தி எனவே உலோகம் குளிர்ச்சியாக உள்ளது.

பெட்ரோலில் எரியும் தீயை தண்ணீர் ஊற்றி அணைக்க முடியாது ஏன்?

  பெட்ரோல் தீயின் வெப்பம் தண்ணீரை நீராவியாக ஒரு நொடியில் மாற்றிவிடும். அதனால் தீயை அணைக்க முடியாது.

மேகம் சூழ்ந்த இரவு குளிர்ச்சியாக இருப்பதில்லை ஏன்?

 பூமியிலிருந்து வரும் வெப்ப கதிர்களை மேகங்கள் ஏற்காமல் தவிர்ப்பதால் பூமி வெப்பமாக இருக்கிறது.

அதிசயம் ஆனால் உண்மை!

 ஒரு நெருப்பு கோழியின் கண் அதன் மூளையை விட பெரிதானது!

சீனாவில் ஒரு விலங்கியல் பூங்காவில் பெண்புலிக்கும் ஆண் சிங்கத்திற்கும் வினோதமான புலியும் சிங்கமும் கலந்த குட்டி பிறந்துள்ளது. கலப்பினமான இதன் தலைப்பகுதி சிங்கத்தை போலவும் உடல் பகுதி புலியைப் போலவும் உள்ளது.

பூமியில் 60 கிலோ எடையுள்ள மனிதன் சந்திரனில் 10கிலொ எடையுள்ளவனாக இருப்பான். அதே மனிதன் சூரியனில் 1680கிலோ எடையுள்ளவனாக இருப்பான். இருக்க முடிந்தால்.

நம் கண்களின் ஆரம் 1செமீ, எடை 7கிராம் ஒளியுணர் செல்கள்13கோடி ஒருவருடத்தில்சுமார் 1 கோடி முறை நாம் கண் இமைக்கிறோம். 200கிராம் கண்ணீர் இச்செயலில் செலவாகிறது.

தர்பூசணி பழங்களை முதல் முதலில் இந்தியாவில் அறிமுகம் செய்தவர் முகலாய மன்னர் பாபர்.

ஒரு கன அங்குல இரத்தத்தில் 7 ஆயிரம் கோடி அணுக்கள் உள்ளன. இது உலக மக்கள் தொகையைவிட பல மடங்கு அதிகம்.

மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகள் என்றால் பயம். இதற்காக பாரிஸ் அரண்மணையை சுற்றி பூனைகள் நடமாட்டம் இல்லாத வகையில் கண்காணிக்கப்பட்டது.

பல சமயத்தில் பல்வேறு புத்தகங்களில் படித்ததன் தொகுப்பு!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள் நன்றி!

Comments

  1. அறியாத பல அரிய தகவல்களை
    தங்கள் பதிவின் முலம் அறிந்து கொண்டேன்
    பயனுள்ள பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அடேங்கப்பா! பொது அறிவு விஷயங்கள் பலவற்றை சொல்லிவிட்டீர்கள்.

    ReplyDelete
  3. அருமையாக பகிர்ந்துள்ளீர்கள். அறியாதவற்றை அறிந்து கொண்டேன். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே. தொடருங்கள்.

    ReplyDelete
  4. தெளிவாக கூறி இருக்கிறிர்கள் பகிர்தமைக்கு நன்றி

    ReplyDelete
  5. நிறைய தெரியாத தகவல்கள் தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  6. அனைவரும் அறிந்து கொள்ளப் பகிர்ந்தது..நன்று! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. நல்ல தகவல்கள்... ஸ்வாரசியமாக இருந்தது!

    என் வலைபதிவில் "ஒரு தாயின் பிராத்தனை".....

    ReplyDelete
  8. அறியாத புதுத் தகவல்களுக்கு நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!