துணை


துணை 

முதன் முதலில் அந்த பிச்சைக் காரனை ஒரு ஞாயிற்றுக்கிழ்மையில் பார்த்தேன். பூங்காவுக்கு சென்றபோது வாசல் மரத்தடியில் அமர்ந்து இருந்தான் கையில் ஒர் ஆர்மோனியபெட்டியுடன். அதை இசைத்துக்கொண்டு அவன் பாடுகயில் ஜேசுதாஸ் ஞாபகத்திற்கு வந்தார். நல்ல சாரீரம்.கூடவே ஒர்நாய்க்குட்டியும் தலையசைத்து ரசித்துக்கொண்டிருந்தது ‘ஹிஸ் மாஸ்டர் வாய்ஸை” .
     அதற்கப்புறம் நான் அவனை பலமுறை அந்த பூங்கா வாயிலில் பார்ப்பதுண்டு.நான் அவனின் பாடல்களுக்கு ரசிகனாகி அந்த பாடல்களை கேட்பதற்கென்றே பூங்காவிற்கு தினமும் செல்ல ஆரம்ப்பித்தேன். அந்த நாய் குட்டியும் என்னுடன் நன்கு பழக ஆரம்பித்து விட்டது.
           அந்த கண்ணில்லா குருட்டு பிச்சைக்காரனுக்கு உற்ற துணையாக இருந்தது அந்த நாய்க்குட்டி. கல்லெடுத்து எறியும் வாண்டுகளை குரத்து துரத்தும். பிச்சைக்கரன் பாடலுக்கு ஆடும் சதா அவனுடனேயே இருக்கும் அந்த நாய்க்குட்டி.
       அன்று அவன் பாடலைக்கேட்க ஆவலாக பூங்கா சென்றபோது முனிசிபாலிடிக்காரர்கள் அந்த நாய்க்குட்டியை பிடித்து வேனில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். பிச்சைக்காரனோ கெஞ்சிக்கொண்டிருந்தான் அது தெருநாய் இல்லீங்கோ என் நாய் என்னோட துனைங்க ஐயா கொஞ்சம் கருணை காட்டுங்கய்யா தயவு செஞ்சு அத உட்டுடுங்கய்யா என்று புலம்பிக்கொண்டிருந்தான்.
      நீயே ஒரு தெரு நாய் உனக்கொரு நாயாடா? என்று அவர்கல் நாயை வேனில் எற்ற நான் சார் அது சின்ன குட்டி சார் அவன்கூடத்தான் ரொம்ப நாளா இருக்கு பாவம் விட்டுடுங்க என்ற போது தோ யா வந்துட்டாரு வள்ளல் நாய் இங்க வர போறவங்கள கடிக்கிறதா கம்ப்ளைண்ட் வந்திருக்குய்யா இது பார்க்கு நாலு குழந்தைங்க வந்து விளையாடுற இடம். அதெல்லாம் விடமுடியாது. என்று வேனில் ஏறிச்சென்று விட்டார்கள்.

     என்னாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை அன்று அந்த பிச்சைக்காரனின் பாடல்களில் ஒரே சோக கீதம் தன் துணையை பிர்ந்த சோகமது.
       மறுநாள் காலை அவ்வழியே சென்ற போது கண்ட காட்சி திடுக்கிட வைத்தது. பிச்சைக்காரன் தங்கியிருந்த அந்த மரத்தின் அடியில் ஒரு லாரி மோதி நின்றிருக்க அந்த பிச்சைக்காரன் உடல் நசுங்கி இறந்திருந்தான்.
       ஆண் மகன்றிலை பிறிந்த பெண் மகன்றிலின் கதை நினைவுக்கு வந்தது எனக்கு மனம் கனத்து போனது.

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!