கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 69

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 69


1.    வீட்டு வாசல்ல நிறைய பேரு நிக்கறாங்களே தொண்டர்களா?
  இல்ல குண்டர்கள்! நீங்க கட்சி நடத்த வாங்கின கடனை திருப்பிக் கேட்டு வந்திருக்காங்க!

2.   அந்த அமைச்சர் பேசனதும் மேடையில இருந்த எல்லோரும் அப்படியெ ஷாக் ஆகிட்டாங்களா? ஏன்?
  அவர் மின்சாரத் துறை அமைச்சர் ஆச்சே!

3.   அவர்தான் பல கோடிகளை கடனா வாங்கின தொழிலதிபர்!
  ஓகோ! கோடிகளை கடனா வாங்கின கேடி இவர் தான்னு சொல்லு!

4.   எங்க வீட்டுல நாலு நாளைக்கு ஒரு தரம்தான் கிரைண்டர் போடுவோம்!
பரவாயில்லை! ரொம்ப சிக்கனமாத்தான் இருக்கீங்க!
நீ வேற மத்த நாள்ல நானே உரல்ல அரைக்கணும்னு சொல்ல வந்தேன்.


5.   புலவரே! உம் பாட்டில் கூர்மை இல்லை!...
மன்னா! உங்கள் உடைவாளில் கூடத்தான் கூர்மை இல்லை அதைப்பற்றி நான் ஏதாவது சொன்னேனா…?

6.   என் வாள் இரத்தம் குடிக்க காத்துக் கொண்டிருக்கிறது மந்திரியாரே…!
  மட்டன் கடையில் பத்துகிலோ மட்டனுக்கு ஆர்டர் பண்ணிவிடட்டுமா மன்னா?

7.    நம்ம புதுப்படத்தோட ஸ்கிரிப்ட்ல நிறைய ஓட்டைங்க இருக்குதுன்னு டைரக்டர் சொன்னது சரியா போயிருச்சு!
   எப்படி?
படத்தோட கதை “லீக்’ ஆயிருச்சே!

8.   ஆபீஸே என்னை கேலிக் கூத்தாக்கி பார்க்குது!
   ஏன்?
அரை நாள் லீவ் கேட்டேன் ஒரு நாள் கூத்து பார்க்கிறதுக்கு!

9.   தலைவரே நீங்க ஓரு புதிய வரலாறே படைச்சிட்டீங்க!
  என்னய்யா சொல்றே?
உலகத்திலேயே உங்களை கலாய்ச்சித்தான் நிறைய மீம்ஸ் வருது!


10. தலைவர் எதுக்கு பெஞ்சை தட்டிக்கிட்டு உக்காந்திருக்கார்?
  நாளையில இருந்து சட்டசபைக்கு போகணுமே அதுக்கு ப்ராக்டீஸ் பண்ணிக்கிட்டு இருக்கார்!

11. இப்ப என்ன மூழ்கிப் போச்சுன்னு உன் பொண்ணை பத்தி பேசனும்னு சொல்றே?
  அவ முழுகி மூணு மாசம் ஆவப்போதுன்னுதான்.

12.  பிக்பாக்கெட் பக்கிரியோட பொண்ணு கல்யாணத்துக்கு போனது தப்பா போயிருச்சு!
   ஏன்?
 மொய்ப்பணத்தை பாக்கெட்டை கத்தரிச்சு அவனே எடுத்துக்கிட்டானே!

13.  நம் மன்னர் பேருக்குத்தான் மன்னர்!
அப்படியானால் போருக்கு….!
   ரன்னர்!


14. என் பொண்ணை பத்தி ஒரு வார்த்தை குறை சொல்ல முடியாதுன்னு சொன்னீங்க ஆனா அவ கிட்ட ஒரு நிறையும் பார்க்க முடியலையே!
  ஒரு வார்த்தை குறை சொல்ல முடியாது நிறைய சொல்லலாம்னு சொன்னேன்.

15.  என்ன சொல்கிறீர்கள் மன்னா எதிரி கண்ணா மூச்சி காட்டுகிறானா?
  ஆம் மந்திரியாரே க்ரிமினல் கேஸ் ஆட அழைத்தால் வராமல் ஓடி ஒளிகிறானே!

16. ஒரு பேஷண்டை இழுத்து புடிச்சு வைச்சிருக்கிறதா சொல்றீங்களே அவருக்கு என்ன ப்ராப்ளம்?
  கழுத்து புடிச்சிருக்குதாம் டாக்டர்!

17.  தலைவர் அடிக்கடி மேலிட உத்திரவுப்படி நடக்கறேன்னு சொல்றாரே கட்சிக்கு மேலிடம் எங்க இருக்கு?
  அவர் சம்சாரம் சொல்றபடி நடக்கறேன்றதைதான் சிம்பாலிக்கா அப்படி சொல்றாரு!

18.  நம் மன்னர் ஒரே வார்த்தையில் போரை நிறுத்திவிட்டார்!
அப்படி என்ன சொன்னார்?
   “ சரண்” என்றுதான்.

19. வளைகாப்பு விழாவுக்கு தலைவரை கூப்பிட்டது தப்பா போச்சு!
“லாக்கப்”பில் இருக்கும் பிள்ளையை விரைவில் ரிலீஸ் செய்ய வாழ்த்துக்கள்னு பேசிட்டாரு!


20.   நம்ம தலைவருக்கு ஒரு இன்னோவா வாங்கணும்னு ஆசை வந்துருச்சு!
    எப்படி சொல்றே?
ஆளுங்கட்சிக்கு தாவிட்டாரே!

21. எதிரியின் தலையை சீவி விடுவேன் என்று சொன்னதற்கு ஏன் சிரிக்கிறீர்கள் மந்திரியாரே?
  எதிரிக்குத்தான் தலையில் முடியே இல்லையே மன்னவா!

22. இத்தனை தரம் கோர்ட் படியேறி நிற்கிறாயே! உனக்கு வெட்கமா இல்லையா?
  நீங்க கூடத்தான் தினமும் படியேறி கோர்ட்டுக்கு வர்றீங்க அதுக்கு வெக்கவ படறீங்க எசமான்?

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. வாய் விட்டு சிரிக்க வைக்கும் நகைச்சுவைகள். நன்று

    ReplyDelete
  2. ஹாஹாஹா அனைத்தும் வெடிச்சிரிப்பு நண்பரே வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. அனைத்தும் அருமை. பாராட்டுகள்....

    ReplyDelete
  4. ஹாஹாஹா கடைசி அருமை!

    ReplyDelete
  5. ஹஹஹஹ் அனைத்தும் அருமை....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!