தளிர் சென்ரியு கவிதைகள்! பகுதி 8
தளிர் சென்ரியு கவிதைகள்! வெட்டும் முன்னே உயிரை விட்டது! தமிழக மின்சாரம்! வளர்ந்தன சாலைகள்! அழிந்தன கிராமங்கள்! பிடிப்பதாக சொல்லி விடுகிறார்கள் புகை! பகையாளி ஆனாலும் பலரோடு உறவாடுகிறது பாக்கும் சிகரெட்டும்! மழைவிட்டும் சலசலப்பு அடங்கவில்லை! தெலுங்கானா! பிறந்தநாளுக்கு பிறப்பெடுக்கின்றன விதவிதமான விநாயகர்கள்! முதலிடம் பிடித்தனர் குடிமகன்கள்! டாஸ்மாக்! வீங்கிப்போன பொருளாதாரம் உடைபட்டான் இந்தியன்! நவீன பயிரிடல்! நச்சுக்கள் ஆகின்றது நல்லுணவு! பீட்ஸாவும் பர்கரும் டாடா காண்பித்தன கடலைமிட்டாய்க்கு! களம் புகுந்த அரசியல்! கண்ணாமூச்சி ஆடியது! விளையாட்டு! விலை போகும் விருதுகள்! வீழ்ச்சியில் திறமை! எழுச்சியில் ஊழல்! வலுவுள்ளவன் கையில் வதைபடுகின்றன வளங்கள்! வளர்ச்சிக்கு விதை ஊன்றினார்கள்! அழிவு ஆரம்பமானது! பன்னாட்டு நிறுவனங்கள்! கொதித்து அடங்கிப்போனது! கூடன் குளம்! கோடிகளை இரைத்து கொள்ளிவைத்துக் கொண்டார்கள் கூடன்குளம் அணு உலை! எல்லையில்லா மீ...