தளிர் சென்ரியு கவிதைகள்! 4

சுருக்கமாகச் சொல்வதென்றால் கவித்துவம் அதிகமாக இருந்தால் ‘ஹைக்கூ’. கவித்துவம் குறைந்து நகைச்சுவை உணர்வு மேலோங்கி இருந்தால் அது ‘சென்ரியு’. 

சென்ரியுவும் ஜப்பானிய மொழிக்கவிதை. 3 அடிகள் கொண்டது. ஜென் தத்துவம், இயற்கை மற்றும் மெய்யியலோடும் சிறிது தொடர்பு கொண்டு நகைச்சுவை உணர்வை நோக்கமாகக் கொண்டு எழுதப்படுவது சென்ரியு ஆகும். சென்ரியு சமூகம், அரசியல் ஆகியவை குறித்து நகைச்சுவை உணர்வோடும் அங்கத உணர்வோடும் வெளிப்படுத்தும்.

‘சென்ரியு’ என்னும் புனைப்பெயரைக் கொண்ட ‘கராய்ஹச்சிமோன்’ என்னும் ஜப்பானியக் கவிஞர் கி.பி. 18ஆம் நூற்றாண்டில் இவ்விலக்கியத்தை அளித்தார். பின்னர் அக்கவிஞரின் புனைப் பெயரே அக்கவிதை வகைகளுக்கான பெயரும் ஆயிற்று. தமிழில் இவ்வகையை நகைப்பா என்கிறார்கள்.

தமிழ்நாட்டு ‘சென்ரியு’ 3 அடிகள் கொண்டு எழுதப்படுகிறது. அவ்வாறு 3 அடிகள் கொண்டு எழுதப்படுவதை தமிழ் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு ‘சென்ரியு’ வடிவமாகவும் அங்கீகரித்துள்ளார்கள். இது இந்திய சமூகம், அரசியல் ஆகியவை குறித்த போக்கை நகைச்சுவை உணர்வோடும் அங்கத உணர்வோடும் வெளிப்படுத்த ஏற்ற மிகச் சிறந்த வடிவம் ஆகும். எனவே இந்தியாவின் சூழலுக்கு தமிழில் ‘ஹைக்கூ’வை விட ‘சென்ரியு’ சிறந்த வடிவம் /உள்ளடக்கம் ஆகும். 

சென்ரியு விளக்கம்: கவியருவி ரமேஷ், நன்றி: தமிழ்த்தோட்டம் கருத்துக்களம்.

தளிர் சென்ரியு கவிதைகள்!

ஓடியதை
தடுத்தார்கள்
எழும்பியது பிரச்(அணை)!


விழுந்தது இடி!
அடிபட்டது தொழிலாளர்
வாழ்க்கை!

குளங்களில் எழும்பின
குடில்கள்
நலம்விசாரிக்கவந்தது நீர்!

அகலப்பட்ட சாலைகளில்
அடிபட்டு செத்தது
மரங்கள்!

விலைபோன நிலங்கள்!
களை இழந்தது
கிராமங்கள்!

குருவியாய் சேமிப்பு!
உருவிக்கொண்டன
உறுவிலா நிறுவனங்கள்!

கான்கிரிட் காடுகளில்
பயிரிடப்படுகிறது
கல்வி!

பண முதலைகளின்
தினசரி இரையானது
பச்சைக்குழந்தைகளின் கல்வி!

நடமாடும் மிருகங்களின்
நடிப்புக்கு இரையானது
பெண்மை!

சொத்தாக்க நினைத்ததும்
சொத்தையானது
கழகம்!

வாட்டர் குவாட்டர்
விற்பனையில் வளர்கிறது
தமிழகம்!

வியாபாரியான அரசு!
விபசாரியான மக்கள்!
விலைபோனது மானம்!

அடிப்படைகள் விலையானது
ஆடம்பரங்கள் இலவசமானது!
அழிந்துபோனது மனசாட்சி!

அஸ்திவாரமிட்டார்கள்
அழிந்து போனது
அறுபது குடும்பங்கள்!

கட்டிடத்தில் அல்ல!
கட்டுபவன் தலையில்
விழுந்தது இடி!

விதிகளை தளர்த்தியதில்
விதி முடிந்தது
கட்டிடத் தொழிலாளர்கள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கபடுத்துங்கள்!


Comments

  1. 'சென்ரியு' பற்றிய விளக்கத்திற்கு நன்றி. அனைத்தும் அருமை.

    "ஊதியம் வாங்கிவந்து கோவிலுக்குப் போகலாம்
    என்று சொல்லிச் சென்ற அப்பா
    சாமியிடமே சென்றுவிட்டார் " சரியா?

    ReplyDelete
  2. //அஸ்திவாரமிட்டார்கள்
    அழிந்து போனது
    அறுபது குடும்பங்கள்!//
    அக்குடும்பங்களின் கதி...
    நெஞ்சம் கனக்கிறது நண்பரே

    ReplyDelete
  3. இவ்வாறான ஒரு வித்தியாசமான கவிதை அமைப்பை தற்போது தங்களின்மூலமாக அறிந்தேன். நன்றி.

    ReplyDelete
  4. கவிதை அமைப்பினை தெரிந்து கொண்டேன் புதியதாக....

    கவிதைகள் நெஞ்சைத் தொட்டன.

    ReplyDelete
  5. அழகாக எழுதியுள்ளீர்கள்...

    ReplyDelete
  6. ஆழமான கருத்தை மிக அழுத்தமாக சொல்லி, எங்கள் நெஞ்சை பதைப்பதைக்க வைத்து விட்டீர்கள்

    ReplyDelete
  7. கான்கிரிட் காடுகளில்
    பயிரிடப்படுகிறது
    கல்வி!
    அருமையான சவுக்கடி வார்த்தைக(ல்)ள்

    ReplyDelete
  8. கவிதகள் எல்லாமே அருமை..பல நக்கல். நெத்தியடி....

    கான்கிரிட் காடுகளில்
    பயிரிடப்படுகிறது
    கல்வி!

    பண முதலைகளின்
    தினசரி இரையானது
    பச்சைக்குழந்தைகளின் கல்வி!

    குளங்களில் எழும்பின
    குடில்கள்
    நலம்விசாரிக்கவந்தது நீர்!

    அகலப்பட்ட சாலைகளில்
    அடிபட்டு செத்தது
    மரங்கள்!

    விலைபோன நிலங்கள்!
    களை இழந்தது
    கிராமங்கள்!//

    அசத்தல்.....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!