புகைப்பட ஹைக்கூ 75

புகைப்பட ஹைக்கூ 75


யானைப்பசிக்கு
சோளப்பொறி!
குழாய் நீர்!

களிறின் தாகம்
தணித்தது
கார்பரேசன் குழாய்!

நீர் குடிக்க
நீண்டது
நீர் இறைத்த கை!

அடிக்க அடிக்க
ஆனந்தம்!
தண்ணீர் குழாயில் யானை!

குளங்கள் குடில்களானதால்
குழாய்கள் தீர்த்தன
யானையின் தாகம்!

ஒரு குழாயில் வருகிறது
மறு குழாயில் பிடிக்கிறது
யானை!

குழாயடிக்கு அழைத்தது
கோடைவெயில்
யானை!

தூர்ந்த குளங்கள்
பாதை மாற்றின
தும்பிக்கை யானை!

நகரவாழ்வுக்கு
நாக்கை நீட்டியது!
யானை!

உழைப்பை
உறிஞ்சியது
மாமத யானை

இயற்கை சீரழிவு!
இருட்டில் தள்ளியது
யானையின் வாழ்வு!

ஆறியது யானையின்
தாகம்! அடங்குமா
பாகனின் பசி!

கை இருந்தும்
அள்ள முடியவில்லை!
குழாயில் யானை!

அடிக்குழாய்
அகற்றியது
யானையின் தாகம்!

வசந்தத்தை தேடி
வனவாசத்தை இழந்தது
யானை!

நீர் விளையாட்டு
நீர்த்துப்போனது
நகரத்து யானை!

நகர்வலம் வந்ததில்
நலிந்து போனது
களிறு!

புனலை மறந்து
புனலாய் ஆனது
யானை!

பரியது ஆயினும்
வறியது ஆனது
யானை!

சிறுதுளியில்
வெல்லம் கண்டது
களிறு!

ஊரணிகள் மறந்து
ஊருக்குள் வந்தது
யானை!

பொன் வைக்காமல்
பூ வைக்கிறான் பாகன்!
யானையின் தாகம்!

வியர்வை சிந்தியதில்
தணிந்தது
வேழத்தின் வேட்கை!

 வேட்கை மிகுதியில்
 வேழம் இழந்தது
 வாழ்க்கை!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

 1. காலத்தின் அலங்கோலம்.

  ReplyDelete
 2. யானையை வைத்து ஒரு நல்ல கவிதை.

  ஆனால் இன்று அம்மாதிரி கூட யானையை பார்க்க முடியவில்லை.

  ReplyDelete
 3. தொடக்கம் முதல் கடைசிவரை யானை.....அருமை ஐயா.
  www.killergee.blogspot.com

  ReplyDelete
 4. வணக்கம் சகோதரர்
  ஒரு படத்திற்கு இவ்வளவு வரிகள்! அனைத்தும் அருமை. சிறப்பான பகிர்வுக்கு நன்றிகள் சகோதரர். தொடருங்கள்.

  ReplyDelete
 5. அனைத்தும் அருமை... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. காட்டினுள் இருக்க வேண்டிய விலங்கை நாட்டினுள் அழைத்து வந்து அலைக்கழிக்கும் அவலம்.....

  கவிதைகள் நன்று.

  ReplyDelete
 7. சபாஷ் அண்ணா , அருமையாக இருந்தது

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2