புகைப்பட ஹைக்கூ 70

புகைப்பட ஹைக்கூ 70


வண்ணம் பூசியது
மழை!
ஹோலி!

விரட்டிவிரட்டி அடித்தார்கள்
வலிக்கவில்லை!
ஹோலி!

சிதறிய வண்ணங்கள்
சிந்தியது மகிழ்ச்சி!
ஹோலி!

கறைபட்டாலும்
கரைபுரண்டது மகிழ்ச்சி!
ஹோலி!

மாறிமாறி அடித்துக்கொண்டும்
வெடிக்கவில்லை கலவரம்!
ஹோலி!

குளிப்பாட்டியதும்
களிப்பானது மனம்!
ஹோலி!

வசந்தம்பூத்ததும்
வண்ணம் பூசியது!
ஹோலி!

மாக்கோலம் அல்ல
ரங்கோலி!
ஹோலி!

வண்ணம் இறைத்ததும்
வந்தேறியது மகிழ்ச்சி!
ஹோலி!

பொடிமழையில்
புதைந்துபோனது முகம்!
ஹோலி!

வான்மழை அல்ல!
வண்ண மழை!
ஹோலி!

வண்ணத்தூறலில்நனைந்தது
வாலிபர் கூட்டம்!
ஹோலி!

வண்ணக்கரைசலில்
வரையப்பட்டது மகிழ்ச்சி!
ஹோலி!

மழை
ஈரமாக்கவில்லை!
ஹோலி!

வண்ணம்அடித்து
வாழ்த்துசொன்னார்கள்
ஹோலி!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட்செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. நல்ல கவிதைகள்.....

    பலமுறை கொண்டாடி இருக்கிறேன். இம்முறை வீட்டை விட்டு வெளியேறவில்லை! :)))

    ReplyDelete
  2. வான்மழை அல்ல!
    வண்ண மழை!
    ஹோலி!//
    அருமை.

    ReplyDelete
  3. // வெடிக்கவில்லை கலவரம்!
    ஹோலி! //

    அட..!

    ReplyDelete
  4. ஹோலி பண்டிகை முடிஞ்சு அந்த துணிலாம் எப்படி துவைச்சு கரை இல்லாம ஆக்குவாங்கன்னுதான் என் நினைப்பு போகும்.

    ReplyDelete
  5. வண்ணமயமான சிந்தனை.
    வாழ்த்துக்கள் சுரேஷ்.

    ReplyDelete
  6. எண்ணத்தில் உறைந்த வண்ண மயமான கவிதை அருமை !
    வாழ்த்துக்கள் சகோதரா .

    ReplyDelete
  7. ஹோலிப் பண்டிகையயைப் பற்றி அருமையான கவிதை. வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!