Posts

Showing posts from September, 2012

ஆன்றோர் பொன்மொழிகள்!

Image
ஆன்றோர் பொன்மொழிகள்! மொழி மண்ணுலகின் புதல்வி, செயல் விண்ணுலகின் புதல்வி.                             ஜான்சன் தாய்மொழியை செம்மையாக பயன்படுத்த தெரியாத எவனுக்கும் பிற மொழியில் புலமை வராது.                               பெர்னாட்ஷா. ஜனநாயகத்தின்  பொருள் சகிப்புத் தன்மை.                         நேரு. வலிமை, துணிவு, உண்மை, தன்னடக்கம், மரியாதை உள்ளவனே உண்மையான வீரன்.                                அன்னிபெசண்ட்  அரச...

ஏமாற்றாதே! ஏமாறாதே! பாப்பா மலர்!

Image
ஏமாற்றாதே! ஏமாறாதே! செல்வன் ஒருவன் தன் பணப்பையை எங்கோ தொலைத்துவிட்டான். அதில் நூறு பொற்காசுகள் இருந்தன.   என் பணப்பையைக் காணவில்லை! அதை கண்டுபிடித்து தருபவருக்கு பத்து பொற்காசுகள் தரப்படும் என்று ஊரெங்கும் தெரியப்படுத்தினான்.   அந்த பணப்பையை   ஏழைச் சிறுவன் ஒருவன் கண்டெடுத்தான். நேர்மையாளனாகிய அவன் அந்த பையை செல்வனிடம் கொண்டுவந்து கொடுத்தான். தன் பணப்பையை பார்த்தவுடன் செல்வனுக்கு மகிழ்ச்சி. இந்த சிறுவனுக்கு ஏன் வீணாக பத்துப் பணம் தர வேண்டும் என்று மனதிற்குள் கணக்குப் போட்டான். சிறுவனைப் பார்த்து, சிறுவனே இந்த பையில் நூற்றிருபது பொற்காசுகள் வைத்திருந்தேன். இருபது காசுகள் குறைவாக உள்ளது மரியாதையாக கொடுத்துவிட்டால்   உன்னை விட்டு விடுகிறேன் என்று மிரட்டினான்.    சிறுவனோ அஞ்சவில்லை!ஐயா இந்த பையில் இருந்து ஒரு பைசா கூட நான் எடுக்கவில்லை! எனக்குத் தரவேண்டிய பத்து காசுகளை தந்து விட்டால் நான் சென்று விடுகிறேன் என்றான்.பணக்காரனோ என்னுடைய காசுகளை திருடியது மட்டுமில்லாமல் கூலி வேறு கேட்கிறாயா? வா நீதிமன்றத்திற்கு என்று அழைத்து சென்றான்.   நீ...

திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர்

Image
திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர்  சிவானந்தேஸ்வரர் நாலு பேர் போன வழியில் நாமும் செல்வோம் என்றொரு பழமொழி உண்டு. யார் அந்த நால்வர்?முன்னே செல்பவர்களை பின்பற்றி செல்ல வேண்டுமா? இல்லை! சமய குரவர்களான அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர் தான் அந்த நால்வர்.இந்த பெரியோர்கள் அக்காலத்தே வண்டி பாதை வசதிகள் இல்லாத போதும் பல அரிய சிறப்பு வாய்ந்த தலங்களுக்குச் சென்று இறைவனின் சிறப்புக்களை பாடல்களாக பாடி துதித்து இறையருள் பெற்றதோடு மட்டுமல்லாமல் நமக்கு வழிகாட்டியாகவும் உள்ளனர்.     நம் நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் 275 ஆகும். அவற்றுள் தொண்டை நாட்டில் 32 தலங்கள். அவற்றுள் ஒன்றுதான் திருக்கள்ளில். திருஞான சம்பந்தரால் போற்றி பாடப்பெற்ற இந்த அழகிய தலம் இன்று திருக்கண்டலம் என்று அழைக்கப்படுகிறது.  நந்தி தீர்த்தம்      சென்னையில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சென்னை- பெரியபாளையம் செல்லும் வழியில் கன்னிகைப்பேர் என்னும் இடத்தில் இருந்து தெற்கே பிரியும் கிளைச்சாலையில் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திரு...

சுந்தரப்பாண்டியன்! என் பார்வையில்!

Image
சுந்தரப்பாண்டியன்! என் பார்வையில்! சினிமா விமர்சனம் எழுதும் அளவிற்கு எனக்கு சினிமா பற்றிய பெரிய ஞானமெல்லாம் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்களை பார்ப்பதோடு சரி! தியேட்டருக்கு சென்று படம் பார்த்து வருடங்கள் ஆகிவிட்டன. சுந்தரப்பாண்டியனை திங்களன்று ரெட்டில்ஸ் பாலா திரையரங்கில் பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டேன்! அந்த கதையையே தனிப்பதிவாக போடலாம். அது இப்போது வேண்டாம். படத்தை பத்தி ஒரு பதிவு எழுதி பார்ப்போம் என்று எழுதுகிறேன். சினிமா விமர்சகர்கள் மன்னிப்பார்களாக!    சுந்தரபாண்டியன் மதுரை பக்கத்து இளைஞன்! படித்துவிட்டு வேலைக்கு போகாமல் நண்பர்களோடு(பாட்டிமார்களோடு) சுற்றிவருகிறார். அவ்வப்போது முறைப்பெண்ணை கிண்டல் செய்து வருகிறார். அவர்களும் அதை விரும்புகிறார்களாம். அந்த ரூட் பஸ்ஸில் வரும் பெண்ணை அவர் நண்பர் லுக் விட அவருக்கு உதவப் போகிறார். இதற்கு நடுவில் அப்புகுட்டி வேறு அந்த பெண்ணை லவ்வ ஒருமாதம் டைம் கொடுத்து அவரால் கரெக்ட் பண்ண முடியவில்லை என்றால் ஒதுங்கி விட வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். அவர் ஒதுங்க மறுத்...

வித்தியாச விநாயகர்கள்!

Image
வித்தியாச விநாயகர்கள்! செங்குன்றத்திலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ளது பஞ்சேஷ்டி அங்கிருந்து மேற்கே செல்லும் பாதையில் இரண்டு கி.மீ தொலைவில் உள்ளது ஸ்ரீ வாலீஸ்வரர் திருக்கோயில் இங்குள்ள ஸ்ரீ காரிய சித்தி கணபதி முக்கண் கொண்டவர் மேலிரு கரங்களில் கோடரியும் அட்சமாலையும் கீழிறு கரங்களில் மோதகமும் தந்தமும் ஏந்தி தாமரைமலர்மீது அமர்ந்தவாறு தொந்தியில்லாமல் காணப்படுகிறார். பிரம்மன் பூஜித்த இந்த கணபதிக்கு 16 தேங்காய்கள் சூரை விட நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை!   கேரளத்தில் பழவங்காடியில் உள்ள விநாயகர் வலது காலை மடித்து அமர்ந்து கொண்டிருப்பார். வலதுகால் ஆன்மீகத்தையும் இடதுகால் இகலோக சுகங்களையும் குறிக்கின்றன. இவர் ஆன்மீக சுகத்தினை தருகின்றார். இவருக்கு முக்கிய நிவேதனம் தேங்காய். திருவாரூர் மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த பூந்தோட்டம் என்னும் அழகிய கிராமத்தில் மனித முகத்தோடு கூடிய அதிசய கணபதியை தரிசிக்கலாம். பூந்தோட்டத்தில் இருந்து ஆட்டோக்கள் மூலம் செதலப்பதி என்று அழைக்கப்படும் தில தர்பணபுரியை அடையலாம். அங்குள்ள முக்தீஸ்வரர் ஆலயத்தின் எதிரில் இந்த விநாயகர் ஆலயம் ...

பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 9

Image
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 9 உங்கள் ப்ரிய பிசாசு. முன்கதை சுருக்கம்: ராகவனின் நண்பண் வினோத் அழைத்து வரும் பெண்ணிற்கு பேய் பிடித்துள்ளது. அந்த பேயே தன்னை அந்த ஊருக்கு அழைத்து வரச் சொன்னதாக கூறுகிறான் ராகவன். முகேஷின் நண்பன் ரவிக்கும் பேய் பிடித்துள்ளதாக முகேஷ் கருதுகிறான். அவனை திருப்பதிக்கு அழைத்து செல்ல முடிவெடுத்து அழைக்கிறான். முதலில் ஒத்துக் கொள்ளும் ரவி பின்னர் வீட்டில் மறுத்து பேசுகிறான். இனி:   இருள் சூழ்ந்த இரவு வேளையில் சில சில்வண்டுகள் சத்தம் பேயிறைச்சலாக இருந்தது. கிராமம் என்பதால் வேறு சப்தங்கள் இல்லை! ஆங்காங்கே பட்டியில் உள்ள மாடுகள் வாலை சுழற்றும் சப்தங்களும் ஒரு சில நாய்களின் குறைப்புக்களும் தவிர அந்த ஊரே நிசப்தமாக இருந்தது. நள்ளிரவு தாண்டிய நேரம் என்பதால் ஊரின் அனைத்து வீடுகளும் அடைத்துக் கிடந்தன. சிலர் திண்ணையிலும் வாசலிலும் கட்டில் விரித்து படுத்துக் கிடந்தனர்.    புது ஊர் புதிய இடம் என்ற எந்தவித பயமும் இன்றி செல்வி தனியாக நடந்து சென்று கொண்டிருந்தாள். அந்த நள்ளிரவிலும் சில நாய்கள் அவளை கண்டு உரக்க குறைத்தன ஆனால் கிட்டே நெருங்க வில்...

ஆக்ரமிப்பு!

Image
ஆக்ரமிப்பு! “யோவ்! எல்லாத்தையும் அள்ளி வேன்ல போடுங்கய்யா! நான் டீ ஒண்ணு அடிச்சுட்டு வரேன்! சப் இன்ஸ்பெக்டர் கூறிவிட்டு அகல கான்ஸ்டபிள்கள் அந்த தெருவுக்குள் அதிரடியாக நுழைந்தார்கள். யோவ்! எடுய்யா! சீக்கிரம் காலி பண்ணு உங்களுக்கு எத்தனை தரம் சொல்றது மக்களுக்கு இடைஞ்சலா கடை போடக்கூடாதுன்னு! சீக்கிரம் காலி பண்ணுங்க ஐயா வந்துட்டே இருக்காரு என்று கத்தியபடியே நுழையவும் நடை பாதை வியாபாரிகள் அவசர அவசரமாக மூட்டை கட்ட ஆரம்பித்தார்கள்!    அதற்குள் அந்த சப் இன்ஸ்பெக்டர் வந்து விட்டார்! என்னய்யா பாத்துகிட்டு நிக்கறீங்க! அள்ளுங்கய்யா! என்று சத்தம் போடவும் கான்ஸ்டபிள்கள் துரிதமாக நடவடிக்கையில் இறங்கினார்கள்!   ஐயா! ஐயா! இந்த ஒருதரம் விட்டுடங்கய்யா! இனிமே கடை போட மாட்டோம்! பண்டிகை சமயம் அய்யா! கொஞ்சம் தயவு பண்ணுங்கய்யா! என்று ஒரு பெரியவர் கெஞ்ச ஏண்டா! எத்தினி தரம் சொன்னோம்! கேட்டீங்களாடா! இது பொதுமக்கள் நடந்து போற பாதை! உங்களுக்குத்தான் அரசாங்கம் கடை கட்டி கொடுத்திருக்கு இல்லே அங்க போயி வியாபாரம் செய்ய வேண்டியதுதானே!   தப்புதான்யா! மன்னிச்சுடுங்கய்யா! இன்னிக்கு ஒர...

திருஷ்டிகளும் பரிகாரங்களும்! 2

Image
திருஷ்டிகளும் பரிகாரங்களும்! 2 சில வாரங்களுக்கு முன் சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் திருஷ்டிகளும் பரிகாரங்களையும் பற்றி கூறினேன். இந்த பகுதியில் பொதுவான திருஷ்டிகளும் அதற்கான பரிகாரங்களையும் கூறப்போகிறேன். நம்பிக்கை உள்ளோர் தொடருங்கள்! கல்லடி பட்டாலும் படலாம்! கண்ணடி படக்கூடாது! என்பர். அந்த கண்ணடிதான் திருஷ்டி எனப்படுகிறது. மற்றவர் நம்மை பார்க்கும் பார்வையில் ஒரு தீய தாக்கம் ஏற்பட்டு அதனால் பாதிப்பு ஏற்பட்டால் திருஷ்டி பட்டுடிச்சி என்பர். கண்ணேறு என்பது திருஷ்டியின் தூய தமிழ் பெயர்.பிறரோட பார்வை மட்டும் அல்ல நம்மோட பார்வையே கூட சில சமயம் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.   நல்ல வளப்பமாக ஆரோக்கியமாக வாழும் ஒருவர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு இளைத்துப் போகலாம். எப்படி இருந்த மனுசன் இப்படி ஆயிட்டாரே என்று பேசிக்கொள்வார்கள். உடல் ஆரோக்கியம் குன்றிய அவருக்கு எப்படி திருஷ்டி சுற்றுவது? மூன்று தெருக்கள் கூடுமிடத்திலிருந்து சிறிது மண் எடுத்துக் கொள்ளுங்கள் ஒன்பது காய்ந்தமிளகாய் ஒருபிடி உப்பு, கொஞ்சம் கடுகு ஆகியவற்றையும் எடுத்துக் கொண்டு ஒரு கொட்டாங்குச்சி அல்லது இரும்பு ...