வித்தியாச விநாயகர்கள்!



வித்தியாச விநாயகர்கள்!



செங்குன்றத்திலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ளது பஞ்சேஷ்டி அங்கிருந்து மேற்கே செல்லும் பாதையில் இரண்டு கி.மீ தொலைவில் உள்ளது ஸ்ரீ வாலீஸ்வரர் திருக்கோயில் இங்குள்ள ஸ்ரீ காரிய சித்தி கணபதி முக்கண் கொண்டவர் மேலிரு கரங்களில் கோடரியும் அட்சமாலையும் கீழிறு கரங்களில் மோதகமும் தந்தமும் ஏந்தி தாமரைமலர்மீது அமர்ந்தவாறு தொந்தியில்லாமல் காணப்படுகிறார். பிரம்மன் பூஜித்த இந்த கணபதிக்கு 16 தேங்காய்கள் சூரை விட நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை!

  கேரளத்தில் பழவங்காடியில் உள்ள விநாயகர் வலது காலை மடித்து அமர்ந்து கொண்டிருப்பார். வலதுகால் ஆன்மீகத்தையும் இடதுகால் இகலோக சுகங்களையும் குறிக்கின்றன. இவர் ஆன்மீக சுகத்தினை தருகின்றார். இவருக்கு முக்கிய நிவேதனம் தேங்காய்.

திருவாரூர் மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த பூந்தோட்டம் என்னும் அழகிய கிராமத்தில் மனித முகத்தோடு கூடிய அதிசய கணபதியை தரிசிக்கலாம். பூந்தோட்டத்தில் இருந்து ஆட்டோக்கள் மூலம் செதலப்பதி என்று அழைக்கப்படும் தில தர்பணபுரியை அடையலாம். அங்குள்ள முக்தீஸ்வரர் ஆலயத்தின் எதிரில் இந்த விநாயகர் ஆலயம் உள்ளது. ஆதிவிநாயகர் என்று அழைக்கப்படும் இவர் யானை முகம் இல்லாமல் அழகிய மனித உருவில் அருள் பாலிக்கிறார்.

வேலூர் பெங்களூர் நெடுஞ்சாலையில் 1.5 கிமீ தொலைவில் உள்ள தலம் சேண்பாக்கம். இங்குள்ள ஆலயத்தில் சுயம்பு மூர்த்தியாக செல்வ கணபதி எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.இக்கோவிலில் பதினோரு சுயம்பு மூர்த்தங்கள் பாலவினாயகர், நடனவினாயகர், கற்பகவிநாயகர், சிந்தாமணிவிநாயகர், செல்வவிநாயகர், மயூரவிநாயகர்,மூஷிகவிநாயகர், வல்லபவிநாயகர், சித்திபுத்திவிநாயகர் பஞ்சமுகவிநாயகர் என்று பதினோரு திருநாமங்களுடன் அழைக்கப்படுகிறார்.

கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் பாபநாசத்தில் சிவசக்தி காளியம்மன் கோவில் அருகில் சர்ப்ப விநாயகர் எழுந்தருளி உள்ளார். சர்ப்பமொன்று தன் படத்தை குடையாக்கி விநாயகரின்  தலைக்கு மேலே அழகு செய்வது இம்மூர்த்தியின் தனித்தன்மை. கதை, கரும்பு,வில்,சூலம்,தாமரைமலர்,பாசம்,மலர்,நெற்கதிர், தனது கரங்களில் தாங்கி அத்துடன் அமுத கலசத்தையும் துதிக்கையில் ஏந்தி நிற்கிறார்.

சேரன் மாதேவி மிளகுப் பிள்ளையார்.
  கன்னடியன் கால்வாயில் தண்ணீர் குறைந்து போனால் அக்காலத்தில் சேரன் மாதேவி மக்கள் குளக்கரைப்பிள்ளையாருக்கு மிளகு தடவி அபிஷேகம் செய்வார்களாம்.மழைவந்து குளம் நிரம்புமாம். இதனால் இப்பிள்ளையார் மிளகு பிள்ளையார் ஆனார்.


பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம் கிராமத்தில் உள்ள பாலீஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளி இருப்பவர் கதவிற் கணபதி! அரையடி உயரமே உள்ள மரத்தால் ஆன திருமேனி உடையவர். இவரை வழிபட்டால் நினைத்த காரியம் கை கூடும் என்பது நம்பிக்கை!

தஞ்சை மாவட்டம் திருவையாறுக்கு அருகில் உள்ள ஊர் திருவேதிக்குடி! பிரம்மாவும் வேதங்களும் சிவனை வழிபட்ட தலமான இங்கு விநாயகர் செவிசாய்த்து இருக்கும் கோலத்தில் இருக்கிறார். வேதங்களை கேட்க இந்த கோலத்தில் எழுந்தருளியுள்ள இப்பிள்ளையாரின் நாமம் வேதப் பிள்ளையார். இன்னொரு பெயர் செவி சாய்த்த பிள்ளையார்.

 திருப்பரங்குன்றத்து குடைவரை கோயிலில் முருகப்பெருமானுக்கு அருகில் தாமரைமலர் மீது அமர்ந்து கைகளில் கனியும் கரும்பும் ஏந்தி சூரிய சந்திரனுடன் காட்சி தருகிறார் கற்பக விநாயகர்.

பிள்ளையார் பட்டியில் ஆறு அடி உயரத்தில் பத்மாசனத்தில் அருள் பாலிக்கும் விநாயகர் இருகரங்கள் உடையவர். கஜமுகாசுரனை கொண்ற பாவம் விலக சிவனை நோக்கி தவமிருப்பதாக ஐதீகம். இதற்கு ஆதாரமாக வலதுகரத்தில் சிவலிங்கம் ஏந்தியுள்ளார்.

 மதுரை கீழ மாசி வீதியில் அமைந்துள்ளது மொட்டை விநாயகர் கோயில். இவரை வியாபார விநாயகர் என்றும் அழைக்கிறார்கள்.அன்னியர் படையெடுப்பின் போது ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தை சேதப்படுத்த திட்டமிட்டனராம். அப்போது வியாபாரிகள் மொட்டை விநாயகர் கோயிலுக்குச் சென்று விட்டு திரும்புவதை பார்த்து  கோபமுற்ற அன்னியர்கள் பிள்ளையாரின் சிரசை துண்டாக்கி ஆற்றில் வீசினார்களாம். அந்த சிரசு மீண்டும் அதே இடத்திற்கு வந்தது கண்டு பயந்து ஓடிவிட்டனராம் அன்னியர்கள். இந்த பகுதியில் கடை வைத்திருப்பவர்கள் இவரை தரிசித்த பிறகே கடை திறப்பது வழக்கம்.

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் முக்குறுணி விநாயகர் பெரிய உருவத்துடன் காட்சி அளிக்கிறார். இவருக்கு பெரிய கொழுக்கட்டை நிவேதனம் மூன்று குறுனி அரிசியில் செய்து படைக்கப்படுகிறது. இதே ஆலயத்தில் உடல் முழுக்க வெள்ளை பூசி இருக்கும் விநாயகர் விபூதி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

திருப்புறம்பியம் என்னும் தலத்தில் பிரளயம் காத்த விநாயகர் எழுந்தருளியுள்ளார். விநாயக சதுர்த்தி அன்று அவருக்கு ஒரு குடம் தேன் அபிஷேகம் செய்விக்கப்படுகிறது. மற்ற நாட்களில் இவருக்கு அபிஷேகம் கிடையாது.

டிஸ்கி} படங்களை தேர்ந்தெடுத்து போட நேரமில்லை! கிடைத்தவரை போட்டுள்ளேன்! விரைவில் சந்திப்போம்! நன்றி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள்! 





Comments

  1. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  2. ஒரே பதிவில் பல ஆலய கணபதியை தரிசிக்க வைத்தமைக்கு நன்றி தளிரண்ணா!

    ReplyDelete
  3. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. பலதளங்களுக்கு எங்களை இந்த நல்ல நாளில் இலவசமாக இணையம மூலமாக அழைத்து சென்றதர்க்கு நன்றி! :) :)

    இதயம் நிறைந்த இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் நண்பா!

    ReplyDelete
  5. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்....

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  6. சிறப்பான நாளில் சிறப்பான பகிர்வு...

    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  7. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்....

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!