கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 84
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி
84
1.
எங்க
தலைவர் தவுசன் வாலா பட்டாசு மாதிரி! பத்த வைச்சா பட படன்னு வெடிச்சிருவார்!
அப்ப அவரை பீஸ் பீஸா கிழிக்கிறது
ரொம்ப சுலபம்னு சொல்லு!
2.
தலை
தீபாவளிக்கு மாப்பிள்ளைக்கு மோதிரம் போட்டது தப்பா போயிருச்சு!
ஏன்?
மோதிரத்தை அடகுவெச்சு “ரம்”
அடிச்சுட்டுவந்து நிக்கறார்!
3.
பொண்ணுக்கு
கல்யாணத்தை தள்ளி போட்டுக்கிட்டே போகாதீங்கன்னு சொன்னேனே கேட்டீங்களா?
ஏன் இப்ப என்ன ஆச்சு?
நாள் தள்ளி போயிருக்குங்கறா!
4.
மாப்பிள்ளை
ராக்கெட் விடறேன்னு சொல்லி பெரிய பிரச்சனையை உண்டாக்கிட்டார்!
ஏன்? என்ன ஆச்சு
பக்கத்து வீட்டு பொண்ணு கொண்டையில
ராக்கெட் விட்டுட்டார்!
5.
அந்த
பட்டாசு கடை ரொம்ப ஸ்டிரிக்டா வியாபாரம் பண்றாங்களா எப்படி?
பாம்பு மாத்திரை வேணும்னா கூட
டாக்டர் ப்ரிப்ஸ்கிரிஷன் இருந்தாத்தான் தருவாங்களாம்!
6.
இந்தாங்க
வீட் அல்வா?
என்ன ரவை அல்வாவை கொடுத்து வீட்
அல்வான்னு சொல்றே!
வீட்டு அல்வான்னு சொல்ல வந்தேன்!
7.
சனிக்கிழமைன்னா
எங்கம்மா எண்ணெய் தேய்ச்சு குளிப்பாட்டிவிடாம விடமாட்டாங்க!
ஆயில் தண்டணைன்னு சொல்லு!
8.
அந்த
படத்தோட டைரக்டர் இதுக்கு முன்னாடி அனஸ்தீஷியா டாக்டரா இருந்தவராம்!
மயக்குனரா இருந்தவர் இயக்குனரா
மாறிட்டார்னு சொல்லு!
9.
எதிரி
நம் அண்டை நாடுகளை வென்று கொடிநாட்டி வருகிறான் மன்னா!
உடனே அவனுக்கு சமாதானக் கொடியை
நாட்டி விட வேண்டியதுதான் அமைச்சரே!
10. மன்னருக்கு போரில் நாட்டம் இல்லையாமே!
ஆமாம்! ஆமாம்! அப்புறம் அவரது
அரியணை ஆட்டம் கண்டு விடுமே என்று பயம்தான்!
11. வெடி வைச்சு பார்த்தாலும் உடைக்க முடியலைன்னு
புலம்பிக்கிட்டு இருக்கிறியே எதை?
தீபாவளிக்கு என் பொண்டாட்டி
செஞ்ச மைசூர் பாகைத்தான்!
12. திடீர்னு தலைவர் எதுக்கு சீனப்பட்டாசுக்கு எதிரா
அறிக்கை விட்டு போராட ஆரம்பிச்சிட்டாரு!
உள்ளூர் ல பட்டாசு கடை ஏலம்
எடுத்தவன் தலைவருக்கு கமிஷன் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டானாம்!
13. கட்சி ஆரம்பிச்சு முதல் தீபாவளிக்கு தலைவர் ஜெயிலுக்கு போயிட்டார்!
தலை தீபாவளிக்கு மாமியார் வீட்டுக்கு
போயிருக்கார்னு சொல்லு!
14. மன்னா! இளவரசர் மிளகாய் பட்டாசு வெடிக்க
கூட பயப்படுகின்றாராம்!
அவனுக்கு காரம் பிடிக்காது என்று
உங்களுக்குத் தெரியாதா மந்திரியாரே!
15. எதிரி படையெடுத்து வரப்போவதாக ஓலை அனுப்பி
இருக்கிறான் மன்னா!
ஒலைவெடி வெடித்துவிட்டான் என்று சொல்லுங்கள்!
16. தீபாவளிக்கு பட்டு எடுத்தாத்தான் கட்டுவேன்னு
என் பொண்டாட்டி கண்டிப்பா சொல்லிட்டா!
அவளுக்கு பட்டு எடுத்துட்டு
நான் வாங்கின கடனுக்கு வட்டி கட்டிக்கிட்டு இருக்கேன்!
17. அந்த டயலாக் ரைட்டர் ரொம்ப வறுமையில இருக்கார்
போலிருக்கு!
எப்படி சொல்றே?
பஞ்ச் டயலாக் எழுதி கொடுங்கன்னு
கேட்டா பஞ்ச டயலாக்கா எழுதி தள்றாரே!
18. தலைவர் எதுக்கு டெய்லி காலண்டரை கீழே போட்டுட்டு
மேலே ஏறி நிக்கிறார்?
அப் டேட்டா இருக்க முயற்சி பண்றாராம்!
19.அந்த சர்வருக்கு நக்கல் அதிகமா போச்சு!
ஏன்?
சூடா என்ன இருக்குன்னு கேட்டா தோசைக் கல்லு இருக்கு கொண்டு வரவான்னு கேக்கறான்!
20.மன்னர் ஏன் இப்படி மருந்து குடித்தது போல முகத்தை வைத்துக்கொண்டுள்ளார்!
ராணியார் தன் கையால் செய்த தீபாவளி விருந்தை சாப்பிட சொல்லி வற்புறுத்துகிறாராம்!
வலையுலக நட்புக்கள் வாசகர்கள் தோழர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை
பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
ஹாஹாஹா அனைத்தும் நன்று நண்பரே இனிய தீபாவளி வாழ்த்துகள்
ReplyDeleteஇனிய தீபாவளி வாழ்த்துகள்
ReplyDeleteஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் 💐🎁
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
ReplyDeleteஅப் டேட்டா இருக்க நினைக்கும் தலைவர் :)
ReplyDeleteதீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள், சுரேஷ்!
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள்.
ReplyDeleteரசித்தேன் சகோதரா...