இந்த வார பாக்யாவில் எனது சிறுகதை!

இந்த வார பாக்யாவில் எனது சிறுகதை!

பாக்யாவில் அவ்வப்போது எனது படைப்புக்கள் வெளிவருவது நண்பர்கள் அறிந்ததே! தொடர்ந்து மூன்று வாரங்கள் ஜோக்ஸ் மழை பொழிந்த பாக்யாவில் போனவாரம் என் ஜோக்ஸ் எதுவும் வரவில்லை! இத்தனைக்கும் நிறைய ஜோக்ஸ் அனுப்பி இருந்தேன். மனதுக்கு கொஞ்சம் கஷ்டமாகிவிட்டது. இருப்பினும் மனம் தளரவில்லை.
   சரி மாற்றி யோசிப்போம்! என்று இரண்டு மூன்று சிறுகதைகளை அனுப்பி வைத்தேன். கண்டிப்பாக பிரசுரம் ஆகும் என்று பட்சி சொன்னது. ஆனாலும் பொன்னேரி பகுதியில் பாக்யா வராததால் ஆவல் அதிகரித்துக் கொண்டே சென்றது. 
      தமிழக எழுத்தாளர்கள் வாட்சப் குழுவில் பத்திரிக்கைகளில் வந்த படைப்புக்களை பதிவிடுவார்கள். சனிக்கிழமை அன்றே பாக்யா ஜோக்ஸ் மக்கள் மனசு பதிவிட்டார்கள். என் ஜோக்ஸ் வரவில்லை! வருத்தம் இருந்தது. மறுநாள் கோபாலன் சார் பாக்யாவில் நத்தம் சுரேஷ் என்று என்னுடைய கதையை பதிவிட்டு இருந்தார். பார்த்ததும் மகிழ்ச்சி! ஆனாலும் எனது இணையம் சரிவர சிக்னல் இல்லாமல் இருந்தது. நன்றி சொல்லவோ  பகிர்ந்து கொள்ளவோ முடியவில்லை!
  இன்று சரஸ்வதி பூஜை எல்லாம் முடித்துவிட்டு வாட்சப்பில் அந்த பதிவைத் தேடி எடுத்து உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். பாக்யா இதழில் வெளியிட்ட ஆசிரியருக்கும் வாட்சப் குழுவில் பகிர்ந்து கொண்ட கோபாலன் சார், தொடர்ந்து ஊக்கமளித்து வரும், பூங்கதிர் சார், புதுவண்டி ரவீந்திரன் சார்! எழுத்தில் குறைகளை திருத்தி மெருகேற்றிவரும்  கி. ரவிக்குமார் சார். அட்மின் வைகை ஆறுமுகம் சார் மற்றும் நமதுவலைப்பூ தோழமைகள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

பாக்யாவில் வெளிவந்த எனது கதை;

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. வாழ்த்துகள் நண்பரே

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் சகோதரா...

    ReplyDelete
  3. பாக்யா வார இதழில் உங்கள் படைப்புகள் தொடர்ந்து வருவது அறிந்து மகிழ்ச்சி. மற்ற இதழ்களிலும் வெளிவர வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள், சுரேஷ்! விஜயதசமி அன்று வாசித்த நல்ல செய்தி. உங்களுக்கும் சரஸ்வதி கடாட்சம் இருக்கிறது.

    இனி ஜோக்ஸ்+சிறுகதை என்று இரட்டை குதிரை சவாரியில் பத்திரிகை உலகம் பூராவும் திக்விஜயம் செய்யுங்கள்.

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..

    மிக்க அன்புடன்,
    ஜீவி

    ReplyDelete
  5. ஜீவி ஸார் சொல்லியிருப்பது போல உங்களுக்கு சரஸ்வதி கடாட்சம் இருக்கிறது. வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. உங்களது சாதனையின் அடுத்த நிலை. தொடருங்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2