தளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர்
ஹைக்கூ கவிதைகள்!
1.
தழுவும்
மோகினி!
நழுவிக்கொண்டே சென்றாள்
காற்று!
2.
இரவும்
பகலும் வருகை!
அயராமல் சுற்றியது
பூமி!
3.
தேய்ந்து
கொண்டே போனது நாட்காட்டி!
வளர்ந்து கொண்டிருந்தது
ஆண்டு!
4.
சிதறும்
துகள்கள்
செல்ஃபி எடுத்தது
ஓட்டிடுக்கிள் புகுந்த ஒளி!
5.
குழந்தையின்
சிரிப்பு!
கூட்டிவந்தது
குதூகலம்!
6.
எண்ணெய்
தீர்கையில்
சுடர் விட்டது!
அகல்விளக்கு!
7.
முதுமை!
முகத்தில் ரேகைகள்!
அனுபவம்!
8.
பற்றிக்கொண்டது
பிரிய மறுக்கிறது!
சுவரில் கொடி!
9.
பறக்கும்
நட்சத்திரங்கள்!
பார்த்து ரசித்தது பூமி!
மின்மினி!
10. பிரிவுத் துயர்!
வாடி வதங்கியது!
கூந்தலில் பூக்கள்!
11. நீர் இருந்தும்
மூழ்கவில்லை!
குளத்து மலர்கள்!
12. வலைவீசி தேடப்படுகிறது
வாழ்க்கை!
மீனவர்கள்!
13. இருளில் ஒளிர்ந்தன
மரத்தில் மலர்கள்!
மின்மினி!
14. காய்த்தது
பழமானது
இனித்தது நட்பு!
15. காட்டிக் கொடுத்தாலும்
தூற்றப்படுவதில்லை!
கடிகாரம்!
16. சண்டையில் சிதறிய பருக்கைச்சோறு!
பகிர்ந்து கொண்டன
எறும்புகள்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை
பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
இரண்டும், மூன்றும் நடைமுறை வாழ்க்கையைச் சொல்கின்றன. எல்லாமும் தான் என்றாலும் இவை அனுபவிப்பதால் உணர வைக்கின்றன.
ReplyDelete