நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 23

நொடிக்கதைகள்! பகுதி 23

1.செல்ஃபி!

கோயிலில் தரிசனத்திற்கு காத்து நிற்கையில்  ”எப்பப்பா வீட்டுக்கு போவோம்?” என்று கேட்டு அழுத பையனை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தவன் சொன்னான் “இன்னும் ரெண்டே நிமிஷம்தான்! கோயில் கோபுர வாசலில் ஒரு செல்ஃபி எடுத்துட்டு உடனே கிளம்பிடலாம்!


2.தண்ணீ!

    ”சுப்ரீம் கோர்ட் ஆர்டரை கூட மதிக்கமாட்டேங்கிறான் கர்நாடகா கவர்மெண்ட்! சுத்த மோசம்! என்று பேப்பரை வீசி எறிந்தவர் வாசலில் காத்து நின்றவனிடம் உன் வயலுக்கு தண்ணி விட முடியாது என் போர்லேயே தண்ணி கொஞ்சம்தான் பாயுது!” என்றார்.

3. புதுப் போட்டி!

   இந்த வருசம் ஆன்வல் டேவுக்கு புதுப்போட்டி வச்சிருக்கோம்!
    என்ன அது? ஸ்டூடண்ட்ஸ் செல்பி எடுத்து காட்டணும் யாரோட செல்பி நல்லா இருக்கோ அவங்களுக்கு ப்ரைஸ்!

4. சுகாதாரம்!
      தெருமுழுக்க கூட்டிப் பெருக்கி ப்ளீச்சிங் பவுடர் போட்டு சுத்தப்படுத்தியவன் வீடு சாக்கடைகளின் நடுவே அமைந்து இருந்தது.

5. தீபாவளி ஃபண்ட்!
    மாசா மாசம் ஃபண்ட் போட்டு தீபாவளிக்கு மளிகை சாமான் வாங்கிட்டோம் என மக்கள் நினைக்க வட்டியில்லாம ரொட்டேஷனுக்கு ஒரு வருசமா பணம் கிடைச்சிட்டிருந்தது இந்தவருஷமும் கண்டினியு பண்ணவேண்டியதுதான் என்று நினைத்தான் ஃபண்ட் போட்டவன்.

6.மகிழ்ச்சி!

   “நாலு நாள் கடைக்கு லீவாண்டா!”
அப்ப இன்னிக்கு ஒரே நாள்ல கலெக்‌ஷனை அள்ளிருவோம்னு சொல்லு!
   மகிழ்ச்சியாக பேசிக்கொண்டனர் டாஸ்மாக் ஊழியர்கள்!

   7.குறுக்கு வழி!
    தர்ம தரிசனவரிசை மெதுவாக நகர ஸ்பெஷல் வரிசை வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. பார்த்துக் கொண்டிருந்த குழந்தை கேட்டது. குறுக்கு வழியிலே போகனும்னா நிறைய செலவு ஆகுமாப்பா? 

8. திருட்டு!

    என்னோட கதையை அந்த இயக்குநர்  திருடிவிட்டார் என்றவனிடம் நீ எங்கிருந்து கதையை சுட்டே என்றார் விசாரித்தவர்.


9. விழிப்புணர்வு பிரசாரம்!
          சீனப் பட்டாசுகளை வாங்காதீர்கள்! அது கேடு விளைவிக்க கூடியது என்று விழிப்புணர்வு பிரசாரம் செய்து கொண்டிருந்தனர் சீன மொபைல்களின் வழி பேஸ்புக்கில்.

10. பூமராங்!
     ஒருநாளாவது ஸ்கூலுக்கு நேரத்துக்கு கிளம்பறியா? தினமும் லேட்டு! என்ற அப்பாவிடம் நீங்க ஒருநாளாவது ஆபிஸ்ல இருந்து சீக்கிரம் வீட்டுக்கு வந்திருக்கீங்களா? தினமும் லேட்டு என்றது குழந்தை!
11. ஓசி!

    டெய்லி ஓசி பேப்பருக்குன்னே ஒரு கூட்டம் வருது! இனிமே பேப்பரை நிறுத்திடப் போறேன்! ஜியோ சிம்ல மேகசின் ஆப் டவுன் லோட் பண்ணி படிச்சுக்க போறேன்! என்று மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தார் வீட்டுக்காரர்.

12. இட்ஸ் ஆல் த கேம்!
     பரபரப்பான போட்டியில் ஒரு ரன்னில் வெற்றி பெற்றது அணி. சே! சொதப்பிட்டோம்! தோத்து இருந்தா பெட்டிங்க்ல இன்னும் கொஞ்சம் பணம் அதிகமா கிடைச்சிருக்கும்! என்று நொந்து கொண்டார் அணிக்கேப்டன்.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!. நன்றி!

Comments

  1. அனைத்தும் நல்ல கருத்துகளை சொன்னது நண்பரே வாழ்த்துகள்

    ReplyDelete
  2. வணக்கம்.

    எப்படி நண்பரே... இவ்வளவு விதமாய்..சாதா சிந்தித்துக் கொண்டே இருப்பீர்களோ..

    ஒவ்வொரு துறையையும்.

    அனைத்தையும் ரசித்தேன்.

    உண்மையில் வியக்கிறேன்.

    தங்கள் மென்மேலும் உயரவேண்டும். தமிழ் உலகில் அறியப்படவேண்டும் என்பது என் பெருவிருப்பு.

    நன்றி.

    ReplyDelete
  3. நொடிக்கதைகள் அருமை.
    அவை கூறும் நல் கருத்துக்கள் அருமை.
    தொடருங்கள், வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. ஸ்டூடண்ட்ஸ் செல்பி எடுத்து காட்டணும்
    என்றால் - படிப்பை விட்டுடணும்
    எப்படி என்றால்
    படிக்கிற நேரத்தில செல்பி எடுக்கப் பழகுவாங்களே!
    இதற்கு மாற்றீடாக புதிர்க் கணக்குப் போடலாமே
    எடுத்துக்காட்டாக
    ஆறை எப்படி ஒன்பது ஆக்கலாம்?

    ReplyDelete
  5. அனைத்தையும் ரசித்தேன். நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2