கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 82

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 82


1.   கழுத்து வலியின்னு டாக்டர் கிட்டே போனியே  டாக்டர் என்ன சொன்னார்?  
கழுத்தை சுத்தி பேண்டேஜ் ஒட்டி நிறைய செலவை இழுத்து விட்டுட்டார்!

2.   தலைவருக்கு எப்பவும் ஜெயில் ஞாபகம் தான்?
  ஏன் என்ன சொல்றாரு?
புதுப்படம் ரிலீஸ் ஆகப்போவுதுன்னு சொன்னா பெயில் கிடைச்சிருச்சான்னு கேக்கறாரே!


3.   தலைவர் ரொம்ப செண்டிமெண்ட் பார்ப்பார்!
அதுக்காக குற்றப்பத்திரிக்கையை கூட வெத்தலை பாக்கு பழம் தட்டோடத்தான் தரணும்கிறதுல்லாம் ரொம்ப ஓவர்!

4.   தண்ணி அடிச்சிட்டு போனதுக்கு உன் பொண்டாட்டி ரொம்ப சந்தோஷப் பட்டாளா? ஆச்சர்யமா இருக்கே!
ஏன் சந்தோசப்பட மாட்டா நான் ஆறு குடம் தண்ணி இல்லே பைப்ல அடிச்சிட்டு போனேன்!

5.   மன்னர் யோசிக்காமல் எதிரி மீது படையெடுத்துவிட்டார்!
அப்புறம்!?
எதிரியிடம் நாட்டை யாசிக்காமல் இருக்க முடியாது போய்விட்டது!

6.   தலைவரை பார்க்க  இப்ப “லோ லோ”ன்னு அலைய வேண்டியதா போயிருச்சு!
   ஏன்?
அப்பல்லோவிலெ இல்லே சேர்ந்துட்டார்!


7.   அவர் புதுப்படம் ரீலீஸ் ஆன முதநாள் முதல் ஷோ பார்த்திருவார்!
பெரிய சினிமா ரசிகரா?
ஊகும்! தியேட்டர்ல ஆப்பரேட்டரா இருக்கார்!

8.   தீபாவளின்னா எங்க வீட்டுல சும்மா பிச்சு உதறுவோம்!
அவ்ளோ கிரேண்டா கொண்டாடுவீங்களா?
நீ வேற என் பொண்டாட்டி செய்த ஸ்வீட்டை வாயில இருந்து பிச்சு எடுத்து உதறுவோம்னு சொல்ல வந்தேன்!

9.   விளையும் பயிர் முளையிலே தெரிகிறது மன்னா!
  எப்படி? எப்படி?
இளவரசர் தோழர்களோடு விளையாடி தோற்று ஓடிவந்து கொண்டிருக்கிறாராம்!


10. அந்தப் புலவர் போலியான புலவர்னு எப்படி சொல்றே?
அரசரை புகழ்ந்து “ அப்பா தமிழ்” எழுதி இருப்பதாக சொல்கிறாரே!

11. தலைவர் சபைக்கு எப்பவும் லேட்டா போகவே மாட்டார்!
  அவ்வளவு ஆர்வமா?
ஆமாம்! லேட்டா போனா காண்டீன்ல போண்டா தீர்ந்து போயிருமே!

12.  தலைவர் ஏடா கூடமா அறிக்கை விட்டு மாட்டிக்கிட்டாரு!
   எப்படி?
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டாலும் கீழாண்மை வாரியமாவது அமைச்சு தரணும்னு அறிக்கை விட்டிருக்கார்!


13. பிரைவேட் பில்டிங்குள்ள ஸ்மோக் பண்ணத்தான் எகிறி குதிச்சியா? என்னையா சொல்றே?
பப்ளிக் ப்ளேஸ்ல ஸ்மோக் பண்ணக் கூடாதுன்னு சட்டம் போட்டிருக்கீங்களே சார்!

14.  அந்த ஸ்டேஷன்ல லஞ்சம் தலைவிரிச்சு ஆடுதுன்னு சொல்றாங்களே…!
ஆமாம்! அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஒரு லேடி!

15. அந்த ஜோஸ்யர் ரொம்ப ட்ரெண்டியான ஆளு!
எப்படி சொல்றே?
இன்னும் பத்தே நாள்ல உங்களுக்கு வாட்சப்” லே நல்ல சேதி வரும்னு சொல்றாரே!

16.  பிள்ளையாடி பெத்து வைச்சிருக்கே! சரியான குரங்கை பெத்து வைச்சிருக்கே!
எங்க குலம் தழைத்தோங்க என் பையனுக்கு நல்ல வாரிசை பெத்துக்கொடுன்னு உங்க அம்மாதான் கேட்டாங்க!

17.  என் பொண்டாட்டிக்கு “அதிகாரம்”ம்னாலே பிடிக்காது!
  அவ்ளோ சாப்ஃட்டா?
நீ வேற சமையல்ல  அதிக காரம் போட்டா பிடிக்காதுன்னு சொல்ல வந்தேன்!


18. மாறுவேடத்தில் நகர்வலம் போன மன்னரின் உடையெல்லாம் கிழிந்து கிடக்கிறதே!
போன இடத்தில் யாரோ ஒரு பெண்ணின் இடையை ரசித்து மாட்டிக் கொண்டாராம்!

19.  எதிரி மன்னன் மகாராணியோடு செல்ஃபி எடுத்துக் கொண்டு அனைவரையும் விடுவித்து விட்டானாமே!
  செல்லுக்கு வந்தது “செல்ஃபியோடு போயிற்று என்று சொல்லுங்கள்!


20. போர் என்றதும் மன்னர் வரிந்து கட்டிக்கொண்டு இறங்கிவிட்டார்!
அப்புறம்?
அப்புறம் என்ன சுரங்க வழியை மூடிவிட்டோம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

 1. அனைத்தும் அதிரடி நகைச்சுவை நண்பரே இரசித்தேன் வாழ்த்துகள்

  ReplyDelete
 2. தலைவர் அப்பல்லோவிலெ சேர்ந்துட்டார்!
  என்பது
  சமகாலப் பதிவாச்சே!

  ReplyDelete
 3. அனைத்தையும் சிரித்து ரசித்தேன்!

  ReplyDelete
 4. அதிகாரம்... அதிக காரம்!

  அனைத்தும் ரசித்து மகிழ்ந்தேன். பாராட்டுகள்.

  ReplyDelete
 5. எல்லாமே காலத்துக்கு ஏற்ற நகைச்சுவைகள். நல்ல ரசனை!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2