நொடியில் படிக்க ரெடியா! நொடிக்கதைகள் பகுதி 22

நொடிக்கதைகள்! பகுதி 22

1.கேம்!
   ”உன்னோட மொபைல்ல நல்ல கேம் எதுவுமே இல்லை! அடுத்தவாட்டி மொபைல் வாங்கறப்ப என்னையும் கடைக்கு கூட்டிட்டுப் போ! நல்ல மொபைலை நான் செலக்ட் பண்ணித்தறேன்!” என்றாள் மகள்!

2.முரண்!
   ஆலயத்தினுள் செல்போன் உபயோகிக்க கூடாது! என்ற கொட்டை எழுத்து போர்ட் சொன்னதை படித்தபடி உள்ளே நுழைகையில் அர்ச்சகர் தன்னுடைய புது போனை குடைந்து  கொண்டிருந்தார்.

3. பரிசு!

    உடல் நலம் குறித்த விழிப்புணர்வு கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவி எல்லோருக்கும் சாக்லேட் தந்து தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருந்தாள்.

4. புழுக்கம்!
  “காத்தே இல்லை! வீட்டுக்குள்ளே உட்கார முடியலை! ஒரே புழுக்கமா இருக்குது! என்று அலுத்துக் கொண்டார் மரங்களை வெட்டி விற்கும் அந்த வியாபாரி.


5. பார்வை!
    “ வர வர  கண்ணே ஒழுங்கா தெரிய மாட்டேங்குது டாக்டர்! பேஸ் புக்  கூட பார்க்க முடியலை! சீக்கிரம் ஆபரேஷன் பண்ணிட முடியுமா? என்று டாக்டரிடம் விசாரித்துக் கொண்டிருந்தார் தாத்தா.

6. புத்தக சேமிப்பு!
   “ இப்ப எல்லா புக்கும் ‘இ புக்ஸாவே கிடைக்குது தெரியுமா? என்னோட மொபைல்லேயும் சிஸ்டத்துலேயும் நூத்துக்கணக்கான புக்ஸ் டவுண்லோட் பண்ணி வச்சிருக்கேன்!” என்று பெருமையாக சொன்னவன் ஒரு புத்தகத்தையும் இது வரை வாசிக்கவில்லை!

7. விதை!

   இருந்த கால் காணி நிலத்தை விற்றுவிட்டு மாடி வீடு கட்டிக்கொண்ட விவசாயி மொட்டை மாடியில் மண் கொட்டி காய்கறித் தோட்டம் வளர்க்க ஆரம்பித்தார்

8. நிம்மதி!
     மேம்பாலங்கள் நிறைய கட்டி முடித்ததும் “அப்பாடா! ஒரு வழியா மழைக்கு ஒதுங்க இடம் கிடைச்சுது! என்று நிம்மதி பெருமூச்சு விட்டனர் ப்ளாட்பார்ம் வாசிகள்.

9.கண்டிப்பு!

  “ஹோம் ஒர்க் எழுதாம டீவி பாத்துகிட்டு இருக்கே! நாளைக்கு டீச்சர் கிட்ட உதை படப் போறே! போய் ஹோம் ஒர்க் கம்ப்ளீட் பண்ணு! என்று பையனை மிரட்டியவர் ஆபீஸ் வேலையை பெண்டிங்கில் போட்டுவிட்டு பேஸ் புக் பார்த்துக் கொண்டிருந்தார்.

10.விடியல்!
வாட்சப்பில் சாட் செய்துவிட்டு அனைவருக்கும் குட்நைட் சொல்லி விட்டு உறங்க செல்கையில் வந்துவிழுந்த மேசேஜ் சத்தமிட்டு சொல்லியது குட்மார்னிங்!

11. நீர் அரசியல்!
    நிறைய தண்ணி வச்சிக்கிட்டே இல்லேங்கிறான்! திறந்துவிட்டாத்தான் என்ன? குறைஞ்சா போயிருவான்! கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாத பசங்க என்று காவிரி அரசியல் பேசிய வீட்டுக்காரர் கரெக்டா 8 மணிக்கெல்லாம் மோட்டர் ஆப் பண்ணிருவேன்! அதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட போட முடியாது என்று வாடகைக்காரர்களிடம் கறாராக சொன்னார்.


12. இலவசம்!
  “ஒரு காலத்துல அத்தியாவசியமான பொருள் எல்லாம் இலவசமாவும் சல்லிசாவும் கிடைச்சுது! இப்ப ஆடம்பர பொருள் இலவசமா கிடைக்குது! அத்தியாவசியமான தண்ணீ கூட காசு கொடுத்து வாங்க வேண்டியதா போச்சு! பேரனிடம் அலுத்துக் கொண்டிருந்தார் தாத்தா.

டிஸ்கி} வீடு பராமரிப்பு பணிகள், கோயில் பணிகள் என்று பணிச்சுமை அதிகரித்தமையால் நண்பர்களின் தளங்களுக்கு வர முடியவில்லை!  டச் விட்டு போகாமல் இருக்க இரவில் எழுதுகிறேன்! விரைவில் நண்பர்களின் பதிவுகளை படித்து கருத்திடுகிறேன்! பொறுத்துக் கொள்ளவும்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

 1. அத்தனையும் படித்தேன். அனைத்தும் அருமை!

  ReplyDelete
 2. அனைத்தும் அருமை. பாராட்டுகள்.

  ReplyDelete
 3. ஒவ்வொன்றும் ஒவ்வொரு உண்மைகளை சொன்னது நண்பரே...
  இரண்டாவது முரண் அதிகம் சிரித்தேன் காரணம் உங்களுக்கு புரிந்து இருக்கும்.
  வேலை முக்கியம் நண்பரே நேரம் இருக்கும் பொழுது வாருங்கள்.

  ReplyDelete
 4. அருமையான பதிவு

  ReplyDelete
 5. ஒரு சாக்லேட் சாப்பிடுவது அவ்வளவு தப்பா என்ன!

  அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
 6. இரண்டாம் கதையின் நாயகன் சுரேஷ்தானா? ஹாஹ ஹா சும்மா

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2