கல்கி தந்த தீபாவளிப் பரிசு!

 வார இதழ்களில் நான் படைப்புக்கள் எழுதி வருவதை நீங்கள் அறிவீர்கள். பாக்யாவில் வரும் அளவிற்கு மற்ற இதழ்களில் படைப்புக்கள் வரவில்லை. எனினும் விடாமல் குமுதம், விகடன், கல்கி, கண்மணி என்று தொடர்ந்து முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன்.
    நகைச்சுவை எழுத்தாளர் திரு சீர்காழி ஆர். சீதாராமன் சார் போன் செய்து பேசுகையில் சில ஆலோசனைகள் சொன்னார். அதில் ஒன்று  கல்கிக்கு தராசு பதில்களுக்கு கேள்விகள் அனுப்புவது. அவர் சொன்னபடி கேள்விகள் மெயில் அனுப்ப மறு வாரமே ஒரு கேள்வி பிரசுரம் ஆனது.  இந்தவாரமும் கேள்வி அனுப்பி இருந்தேன். அதில் என் கேள்வி பரிசுக்குரிய கேள்வியாக தேர்ந்தெடுக்கப்பட்டு  ரூபாய் 150 பரிசினை பெற்றுள்ளது. 

   கல்கிக்கு ஜோக்ஸும் அனுப்பி இருந்தேன். அதில் இரண்டு ஜோக்ஸ்கள் பிரசுரம் ஆகி இருக்கிறது.
    தீபாவளி பிஸியில் இருந்தமையால் இதை உடனே அறிந்து கொள்ள முடியவில்லை! தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவில் பகிர்ந்து இருந்தார்கள் அதை தீபாவளி அன்று இரவுதான் பார்த்தேன். நேற்று கேதார கௌரி நோன்பு. கோயில் பணி. பிஸியாக இருந்தமையால்  புத்தகம் வாங்கவும் பகிர்ந்து கொள்ளவும் முடியவில்லை!
   இன்று புத்தகம் வாங்கி படித்து மகிழ்ந்தேன். பாக்யாவிலும் இந்தவாரம் ஜோக்ஸ்கள் வந்துள்ளது. அதை தனி பதிவாக கொடுக்கிறேன். இனி! என் பரிசு கேள்வியும் அதற்கு தராசு பதிலையும்  கீழே படியுங்கள்.

கல்கியில் பிரசுரமான எனது ஜோக்ஸ்கள்!



கல்கி போன்ற பாரம்பரியம் மிக்க இதழ்களில் என் படைப்புக்கள் வராதா என்று ஏங்கிய காலங்கள் உண்டு.  தீபாவளி அன்று எனது ஏக்கத்தை போக்கி பரிசை வழங்கியது கல்கி!

   கல்கி குழுமத்தினருக்கும் என்னை ஊக்கப்படுத்தி வரும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமத்தினருக்கும்  வலைப்பூ நண்பர்கள் மற்றும் எனது குடும்பத்தினருக்கு எனது இதயங்கலந்த நன்றிகள்! 

தங்கள் வருகைக்கு நன்றி!  பதிவு குறித்த உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு ஊக்கப் படுத்துங்களேன்! நன்றி!

Comments

  1. வார இதழ் பிரபலமான எங்கள் பதிவருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் போன்ற நண்பர்களின் ஊக்கம் என்னை இந்த அளவிற்கு உயர்த்தியுள்ளது! வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே!

      Delete
  2. வாழ்த்துகள்
    தொடருங்கள்

    ReplyDelete
  3. அடேங்கப்பா சூப்பர் பரிசு தான் ஐயா!மனமார்ந்த பாராட்டுகள்.

    கடந்த பல மாதங்களாக வலைப்பூ அதிகம் வரமுடியவில்லை, வேலைப்பழு! இந்த மாதம் வரலாம் எனில் கம்யூட்டரில் வைரஸ் பிரச்சனையில் ஒவ்வொரு பதிவும் திறக்கவே நிரம்ப பிராயத்தனம் செய்ய வேண்டி இருக்கின்றது. மன்னிக்கவும் ஐயா!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2