கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 83.

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 83.


1.   அந்த டாக்டர் போலின்னு எப்படி சொல்றீங்க?
உங்களுக்கு டைம் பாஸ் சர்ஜரி ஒண்ணு பண்ணா எல்லாம் சரியாயிரும்னு சொல்றாரே!

2.   அந்த ஜோஸ்யர் ட்ரெண்டியான ஆளு!
எப்படி சொல்றே?
ஜியோ சிம் கிடைச்சும் ஆக்டிவேட் ஆகாத மாதிரி நிலையில இருக்கு உங்க கிரக நிலைமைன்னு சொல்றாரே!

3.   மன்னா! எதிரி இரண்டு நாழிகை நேரம் அவகாசம் கொடுத்துள்ளான்!
அதற்குள் தப்பித்து ஓட ஏதாவது அவசர வழி இருக்கிறதா அமைச்சரே!


4.   ஒரு பொண்ணுக்கு நெட் கார்டு போட்டு கொடுத்து கடலை போட்டுக்கிட்டு இருந்தியே என்ன ஆச்சு!
ஜியோ சிம் வாங்கி கொடுத்து ஒருத்தன் வளைச்சிட்டு போயிட்டான்.!

5.   தலைவருக்கு உலக அறிவு ரொம்ப கம்மி!
எப்படி சொல்றே?
டோல் ப்ரி நம்பரை நாம வாங்கிட்டா போன் செலவு மிச்சமாகுமேன்னு கேக்கறார்!

6.   மன்னரே நாட்டில் ஜிகா வைரஸ்  தாக்கி வருகிறது!
  அப்படியானால் உடனே  நாம் “ஜகா” வாங்கி விடலாமா தளபதியாரே!

7.    எக்ஸாம் ஹால்ல என்ன கலாட்டா?
விடைகள் உம் சொந்த நடையில் எழுத வேண்டும்னு போட்டிருக்கு! நடந்துகிட்டேதான் எழுதுவேன்னு ஒரு பையன் அடம்பிடிக்கிறானாம்!


8.   தீபாவளிக்கு பட்டு உடுத்தித் தான் ஆவனும்னு என் பொண்டாட்டி சொல்லிட்டா….!
அப்புறம்?!
அப்புறம் என்ன? சில கட்டுக்களை செலவழிக்க வேண்டியதா போயிருச்சு!

9.     அது என்னங்க புதுசா வைஃபை தோசைன்னு  போட்டிருக்கீங்க?
        ஒரே தோசையை நாலு பேர் ஷேர் பண்ணி சாப்பிடலாம் அவ்வளவு பெரிசா இருக்கும் சார்!

10.     பொண்ணும் மாப்பிள்ளையும் செல்ஃபி எடுத்துக்கிறாங்களாம்!
                              மாப்பிள்ளை கடைசியா சுயமா  எடுக்கிறது  இது  ஒண்ணுதான்னு சொல்லுங்க!


11.  புலவர் ஏன்  இவ்வளவு கடுப்பாக இருக்கிறார்?
மன்னரை படி உயர்த்தி தருமாறு கேட்டாராம்! மன்னரும் இவரது ஆசனத்தை ஒரு படி உயர்த்தி போட்டு போதுமா என்று நக்கலாக கேட்கிறாராம்!

12.  பழங்கணக்குகளை நாம எடுத்துக்க வேண்டாம்னு   தலைவர் உறுதியா சொல்லிட்டாராமே!
ஆமாம்! டீக்கடையில கொடுக்க வேண்டிய பழங்கணக்குங்களை கூட அவர் அடிக்கடி மறந்து போயிருவார்!

13.  .மாப்பிள்ளை பெரிய உத்தியோகத்துல இருக்கார்! எப்பவும் மீட்டிங்க்லேயே இருப்பார்!
                           பொண்ணு?                                                                                                                                                                      வாட்சப்புல இருக்கா! எப்பவும் சாட்டிங்க்லேயே இருப்பா!  


14. அந்த டாக்டர் ஓரு கிண்டல் பேர்வழி!
எப்படி சொல்றே?
பி,எம் ரிப்போர்ட் கொடுங்கன்னு கேட்டா மோடியோட நிகழ்ச்சி நிரல் முழுசையும் சொல்றாரே!

15.  அவசரத்துக்கு ஒரு ”கால்” டாக்ஸியிலே போனது தப்பா போயிருச்சு!
   ஏன்?
 கையில இருந்த முழுப்பணத்தையும் பிடுங்கிக்கிட்டானே!

16. அந்த சாமியார் போலின்னு எப்படி சொல்றே?
நிர்வாண நிலையை அடைய எல்லோரும் துணியை துறந்துட்டு வாங்கன்னு சொல்றாரே!


17. தலைவருக்கு மீட்டீங்ல நிறைய துண்டு விழுந்ததாமே!
  ஆமா! அதை பாதி விலைக்கு வித்து மீட்டிங் நடத்த ஆன செலவுல விழுந்த துண்டை அடைச்சிட்டாரு!

18.   மன்னரை சூது கவ்வி விட்டது!
          எப்படி?
    ஆன் லைனில் ரம்மி புகுந்து விளையாடுகின்றாரே!


19.  மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ட்ரெண்டியா வரதட்சணை கேக்கறாங்களா எப்படி?
          ஜியோ சிம்மோட ஒரு 4ஜி போன் வரதட்சணையா கேக்கறாங்களே!

20.  நம் படைகள் முன்னணியில் இருக்கின்றன என்று சொன்னீர்களே எவ்வளவு தூரத்தில்
                        எதிரிக்கு எட்டாத தூரத்தில்....!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2