ரிஜெக்ட் பீஸ்!
ரிஜெக்ட்
பீஸ்!
“பையன்
நல்ல சிவப்பா அழகா உயரமா நம்ம பொண்ணுக்கு ஏத்த மாதிரி இருக்கான்!”
“நல்ல
சம்பளமும் கூட! ஐ.டி பீல்டுல டீம் லீடரா இருக்கான்! ஆனா கொஞ்சம் கூட கர்வம் கிடையாது!
நல்ல சுபாவம்!”
”பெத்தவங்களையும்
குறை சொல்லக் கூடாது! பையனை அவன் போக்குல விடாம நல்ல படியா வளர்த்து இருக்காங்க! மேலும்
வரதட்சணை கூட அதிகம் எதிர்பார்க்கலை!”
”பையன்
அப்பா அம்மாவோட பேச்சை தட்ட மாட்டானாம்! பாரின் வாய்ப்பு வந்தப்ப கூட அவங்க அப்பா உன்னை
விட்டு பிரிஞ்சு இருக்க முடியாது! அவ்வளவு தூரம் போகவேண்டாம்னு சொன்னதும், சரின்னுட்டாராம்
மாப்பிள்ளை!”
”அது
மட்டும் இல்லே! யார் சொன்னாலும் கேட்டு நடக்கிற குணம் அனுசரிச்சு போகற மனுஷன். அவர்
ஃப்ரெண்ட் சொல்லித்தான் இந்த கம்பெனிக்கு இண்டர்வியுவிற்கே வந்தாராம்.”
இதை விட நிறைய கம்பெனிகள்ல இருந்து அவருக்கு அழைப்பு
வந்தப்ப கூட ப்ரெண்ட் சொன்னாருன்னு இந்த கம்பெனியில ஜாய்ன் பண்ணி இருக்காரு!
”நம்ம
பொண்ணை அவங்க அக்காவுக்கு பிடிச்சு போயிருச்சு! அவங்கதான் மாப்பிள்ளை கிட்ட நீ இந்த
பொண்ணை கட்டிக்கிட்டா நல்லா இருக்கும் ஜோடிப்பொருத்தம் சூப்பர்னு சொல்லி சம்மதிக்க
வச்சிருக்காங்க!”
தாயும் தந்தையும் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த
ரித்விகா “அப்பா இந்த மாப்பிள்ளை எனக்கு வேண்டாம்பா!”
என்றாள்.
இருவரும் அதிர்ந்து ஏம்மா! பையனுக்கு என்ன குறைச்சல்?
சம்பாத்தியம் இல்லையா அழகில்லையா?” என்று கேட்க
“
சொந்தமா முடிவு எடுக்கிற தைரியம் இல்லையேப்பா! அப்பா அம்மாவுக்காக பாரின் வாய்ப்பை
விட்டிருக்கார்! ப்ரெண்ட் சொன்னதுக்காக இந்த கம்பெனியிலே வேலை செய்யறார் அவங்க அக்கா
சொன்னதுக்கா என்னை கல்யாணம் பண்ணிக்க ஒப்புக்கிறார் நாளைக்கு அவங்க வீட்டுல யாராவது
சொன்னா என்னை சந்தேகம் படவும் செய்வார் பிரியவும் செய்வார் அதனால இந்த மாப்பிள்ளை வேண்டாம்பா!
என்றாள் ரித்விகா.
மகள்
சுயமாய் சிந்தித்து எடுத்த முடிவு சிறப்பே என்று இந்த மாப்பிள்ளையும் ரிஜெக்ட் பீஸ்
தான் என்று ஜாதகத்தை தூக்கிப்போட்டனர் பெற்றோர்.
தங்கள்
வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
அருமை நண்பரே இப்படித்தான் பெண் சுயமாக முடிவு எடுக்க வேண்டும்.
ReplyDeleteநல்ல கதை. பாராட்டுகள் சுரேஷ்.
ReplyDeleteவழக்கம்போல தங்கள் பாணியில், அருமை.
ReplyDeleteஇயல்பாகக் கற்பனை வளம் அதிகம் இருக்கிறது. நல்ல கதை, நல்ல படிப்பினை! ஆனால் இரண்டு பக்கமும் இருக்கிறது. :)
ReplyDeleteஅந்தப் பெண்ணின் முடிவில் எனக்கு ஒப்புதல் இல்லை.
ReplyDeleteஆமாம், ஶ்ரீராம்,எனக்கும் ஒப்புதல் இல்லை. அதனால் தான் மறுபக்கத்தையும் பார்க்கச் சொன்னேன். :)
ReplyDelete