தளிர் சென்ரியூ கவிதைகள்!

தளிர் சென்ரியூ கவிதைகள்!


1.   கள்ள நோட்டிலும்
   கபடமின்றி சிரித்துக்கொண்டிருந்தார்
   காந்தி!

2.   வியர்வை சிந்தி உழைத்தனர் தொழிலாளிகள்
உயர்வை அறிவித்தனர் முதலாளிகள்!
விலை!

3.   சுடிதார் போட்ட அம்மாவிடம்
சேலைக்கட்டிக்கொண்டது
குழந்தை!

4.    குடிக்காமலேயே சாலையில்
  ஆட்டம் போட்டது!
குடித்தவன் ஓட்டிய வண்டி!


5.   விளைந்த நிலங்களில்
விதைக்கப்பட்டன கற்கள்!
வீட்டுமனை வியாபாரம்!

6.   கொடிகட்டி பறந்தது
குடி அழிந்து போனது!
டாஸ்மாக்!

7.   புதைத்தாலும்
உயிருடன் எழுந்தன
நெகிழிப் பைகள்!


8.   சாலைகள் வளர்கையில்
அழிந்து போயின
மரங்கள்!

9.   எட்டிபிடிக்காமலே
ஏமாறுகின்றான் ஏழை!
விலைவாசி!

10. தேக்கி வைக்கிறார்கள்
ஏங்கி போகிறார்கள் விவசாயிகள்!
காவிரி நீர்!


11.  நடைபாதைக் கடைகள்!
தடைபோட்டன நடையை!
வியாபாரம்!

12.  வெடிகுண்டு கலாசாரம்!
விழாவாக கொண்டாடினர்!
தீபாவளி!

13. வண்ண பூக்கள் சிதறின
வாரி எடுக்க முடியவில்லை!
மத்தாப்பூக்கள்!


14. சத்தம் போட்டு வேட்டு வைத்தது
சிவகாசி தொழிலாளர்களுக்கு
சீனப்பட்டாசுகள்!

15. கொளுத்தி மகிழ்கையில்
நிறைந்தது பட்டாசு தொழிலாளர்கள்
வாழ்க்கை!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!



Comments

  1. அத்தனையும் பல உண்மைகளை சொல்கிறது, அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2